இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


அயோத்தியா காண்டம்

Ayodhya Kandam is the second book of the Kamba Ramayanam. This section of the epic focuses on the events leading up to Rama's exile and the subsequent happenings in Ayodhya. It is one of the most emotional parts of the Ramayana, highlighting the themes of duty, sacrifice, and familial loyalty.


அயோத்தியா காண்டம்
கடவுள் வாழ்த்து

#1
வான்-நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப
கூனும் சிறிய கோ_தாயும் கொடுமை இழைப்ப கோல் துறந்து
கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்

மந்திரப் படலம்

#1
மண் உறு முரசு_இனம் மழையின் ஆர்ப்பு உற
பண் உறு படர் சின பரும யானையான்
கண் உறு கவரியின் கற்றை சுற்று உற
எண்ணுறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான்
#2
புக்க பின் நிருபரும் பொரு_இல் சுற்றமும்
பக்கமும் பெயர்க என பரிவின் நீக்கினான்
ஒக்க நின்று உலகு அளித்து யோகின் எய்திய
சக்கரத்தவன் என தமியன் ஆயினான்
#3
சந்திரற்கு உவமை-செய் தரள வெண்குடை
அந்தரத்து அளவும் நின்று அளிக்கும் ஆணையான்
இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன்
மந்திர கிழவரை வருக என்று ஏவினான்
#4
பூ வரு பொலன் கழல் பொரு_இல் மன்னவன்
காவலின் ஆணை-செய் கடவுள் ஆம் என
தேவரும் முனிவரும் உணரும் தேவர்கள்
மூவரின் நால்வர் ஆம் முனி வந்து எய்தினான்
#5
குலம் முதல் தொன்மையும் கலையின் குப்பையும்
பல முதல் கேள்வியும் பயனும் எய்தினார்
நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார்
சலம் முதல் அறுத்து அரும் தருமம் தாங்கினார்
#6
உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார்
மற்று அது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும்
பெற்றியர் பிறப்பின் மேன்மை பெரியவர் அரிய நூலும்
கற்றவர் மானம் நோக்கின் கவரி_மா அனைய நீரார்
#7
காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற
நூல் உற நோக்கி தெய்வம் நுனித்து அறம் குணித்த மேலோர்
சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்துகொண்டு
பால் வரும் உறுதி யாவும் தலைவற்கு பயக்கும் நீரார்
#8
தம் உயிர்க்கு இறுதி எண்ணார் தலை_மகன் வெகுண்ட போதும்
வெம்மையை தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர்
செம்மையின் திறம்பல் செல்லா தோற்றத்தார் தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார்
#9
நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு
எல்லை_இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்
ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின்
தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார்
#10
அறுபதினாயிரர் எனினும் ஆண்தகைக்கு
உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம்
பெறல்_அரும் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர்
மறி திரை கடல் என வந்து சுற்றினார்
#11
முறைமையின் எய்தினர் முந்தி அந்தம்_இல்
அறிவனை வணங்கி தம் அரசை கைதொழுது
இறையிடை வரன்முறை ஏறி ஏற்ற சொல்
துறை அறி பெருமையான் அருளும் சூடினார்
#12
அன்னவர் அருள் அமைந்து இருந்த ஆண்டையில்
மன்னனும் அவர் முகம் மரபின் நோக்கினான்
உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது
என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால்
#13
வெய்யவன் குல முதல் வேந்தர் மேலவர்
செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே
வையம் என் புயத்திடை நுங்கள் மாட்சியால்
ஐ_இரண்டு_ஆயிரத்து ஆறு தாங்கினேன்
#14
கன்னியர்க்கு அமைவரும் கற்பின் மா நிலம்
தன்னை இ தகையதாய் தருமம் கைதர
மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன்
#15
விரும்பிய மூப்பு எனும் வீடு கண்ட யான்
இரும் பியல் அனந்தனும் இசைந்த யானையும்
பெரும்_பெயர் கிரிகளும் பெயர தாங்கிய
அரும் பொறை இனி சிறிது ஆற்ற ஆற்றலேன்
#16
நம் குல குரவர்கள் நவையின் நீங்கினார்
தம் குல புதல்வரே தரணி தாங்க போய்
வெம் குல புலன் கெட வீடு நண்ணினார்
எங்கு உலப்பு உறுவர் என்று எண்ணி நோக்குகேன்
#17
வெள்ள நீர் உலகினில் விண்ணில் நாகரில்
தள்ள_அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான்
கள்ளரின் கரந்து உறை காமம் ஆதி ஆம்
உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ
#18
பஞ்சி மென் தளிர் அடி பாவை கோல்_கொள
வெம் சினத்து அவுணத்தேர் பத்தும் வென்றுளேற்கு
எஞ்சல்_இல் மனம் எனும் இழுதை ஏறிய
அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ
#19
ஒட்டிய பகைஞர் வந்து உருத்த போரிடை
பட்டவர் அல்லரேல் பரம ஞானம் போய்
தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டு என
விட்டவர் அல்லரேல் யாவர் வீடு உளார்
#20
இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்
மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டோ
துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின்
பிறப்பு எனும் பெரும் கடல் பிழைக்கலாகுமோ
#21
அரும் சிறப்பு அமைவரும் துறவும் அ வழி
தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய் வரும்
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இ
இரும் சிறை கடத்தலின் இனியது யாவதோ
#22
இனியது போலும் இ அரசை எண்ணுமோ
துனி வரு புலன் என தொடர்ந்து தோற்கலா
நனி வரும் பெரும் பகை நவையின் நீங்கி அ
தனி அரசாட்சியில் தாழும் உள்ளமே
#23
உம்மை யான் உடைமையின் உலகம் யாவையும்
செம்மையின் ஓம்பி நல் அறமும் செய்தனென்
இம்மையின் உதவி நல் இசை நடாய நீர்
அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டுமால்
#24
இழைத்த தொல் வினையையும் கடக்க எண்ணுதல்
தழைத்த பேர் அருள் உடை தவத்தின் ஆகுமேல்
குழைத்தது ஓர் அமுதினை கோடல் நீக்கி வேறு
அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ
#25
கச்சை அம் கட கரி கழுத்தின்-கண் உற
பிச்சமும் கவிகையும் பெய்யும் இன் நிழல்
நிச்சயம் அன்று எனின் நெடிது நாள் உண்ட
எச்சிலை நுகருவது இன்பம் ஆவதோ
#26
மைந்தரை இன்மையின் வரம்பு_இல் காலமும்
நொந்தனென் இராமன் என் நோவை நீக்குவான்
வந்தனன் இனியவன் வருந்த யான் பிழைத்து
உய்ந்தனென் போவது ஓர் உறுதி எண்ணினேன்
#27
இறந்திலன் செரு_களத்து இராமன் தாதைதான்
அறம் தலை நிரம்ப மூப்பு அடைந்த பின்னரும்
துறந்திலன் என்பது ஓர் சொல் உண்டான பின்
பிறந்திலன் என்பதில் பிறிது உண்டாகுமோ
#28
பெருமகன் என்-வயின் பிறக்க சீதை ஆம்
திருமகள் மணவினை தெரிய கண்ட யான்
அரு_மகன் நிறை குணத்து அவனி மாது எனும்
ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன்
#29
நிவப்பு உறு நிலன் எனும் நிரம்பு நங்கையும்
சிவப்பு உறு மலர் மிசை சிறந்த செல்வியும்
உவப்பு உறு கணவனை உயிரின் எய்திய
தவ பயன் தாழ்ப்பது தருமம் அன்று-அரோ
#30
ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி இ
பேதைமைத்து ஆய் வரும் பிறப்பை நீக்குறும்
மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்
யாது நும் கருத்து என இனைய கூறினான்
#31
திரண்ட தோளினன் இப்படி செப்பலும் சிந்தை
புரண்டு மீது இட பொங்கிய உவகையர் ஆங்கே
வெருண்டு மன்னவன் பிரிவு எனும் விதிர்ப்பு உறு நிலையால்
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார்
#32
அன்னர் ஆயினும் அரசனுக்கு அது அலது உறுதி
பின்னர் இல் என கருதியும் பெரு நில வரைப்பின்
மன்னும் மன் உயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை
என்ன உன்னியும் விதியது வலியினும் இசைந்தார்
#33
இருந்த மந்திர கிழவர்-தம் எண்ணமும் மகன்-பால்
பரிந்த சிந்தை அ மன்னவன் கருதிய பயனும்
பொருந்து மன் உயிர்க்கு உறுதியும் பொதுவுற நோக்கி
தெரிந்து நான்மறை திசைமுகன் திருமகன் செப்பும்
#34
நிருப நின் குல மன்னவர் நேமி பண்டு உருட்டி
பெருமை எய்தினர் யாவரே இராமனை பெற்றார்
கருமமும் இது கற்று உணர்ந்தோய்க்கு இனி கடவ
தருமமும் இது தக்கதே உரைத்தனை தகவோய்
#35
புண்ணியம் தொடர் வேள்விகள் யாவையும் புரிந்த
அண்ணலே இனி அரும் தவம் இயற்றவும் அடுக்கும்
வண்ண மேகலை நில_மகள் மற்று உனை பிரிந்து
கண் இழந்திலள் என செயும் நீ தந்த கழலோன்
#36
புறத்து நாம் ஒரு பொருள் இனி புகல்கின்றது எவனோ
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்
பிறத்தி யாவையும் காத்தவை பின் உற துடைக்கும்
திறத்து மூவரும் திருந்திட திருத்தும் அ திறலோன்
#37
பொன் உயிர்த்த பூ மடந்தையும் புவி எனும் திருவும்
இன் உயிர்_துணை இவன் என நினைக்கின்ற இராமன்
தன் உயிர்க்கு என்கை புல்லிது தன் பயந்தெடுத்த
உன் உயிர்க்கு என நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய்
#38
வாரம் என் இனி பகர்வது வைகலும் அனையான்
பேரினால் வரும் இடையூறு பெயர்கின்ற பயத்தால்
வீர நின் குல மைந்தனை வேதியர் முதலோர்
யாரும் யாம் செய்த நல் அற பயன் என இருப்பார்
#39
மண்ணினும் நல்லள் மலர்_மகள் கலை_மகள் கலை ஊர்
பெண்ணினும் நல்லள் பெரும் புகழ் சனகி ஆம் நல்லள்
கண்ணினும் நல்லன் கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார்
#40
மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார்
இனிய மன் உயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை
அனையது ஆதலின் அரச நிற்கு உறு பொருள் அறியின்
புனித மாதவம் அல்லது ஒன்று இல் என புகன்றான்
#41
மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனை
பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அ பெரு வில்
இற்ற அன்றினும் எறி மழுவாளவன் இழுக்கம்
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான்
#42
அனையது ஆகிய உவகையன் கண்கள் நீர் அரும்ப
முனிவன் மா மலர் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி
இனிய சொல்லினை எம்பெருமான் அருள் அன்றோ
தனியன் நானிலம் தாங்கியது அவற்கு இது தகாதோ
#43
எந்தை நீ உவந்து இதம் சொல எம் குலத்து அரசர்
அந்தம்_இல் அரும் பெரும் புகழ் அவனியில் நிறுவி
முந்து வேள்வியும் முடித்து தம் இரு வினை முடித்தார்
வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான்
#44
பழுது_இல் மாதவன் பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான்
முழுதும் எண்ணுறும் மந்திர கிழவர்-தம் முகத்தால்
எழுதி நீட்டிய இங்கிதம் இறை_மகற்கு ஏற்க
தொழுத கையினன் சுமந்திரன் முன் நின்று சொல்லும்
#45
உற தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தை
துறத்தி நீ எனும் சொல் சுடும் நின் குல தொல்லோர்
மறத்தல் செய்கிலா தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று
அறத்தின்-ஊங்கு இனி கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ
#46
புரசை மா கரி நிருபர்க்கும் புரத்து உறைவோர்க்கும்
உரை-செய் மந்திர கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம்
முரசம் ஆர்ப்ப நின் முதல் மணி புதல்வனை முறையால்
அரசன் ஆக்கி பின் அப்புறத்து அடுத்தது புரிவாய்
#47
என்ற வாசகம் சுமந்திரன் இயம்பலும் இறைவன்
நன்று சொல்லினை நம்பியை நளி முடி சூட்டி
நின்று நின்றது செய்வது விரைவினில் நீயே
சென்று கொண்டு அணை திருமகள் கொழுநனை என்றான்
#48
அலங்கல் மன்னனை அடிதொழுது அவன் மனம் அனையான்
விலங்கல் மாளிகை வீதியின் விரைவொடு சென்றான்
தலங்கள் யாவையும் பெற்றனன் தான் என தளிர்ப்பான்
பொலன் கொள் தேரொடும் இராகவன் திரு_மனை புக்கான்
#49
பெண்ணின் இன் அமுது அன்னவள் தன்னொடும் பிரியா
வண்ண வெம் சிலை குரிசிலும் மருங்கு இனி திருப்ப
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு_அரு நறவு என தன்
கண்ணும் உள்ளமும் வண்டு என களிப்பு உற கண்டான்
#50
கண்டு கைதொழுது ஐய இ கடலிடை கிழவோன்
உண்டு ஒர் காரியம் வருக என உரைத்தனன் எனலும்
புண்டரீக கண் புரவலன் பொருக்கென எழுந்து ஓர்
கொண்டல் போல் அவன் கொடி நெடும் தேர் மிசை கொண்டான்
#51
முறையின் மொய்ம் முகில் என முரசு ஆர்த்திட மடவார்
இறை கழன்ற சங்கு ஆர்ந்திட இமையவர் எங்கள்
குறை முடிந்தது என்று ஆர்த்திட குஞ்சியை சூழ்ந்த
நறை அலங்கல் வண்டு ஆர்த்திட தேர் மிசை நடந்தான்
#52
பணை நிரந்தன பாட்டு ஒலி நிரந்தன அனங்கன்
கணை நிரந்தன நாண் ஒலி கறங்கின நிறை பேர்
அணை நிரந்தன அறிவு எனும் பெரும் புனல் அனையார்
பிணை நிரந்து என பரந்தனர் நாணமும் பிரிந்தார்
#53
நீள் எழு தொடர் வாயிலில் குழையொடு நெகிழ்ந்த
ஆளகத்தினோடு அரமிய தலத்தினும் அலர்ந்த
வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க
சாளரத்தினும் பூத்தன தாமரை மலர்கள்
#54
மண்டலம் தரு மதி கெழு மழை முகில் அனைய
அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல்
தொண்டை வாய்ச்சியர் நிறையொடும் நாணொடும் தொடர்ந்த
கெண்டையும் உள கிளை பயில் வண்டொடும் கிடந்த
#55
சரிந்த பூ உள மழையொடு கலை உற தாழ்வ
பரிந்த பூ உள பனி கடை முத்து_இனம் படைப்ப
எரிந்த பூ உள இள முலை இழை இடை நுழைய
விரிந்த பூ உள மீன் உடை வான்-நின்றும் வீழ்வ
#56
வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம்
தள்ளுற சுமந்து எழுதரும் தமனிய கொம்பில்
புள்ளி நுண் பனி பொடிப்பன பொன்னிடை பொதிந்த
எள் உடை பொரி விரவின உள சில இளநீர்
#57
ஆயது அ வழி நிகழ்தர ஆடவர் எல்லாம்
தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப
தூய தம்பியும் தானும் அ சுமந்திரன் தேர் மேல்
போய் அகம் குளிர் புரவலன் இருந்துழி புக்கான்
#58
மாதவன் தனை வரன்முறை வணங்கி வாள் உழவன்
பாத பங்கயம் பணிந்தனன் பணிதலும் அனையான்
காதல் பொங்கிட கண் பனி உகுத்திட கனி வாய்
சீதை கொண்கனை திரு உறை மார்பகம் சேர்த்தான்
#59
நலம் கொள் மைந்தனை தழுவினன் என்பது என் நளி நீர்
நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்
விலங்கல் அன்ன திண் தோளையும் மெய் திரு இருக்கும்
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான்
#60
ஆண்டு தன் மருங்கு இரீஇ உவந்து அன்புற நோக்கி
பூண்ட போர் மழு உடையவன் பெரும் புகழ் குறுக
நீண்ட தோளினாய் நின் பயந்தெடுத்த யான் நின்னை
வேண்டி எய்திட விழைவது ஒன்று உளது என விளம்பும்
#61
ஐய சாலவும் அலசினென் அரும் பெரு மூப்பும்
மெய்யது ஆயது வியல் இட பெரும் பரம் விசித்த
