தமிழுலகில் நன்கு அறிமுகமான பெயர் அகத்தியர். இவர் பொதிகையில் தவம் செய்ததால் “பொதிகைமுனி” என்றும், கும்பத்தில் பாய்ந்ததால் “கும்பமுனி” என்றும், அகத்தினுள்ளே ஈசனைக் கண்டதால் ‘அகத்தியர்” என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பற்றித் தமிழிலும், வடமொழியிலும் புராணக் கதைகள் பல உள்ளன. இவர் பேராற்றல் கொண்ட முனிவராகவும், இலக்கியம், இலக்கணம், இசை, கூத்து, மருத்துவம், சோதிடம் உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் கருதப்படுகின்றார். இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும், சோதிட சாத்திரங்களும் உள்ளன. இவர் முருகக் கடவுளின் ஆணைப்படி முத்தமிழுக்கு இலக்கணமாக இயற்றியது அகத்தியம் என்பர். இதனைப் பேரகத்தியம் என்றும் கூறுவர். இதில் 12000 சூத்திரங்கள் இருந்தன என்பர். சித்த மருத்துவ முறைகளை வழங்கிய முனிவர் என்றும் அகத்திய முனிவர் குறிப்பிடப்படுகிறார்
வடக்கே இமயமலையும் தெற்கே பொதிகை மலையும் இவருக்கு ஒன்றே. தமிழும், மருத்துவமும், ஜோதிடமும், இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின.பதினென் சித்தர்களில் மிக பிரபலமானவர் என்றால் அது அகத்தியர் தான். தெய்வங்களுடனும், மன்னர்களுடனும் தொடர்பு படுத்தி அறியப்படும் சித்தர் இவர். சித்த வைத்தியத்தின் பிதாமகர்களில் இவர் முதன்மையானவர்.
தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரான இவர், பழந்தமிழ் பாடல்களிலும் சரி,தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் சரி, இவர் பற்றிய பல குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றப்படும் அகத்தியர் குறித்து எண்ணற்ற செவிவழி கதைகளும் கூறப்படுகின்றன. இல்லறத்தில் துறவறத்தை கடைப்பிடித்தவர் அகத்தியர். இவர் எழுதிய சமரச ஞானம் என்ற நூலில் உடம்பில் உள்ள முக்கிய நரம்பு முடிச்சுக்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
அகத்தியரின் தோற்றம் :
இந்திரனின் சாபத்திற்கு ஆளாகிய ஊர்வசி பூலோகத்திற்கு வந்த சமயம் அவள் அழகில் மயங்கி மித்ரர் என்பவரும், வருணர் என்பவரும் காதல் வயப்பட்டனர். இதன் காரணமாக மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.
தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்து, சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றவர்.
கைலையில் நடந்த சிவபெருமான் – பார்வதி திருமணத்தின் போது, முப்பது முக்கோடி தேவர்கள், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிகள் என பலரும் வருகையில், பாரம் தாங்காமல் பூமி சாய்ந்து வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். அவ்வாறு செல்லும் பொழுது மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.
ராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர். சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து, அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார். தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார். அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் ஆட்டுக் கறியாக சமைத்து விருந்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார். புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார்.
எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர். சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
Agathiyar Siddhar (அகத்தியர் சித்தர்) is one of the most venerated and legendary figures in Tamil tradition, often regarded as the father of Siddha medicine and one of the greatest sages in Indian spirituality. His contributions to literature, medicine, and spirituality are monumental, making him a central figure in the Siddha tradition and beyond.
Key Aspects of Agathiyar Siddhar
Name Significance:
Agathiyar (அகத்தியர்) is derived from "Agastya," a name that carries significant weight in Indian mythology and spirituality. The name "Agathiyar" is associated with wisdom, spiritual insight, and the ability to harness and balance the forces of nature.
Mythological Significance:
Legendary Sage: Agathiyar is often depicted as one of the Saptarishis (seven great sages) and is credited with spreading Vedic knowledge to the southern parts of India. He is revered in both Hinduism and Tamil traditions as a great sage who played a crucial role in the spiritual and cultural development of the region.
Balancing the Earth: According to legend, when the southern part of India was sinking due to the imbalance caused by too many people gathering in the north, Lord Shiva sent Agathiyar to the south to restore balance. His presence is said to have stabilized the region.
Spiritual Teachings:
Profound Wisdom: Agathiyar is known for his deep spiritual teachings, which encompass the realization of the self, the understanding of the divine, and the harmonization of human life with the cosmos. His teachings often emphasize the importance of inner purity, devotion, and disciplined spiritual practice.
Yoga and Meditation: He is also credited with the development of various yogic practices and meditative techniques that are still followed in different spiritual traditions.
Contributions to Siddha Medicine:
Father of Siddha Medicine: Agathiyar is widely recognized as the father of Siddha medicine, a system of traditional medicine that combines the use of herbs, minerals, and alchemical processes to promote health and longevity. He is said to have authored numerous texts on medicinal plants, treatments, and the preparation of medicines.
Herbal Remedies and Alchemy: His contributions to herbal medicine are vast, including the classification of herbs, their medicinal properties, and their applications. He is also credited with pioneering work in alchemy, including the preparation of potent medicinal compounds.
Literary Works:
Vast Body of Work: Agathiyar is believed to have authored several ancient texts, covering a wide range of subjects including medicine, spirituality, astrology, and grammar. His contributions to Tamil literature, particularly the "Agathiyam," a treatise on Tamil grammar, are foundational.
Poetry and Hymns: He is also known for composing various hymns and poems that praise the divine and offer spiritual guidance. These works continue to be revered in Tamil spirituality and are often recited in temples and homes.
Legacy and Influence:
Veneration: Agathiyar is one of the most venerated figures in Tamil and Hindu traditions. Temples dedicated to him are found throughout South India, and his teachings continue to influence spiritual and medical practices.
Cultural Impact: His influence extends across various aspects of Tamil culture, including language, medicine, spirituality, and folklore. The principles and practices he established continue to shape the spiritual and cultural identity of Tamil Nadu and other regions.
Conclusion
Agathiyar Siddhar is a towering figure in the Siddha tradition, revered as a sage, healer, and spiritual teacher. His contributions to Siddha medicine, Tamil literature, and spirituality are unparalleled, and his legacy continues to inspire and guide countless followers. Agathiyar's teachings and practices reflect a profound understanding of both the material and spiritual dimensions of life, making him a central figure in the spiritual heritage of India.