தொய்யல் மா நில சுமை உறு சிறை துறந்து இனி யான்
உய்யல் ஆவது ஓர் நெறி புக உதவிட வேண்டும்
#62
உரிமை மைந்தரை பெறுகின்றது உறு துயர் நீங்கி
இருமையும் பெறற்கு என்பது பெரியவர் இயற்கை
தருமம் அன்ன நின் தந்த யான் தளர்வது தகவோ
கருமம் என்-வயின் செய்யின் என் கட்டுரை கோடி
#63
மைந்த நம் குல மரபினில் வந்து அருள் வேந்தர்
தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க
ஐந்தொடு ஆகிய மு பகை மருங்கு அற அகற்றி
உய்ந்து போயினர் ஊழி-நின்று எண்ணினும் உலவார்
#64
முன்னை ஊழ்வினை பயத்தினும் முற்றிய வேள்வி
பின்னை எய்திய நலத்தினும் அரிதினின் பெற்றேன்
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால்
நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ
#65
ஒருத்தல் எட்டொடு திரு தலை பன்மை சால் உரக
எருத்தம் மேல் படி புயம் அற சுமந்து இடர் உழக்கும்
வருத்தம் நீங்கி அ வரம்பு அறு திருவினை மருவும்
அருத்தி உண்டு எனக்கு ஐய ஈது அருளிட வேண்டும்
#66
ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைதி இன்று ஆக
நாளும் நம் குல நாயகன் நறை விரி கமல
தாளின் நல்கிய கங்கையை தந்து தந்தையரை
மீள்வு_இலா_உலகு ஏற்றினான் ஒரு மகன் மேனாள்
#67
மன்னர் வானவர் அல்லர் மேல் வானவர்க்கு அரசாம்
பொன்னின் வார் கழல் புரந்தரன் போலியர் அல்லர்
பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர்
சொல் மறா மக பெற்றவரே துயர் துறந்தார்
#68
அனையது ஆதலின் அரும் துயர் பெரும் பரம் அரசன்
வினையின் என்-வயின் வைத்தனன் என கொளல் வேண்டா
புனையும் மா முடி புனைந்து இந்த நல் அறம் புரக்க
நினையல் வேண்டும் யான் நின்-வயின் பெறுவது ஈது என்றான்
#69
தாதை அ பரிசு உரை-செய தாமரை_கண்ணன்
காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும்
யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ
நீதி எற்கு என நினைந்தும் அ பணி தலைநின்றான்
#70
குருசில் சிந்தையை மனக்கொண்ட கொற்ற வெண்குடையான்
தருதி இ வரம் என சொலி உயிர் உற தழுவி
சுருதி அன்ன தன் மந்திர சுற்றமும் சுற்ற
பொரு_இல் மேருவும் பொரு_அரும் கோயில் போய் புக்கான்
#71
நிவந்த அந்தணர் நெடும் தகை மன்னவர் நகரத்து
உவந்த மைந்தர்கள் மடந்தையர் உழைஉழை தொடர
சுமந்திரன் தடம் தேர் மிசை சுந்தர திரள் தோள்
அமைந்த மைந்தனும் தன் நெடும் கோயில் சென்று அடைந்தான்
#72
வென்றி வேந்தரை வருக என உவணம் வீற்றிருந்த
பொன் திணிந்த தோட்டு அரும்_பெறல் இலச்சினை போக்கி
நன்று சித்திர நளிர் முடி கவித்தற்கு நல்லோய்
சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க என செப்ப
#73
உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்தனன் விரைந்து ஓர்
பொரு_இல் தேர் மிசை அந்தணர் குழாத்தொடும் போக
நிருபர் கேண்-மின்கள் இராமற்கு நெறி முறைமையினால்
திருவும் பூமியும் சிந்தையில் சிறந்தன என்றான்
#74
இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும்
முறையில் நின்றிலர் முந்துறு களியிடை மூழ்கி
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர
உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார்
#75
ஒத்த சிந்தையர் உவகையின் ஒருவரின் ஒருவர்
தத்தமக்கு உற்ற அரசு என தழைக்கின்ற மனத்தர்
முத்த வெண்குடை மன்னனை முறைமுறை தொழுதார்
அத்த நன்று என அன்பினோடு அறிவிப்பது ஆனார்
#76
மூ_எழு முறைமை எம் குலங்கள் முற்றுற
பூ எழு மழுவினால் பொருது போக்கிய
சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு
ஆவ இ உலகம் இஃது அறன் என்றார்-அரோ
#77
வேறு இலா மன்னரும் விரும்பி இன்னது
கூறினார் அது மனம் கொண்ட கொற்றவன்
ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான்
மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான்
#78
மகன்-வயின் அன்பினால் மயங்கி யான் இது
புகல நீர் புகன்ற இ பொம்மல் வாசகம்
உகவையின் மொழிந்ததோ உள்ளம் நோக்கியோ
தகவு என நினைந்ததோ தன்மை யாது என்றான்
#79
இவ்வகை உரை-செய இருந்த வேந்து_அவை
செவ்வியோய் நின் திருமகற்கு தேயத்தோர்
அவ்வவர்க்கு அவ்வவர்க்கு அமைந்தவாறு உறும்
எவ்வம்_இல் அன்பினை இனிது கேள் எனா
#80
தானமும் தருமமும் தகவும் தன்மை சேர்
ஞானமும் நல்லவர் பேணும் நன்மையும்
மானவ எவையும் நின் மகற்கு வைகுமால்
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே
#81
ஊருணி நிறையவும் உதவும் மாடு உயர்
பார் கெழு பயன் மரம் பழுத்து அற்று ஆகவும்
கார் மழை பொழியவும் கழனி பாய் நதி
வார் புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார்
#82
பனை அவாம் நெடும் கர பரும யானையாய்
நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன் உயிர்க்கு
எனையவாறு அன்பினன் இராமன் ஈண்டு அவற்கு
அனையவாறு அன்பின அவையும் என்றனர்
#83
மொழிந்தது கேட்டலும் மொய்த்து நெஞ்சினை
பொழிந்த பேர் உவகையன் பொங்கு காதலன்
கழிந்தது என் இடர் என களிக்கும் சிந்தையன்
வழிந்த கண்ணீரினன் மன்னன் கூறுவான்
#84
செம்மையின் தருமத்தின் செயலின் தீங்கின்-பால்
வெம்மையின் ஒழுக்கத்தின் மேன்மை மேவினீர்
என் மகன் என்பது என் நெறியின் ஈங்கு இவன்
நும் மகன் கையடை நோக்கும் ஈங்கு என்றான்
#85
அரசவை விடுத்த பின் ஆணை மன்னவன்
புரை தபு நாளொடு பொழுது நோக்குவான்
உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு
வரை பொரு மண்டபம் மருங்கு போயினான்

2 மந்தரை சூழ்ச்சிப் படலம்

#1
ஆண்டை அ நிலை ஆக அறிந்தவர்
பூண்ட காதலர் பூட்டு அவிழ் கொங்கையர்
நீண்ட கூந்தலர் நீள் கலை தாங்கலர்
ஈண்ட ஓடினர் இட்டு இடை உற்றிலர்
#2
ஆடுகின்றனர் பண் அடைவு இன்றியே
பாடுகின்றனர் பார்த்தவர்க்கே கரம்
சூடுகின்றனர் சொல்லுவது ஓர்கிலர்
மாடு சென்றனர் மங்கையர் நால்வரே
#3
கண்ட மாதரை காதலின் நோக்கினாள்
கொண்டல்_வண்ணனை நல்கிய கோசலை
உண்டு பேர் உவகை பொருள் அன்னது
தொண்டை வாயினிர் சொல்லு-மின் ஈண்டு என்றாள்
#4
மன் நெடும் கழல் வந்து வணங்கிட
பல் நெடும் பகல் பார் அளிப்பாய் என
நின் நெடும் புதல்வன்-தனை நேமியான்
தொல் நெடும் முடி சூட்டுகின்றான் என்றார்
#5
சிறக்கும் செல்வம் மகற்கு என சிந்தையில்
பிறக்கும் பேர் உவகை கடல் பெட்பு அற
வறக்கும் மா வடவை கனல் ஆனதால்
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே
#6
அன்னவளாயும் அரும்_பெறல் ஆரமும்
நல் நிதி குவையும் நனி நல்கி தன்
துன்னு காதல் சுமித்திரையோடும் போய்
மின்னு நேமியன் மேவு இடம் மேவினாள்
#7
மேவி மென் மலராள் நில_மாது எனும்
தேவிமாரொடும் தேவர்கள் யாவர்க்கும்
ஆவியும் அறிவும் முதல் ஆயவன்
வாவி மா மலர் பாதம் வணங்கினாள்
#8
என்-வயின் தரும் மைந்தற்கு இனி அருள்
உன்-வயத்தது என்றாள் உலகு யாவையும்
மன் வயிற்றின் அடக்கிய மாயனை
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள்
#9
என்று இறைஞ்சி அ இந்திரை கேள்வனுக்கு
ஒன்றும் நான்மறை ஓதிய பூசனை
நன்று இழைத்து அவண் நல்ல தவர்க்கு எலாம்
கன்று உடை பசுவின் கடல் நல்கினாள்
#10
பொருந்து நாள் நாளை நின் புதல்வற்கு என்றனர்
திருந்தினார் அன்ன சொல் கேட்ட செய் கழல்
பெரும் திண் மால் யானையான் பிழைப்பு இல் செய் தவம்
வருந்தினான் வருக என வசிட்டன் எய்தினான்
#11
நல் இயல் மங்கல நாளும் நாளை அ
வில் இயல் தோள் அவற்கு ஈண்டு வேண்டுவ
ஒல்லையின் இயற்றி நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது என தொழுது சொல்லினான்
#12
முனிவனும் உவகையும் தானும் முந்துவான்
மனு குல நாயகன் வாயில் முன்னினான்
அனையவன் வரவு கேட்டு அலங்கல் வீரனும்
இனிது எதிர்கொண்டு தன் இருக்கை எய்தினான்
#13
ஒல்கல்_இல் தவத்து உத்தமன் ஓது நூல்
மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்
புல்கு காதல் புரவலன் போர் வலாய்
நல்கும் நானிலம் நாளை நினக்கு என்றான்
#14
என்று பின்னும் இராமனை நோக்கி நான்
ஒன்று கூறுவது உண்டு உறுதி பொருள்
நன்று கேட்டு கடைப்பிடி நன்கு என
துன்று தாரவன் சொல்லுதல் மேயினான்
#15
கரிய மாலினும் கண்_நுதலானினும்
உரிய தாமரை மேல் உறைவானினும்
விரியும் பூதம் ஒர் ஐந்தினும் மெய்யினும்
பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால்
#16
அந்தணாளர் முனியவும் ஆங்கு அவர்
சிந்தையால் அருள் செய்யவும் தேவருள்
நொந்து உளாரையும் நோவு அகன்றாரையும்
மைந்த எண்ண வரம்பும் உண்டாம்-கொலோ
#17
அனையர் ஆதலின் ஐய அ வெய்ய தீ
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை
புனையும் சென்னியையாய் புகழ்ந்து ஏத்துதி
இனிய கூறி நின்று ஏயின செய்தியால்
#18
ஆவதற்கும் அழிவதற்கும் அவர்
ஏவ நிற்கும் விதியும் என்றால் இனி
ஆவது எ பொருள் இம்மையும் அம்மையும்
தேவரை பரவும் துணை சீர்த்ததே
#19
உருளும் நேமியும் ஒண் கவர் எஃகமும்
மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும்
தெருளும் நல் அறமும் மன செம்மையும்
அருளும் நீத்த பின் ஆவது உண்டாகுமோ
#20
சூது முந்துற சொல்லிய மா துயர்
நீதி மைந்த நினைக்கிலை ஆயினும்
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு
ஓதும் மூலம் அவை என ஓர்தியே
#21
யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது தன்
தார் ஒடுங்குல் செல்லாது அது தந்த பின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ
#22
கோளும் ஐம்பொறியும் குறைய பொருள்
நாளும் கண்டு நடுவுறும் நோன்மையின்
ஆளும் அ அரசே அரசு அன்னது
வாளின் மேல் வரு மா தவம் மைந்தனே
#23
உமைக்கு நாதற்கும் ஓங்கு புள் ஊர்திக்கும்
இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும்
சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும்
அமைச்சர் சொல்_வழி ஆற்றுதல் ஆற்றலே
#24
என்பு தோல் உடையார்க்கும் இலார்க்கும் தம்
வன் பகை புலன் மாசு அற மாய்ப்பது என்
முன்பு பின்பு இன்றி மூ_உலகத்தினும்
அன்பின் அல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ
#25
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர்
உய்ய தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு
ஐயம் இன்றி அறம் கடவாது அருள்
மெய்யில் நின்ற பின் வேள்வியும் வேண்டுமோ
#26
இனிய சொல்லினன் ஈகையன் எண்ணினன்
வினையன் தூயன் விழுமியன் வென்றியன்
நினையும் நீதி நெறி கடவான் எனில்
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்-கொலோ
#27
சீலம் அல்லன நீக்கி செம்பொன் துலை
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய
ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ
#28
ஓர்வு_இல் நல்வினை ஊற்றத்தினார் உரை
பேர்வு_இல் தொல் விதி பெற்று உளது என்றரோ
தீர்வு_இல் அன்பு செலுத்தலில் செவ்வியோர்
ஆர்வம் மன்னவர்க்கு ஆயுதம் ஆவதே
#29
தூமகேது புவிக்கு என தோன்றிய
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை எனின் கடும் கேடு எனும்
நாமம் இல்லை நரகமும் இல்லையே
#30
ஏனை நீதி இனையவும் வையக
போனகற்கு விளம்பி புலன் கொளீஇ
ஆனவன்னொடும் ஆயிரம் மௌலியான்
தானம் நண்ணினன் தத்துவம் நண்ணினான்
#31
நண்ணி நாகணை வள்ளலை நான்மறை
புண்ணிய புனல்_ஆட்டி புலமையோர்
எண்ணும் நல்வினை முற்றுவித்து ஏற்றினான்
வெண் நிறத்த தருப்பை விரித்து-அரோ
#32
ஏற்றிட ஆண்தகை இனிது இருந்துழி
நூல் தட மார்பனும் நொய்தின் எய்த போய்
ஆற்றல்-சால் அரசனுக்கு அறிவித்தான் அவன்
சாற்றுக நகர் அணி சமைக்க என்றனன்
#33
ஏவின வள்ளுவர் இராமன் நாளையே
பூ_மகள் கொழுநனாய் புனையும் மௌலி இ
கோ நகர் அணிக என கொட்டும் பேர்_இயம்
தேவரும் களி கொள திரிந்து சாற்றினார்
#34
கவி அமை கீர்த்தி அ காளை நாளையே
புவி அமை மணி முடி புனையும் என்ற சொல்
செவி அமை நுகர்ச்சியது எனினும் தேவர்-தம்
அவி அமுது ஆனது அ நகர் உளார்க்கு எலாம்
#35
திணி சுடர் இரவியை திருத்துமாறு போல்
பணியிடை பள்ளியான் பரந்த மார்பிடை
மணியினை வேகடம் வகுக்குமாறு போல்
அணி நகர் அணிந்தனர் அருத்தி மாக்களே
#36
வெள்ளிய கரியன செய்ய வேறு உள
கொள்ளை வான் கொடி நிரை குழாங்கள் தோன்றுவ
கள் அவிழ் கோதையான் செல்வம் காணிய
புள் எலாம் திருநகர் புகுந்த போன்றவே
#37
மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள்
அங்கு அவர் கழுத்து என கமுகம் ஆர்ந்தன
தங்கு ஒளி முறுவலின் தாமம் நான்றன
கொங்கையின் நிரைந்தன கனக கும்பமே
#38
முதிர் ஒளி உயிர்த்தன முடுகி காலையில்
கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என
மதி தொட நிவந்து உயர் மகர தோரணம்
புதியன அலர்ந்தன புதவ ராசியே
#39
துனி அறு செம்மணி தூணின் நீல் நிறம்
வனிதை_ஓர்_கூறினன் வடிவு காட்டின
புனை துகில் உறை-தொறும் பொலிந்து தோன்றின
பனி பொதி கதிர் என பவள தூண்களே
#40
முத்தினின் முழுநிலவு எறிப்ப மொய்ம் மணி
பத்தியின் இள வெயில் பரப்ப நீலத்தின்
தொத்து இனம் இருள் வர தூண்ட சோதிட
வித்தகர் விரித்த நாள் ஒத்த வீதியே
#41
ஆடல் மான் தேர் குழாம் அவனி காணிய
வீடு எனும் உலகின் வீழ் விமானம் போன்றன
ஓடை மா கட களிறு உதய மால் வரை
தேட_அரும் கதிரொடும் திரிவ போன்றவே
#42
வளம் கெழு திருநகர் வைகும் வைகலும்
பளிங்கு உடை நெடும் சுவர் அடுத்த பத்தியில்
கிளர்ந்து எரி சுடர் மணி இருளை கீறலால்
வளர்ந்தில பிறந்தில செக்கர் வானமே
#43
பூ_மழை புனல் மழை புது மென் சுண்ணத்தின்
தூ மழை தரளத்தின் தோம் இல் வெண் மழை
தாம் இழை நெரிதலின் தகர்ந்த பொன் மழை
மா மழை நிகர்த்தன மாட வீதியே
#44
காரொடு தொடர் மத களிறு சென்றன
வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என
தாரொடு நடந்தன பிடிகள் தாழ் கலை
தேரொடு நடக்கும் அ தெரிவைமாரினே
#45
ஏய்ந்து எழு செல்வமும் அழகும் இன்பமும்
தேய்ந்தில அனையது தெரிந்திலாமையால்
ஆய்ந்தனர் பெருகவும் அமரர் இம்பரில்
போந்தவர் போந்திலம் என்னும் புந்தியால்
#46
அ நகர் அணிவுறும் அமலை வானவர்
பொன்_நகர் இயல்பு என பொலியும் ஏல்வையில்
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல்
துன்ன_அரும் கொடு மன கூனி தோன்றினாள்
#47
தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினாள்
ஊன்றிய வெகுளியாள் உளைக்கும் உள்ளத்தாள்
கான்று எரி நயனத்தாள் கதிக்கும் சொல்லினாள்
மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள்
#48
தொண்டை வாய் கேகயன் தோகை கோயில் மேல்
மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள்
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனை தன் உள்ளத்து உள்ளுவாள்
#49
நால் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர்
பாற்கடல் படு திரை பவள வல்லியே
போல் கடைக்கண் அளி பொழிய பொங்கு அணை
மேல் கிடந்தாள் தனை விரைவின் எய்தினாள்
#50
எய்தி அ கேகயன் மடந்தை ஏடு அவிழ்
நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால்
செய்த பேர் உவமை-சால் செம்பொன் சீறடி
கைகளின் தீண்டினள் கால கோள்_அனாள்
#51
தீண்டலும் உணர்ந்த அ தெய்வ கற்பினாள்
நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள்
மூண்டு எழு பெரும் பழி முடிக்கும் வெவ் வினை
தூண்டிட கட்டுரை சொல்லல் மேயினாள்
#52
அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும்
குணம் கெடாது ஒளி விரி குளிர் வெண் திங்கள் போல்
பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும்
உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள்
#53
வெவ் விடம் அனையவள் விளம்ப வேல்_கணாள்
தெவ் அடு சிலை கை என் சிறுவர் செவ்வியர்
அவ்வவர் துறை-தொறும் அறம் திறம்பவர்
எ இடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா
#54
பராவ_அரும் புதல்வரை பயக்க யாவரும்
உராவ_அரு துயரை விட்டு உறுதி காண்பரால்
விராவ_அரும் புவிக்கு எலாம் வேதமே அன
இராமனை பயத்த எற்கு இடர் உண்டோ என்றாள்
#55
ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும்
சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள்
வீழ்ந்தது நின் நலம் திருவும் வீழ்ந்தது
வாழ்ந்தனள் கோசலை மதியினால் என்றாள்
#56
அன்ன சொல் அனையவள் உரைப்ப ஆய்_இழை
மன்னவர்_மன்னனேல் கணவன் மைந்தனேல்
பன்ன_அரும் பெரும் புகழ் பரதன் பார்-தனில்
என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள்
#57
ஆடவர் நகை உற ஆண்மை மாசு உற
தாடகை எனும் பெயர் தையலாள் பட
கோடிய வரி சிலை இராமன் கோ_முடி
சூடுவன் நாளை வாழ்வு இது என சொல்லினாள்
#58
மாற்றம் அஃது உரை-செய மங்கை உள்ளமும்
ஆற்றல்-சால் கோசலை அறிவும் ஒத்தவால்
வேற்றுமை உற்றிலள் வீரன் தாதை புக்கு
ஏற்று அவள் இருதயத்து இருக்கவே-கொலாம்
#59
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ
தேய்வு_இலா முக மதி விளங்கி தேசுற
தூயவள் உவகை போய் மிக சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள்
#60
தெழித்தனள் உரப்பினள் சிறு கண் தீ உக
விழித்தனள் வைதனள் வெய்து_உயிர்த்தனள்
அழித்தனள் அழுதனள் அம் பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை அ கொடிய கூனியே
#61
வேதனை கூனி பின் வெகுண்டு நோக்கியே
பேதை நீ பித்தி நின் பிறந்த சேயொடும்
மா துயர் படுக நான் நெடிது உன் மாற்றவள்
தாதியர்க்கு ஆட்செய தரிக்கிலேன் என்றாள்
#62
சிவந்த வாய் சீதையும் கரிய செம்மலும்
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப நின் மகன்
அவந்தனாய் வெறு நிலத்து இருக்கல் ஆன போது
உவந்தவாறு என் இதற்கு உறுதி யாது என்றாள்
#63
மறந்திலள் கோசலை உறுதி மைந்தனும்
சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான்
இறந்திலன் இருந்தனன் என் செய்து ஆற்றுவான்
பிறந்திலன் பரதன் நீ பெற்றதால் என்றாள்
#64
சரதம் இ புவியெலாம் தம்பியோடும் இ
வரதனே காக்குமேல் வரம்பு_இல் காலமும்
பரதனும் இளவலும் பதியின் நீங்கி போய்
விரத மா தவம் செய விடுதல் நன்று என்றாள்
#65
பண் உறு கட கரி பரதன் பார் மகள்
கண் உறு கவினராய் இனிது காத்த அம்
மண் உறு முரசு உடை மன்னர் மாலையில்
எண்ணுற பிறந்திலன் இறத்தல் நன்று என்றாள்
#66
பாக்கியம் புரிந்திலா பரதன்-தன்னை பண்டு
ஆக்கிய பொலம் கழல் அரசன் ஆணையால்
தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடை
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்
#67
மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள்
அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால்
தந்தையும் கொடியன் நல் தாயும் தீயளால்
எந்தையே பரதனே என் செய்வாய் என்றாள்
#68
அரசர் இல் பிறந்து பின் அரசர் இல் வளர்ந்து
அரசர் இல் புகுந்து பேர் அரசி ஆன நீ
கரை செயற்கு அரும்_துயர் கடலில் வீழ்கின்றாய்
உரை-செய கேட்கிலை உணர்தியோ என்றாள்
#69
கல்வியும் இளமையும் கணக்கு_இல் ஆற்றலும்
வில் வினை உரிமையும் அழகும் வீரமும்
எல்லை_இல் குணங்களும் பரதற்கு எய்திய
புல்லிடை உகுத்த அமுது ஏயும் போல் என்றாள்
#70
வாய் கயப்பு உற மந்தரை வழங்கிய வெம் சொல்
காய் கனல்_தலை நெய் சொரிந்து என கதம் கனற்ற
கேகயற்கு இறை திருமகள் கிளர் இள வரிகள்
தோய் கயல் கண்கள் சிவப்பு உற நோக்கினள் சொல்லும்
#71
வெயில் முறை குல கதிரவன் முதலிய மேலோர்
உயிர் முதல் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர்
மயில் முறை குலத்து உரிமையை மனு முதல் மரபை
செயிர் உற புலை சிந்தையால் என் சொனாய் தீயோய்
#72
எனக்கு நல்லையும் அல்லை நீ என் மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை அ தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதி_இலா மனத்தோய்
#73
பிறந்து இறந்து போய் பெறுவதும் இழப்பதும் புகழே
நிறம் திறம்பினும் நியாயமே திறம்பினும் நெறியின்
திறம் திறம்பினும் செய்தவம் திறம்பினும் செயிர் தீர்
மறம் திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ
#74
போதி என் எதிர்நின்று நின் புன் பொறி நாவை
சேதியாது இது பொறுத்தனன் புறம் சிலர் அறியின்
நீதி அல்லவும் நெறி முறை அல்லவும் நினைந்தாய்
ஆதி ஆதலின் அறிவு_இலி அடங்குதி என்றாள்
#75
அஞ்சி மந்தரை அகன்றிலள் அ மொழி கேட்டும்
நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்து என்ன
தஞ்சமே உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன்
வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை-வழங்கும்
#76
மூத்தவற்கு உரித்து அரசு எனின் முறைமையின் உலகம்
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன்
ஏத்து நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால்
மீ தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ
#77
அறன் நிரம்பிய அருள் உடை அரும் தவர்க்கேனும்
பெறல்_அரும் திரு பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம்
மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால்
இறல் உறும்படி இயற்றுவர் இடையறா இன்னல்
#78
புரியும் தன் மகன் அரசு எனில் பூதலம் எல்லாம்
எரியும் சிந்தனை கோசலைக்கு உடைமையாம் என்றால்
பரியும் நின் குல புதல்வற்கும் நினக்கும் இ பார் மேல்
உரியது என் அவள் உதவிய ஒரு பொருள் அல்லால்
#79
தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தர துயரால்
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு இரு நிதி அவளை
வேண்டி ஈதியோ வெள்குதியோ விம்மல் நோயால்
மாண்டு போதியோ மறுத்தியோ எங்ஙனம் வாழ்தி
#80
சிந்தை என் செய திகைத்தனை இனி சில நாளில்
தம்தம் இன்மையும் எளிமையும் நிற்கொண்டு தவிர்க்க
உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர்
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ மதியாய்
#81
காதல் உன் பெரும் கணவனை அஞ்சி அ கனி வாய்
சீதை தந்தை உன் தாதையை தெறுகிலன் இராமன்
மாதுலன் அவன் நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ
பேதை உன் துணை யார் உளர் பழிபட பிறந்தார்
#82
மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள மறத்தார்
செற்ற போது இவர் சென்று உதவார் எனில் செருவில்
கொற்றம் என்பது ஒன்று எ வழி உண்டு அது கூறாய்
சுற்றமும் கெட சுடு துயர் கடல் விழ துணிந்தாய்
#83
கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும் புதல்வனை கிளர் நீர்
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே
கொடுத்த பேர் அரசு அவன் குல கோ_மைந்தர்-தமக்கும்
அடுத்த தம்பிக்குமாம் பிறர்க்கும் ஆகுமோ என்றாள்
#84
தீய மந்தரை இ உரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர்
மாயையும் அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்
ஆய அந்தணர் இயற்றிய அரும் தவத்தாலும்
#85
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல் அருள் துறந்தனள் தூ மொழி மட_மான்
இரக்கம் இன்மை அன்றோ இன்று இ உலகங்கள் இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினை பருகுகின்றதுவே
#86
அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம்
வினை நிரம்பிய கூனியை விரும்பினள் நோக்கி
எனை உவந்தனை இனியை என் மகனுக்கும் அனையான்
புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி என்றாள்
#87
மாழை ஒண் கணி உரை-செய கேட்ட மந்தரை என்
தோழி வல்லள் என் துணை வல்லள் என்று அடிதொழுதாள்
தாழும் என் இனி என் உரை தலைநிற்பின் உலகம்
ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள்
#88
நாடி ஒன்று உனக்கு உரை-செய்வென் நளிர் மணி நகையாய்
தோடு இவர்ந்த தார் சம்பரன் தொலைவுற்ற வேலை
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும்
கோடி என்றனள் உள்ளமும் கோடிய கொடியாள்
#89
இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன்
பெரு வனத்திடை ஏழ்_இரு பருவங்கள் பெயர்ந்து
திரிதர செய்தி ஒன்றினால் செழு நிலம் எல்லாம்
ஒருவழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள்
#90
உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உற தழுவி
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய்
தரைக்கு நாயகன் தாய் இனி நீ என தணியா
#91
நன்று சொல்லினை நம்பியை நளிர் முடி சூட்டல்
துன்று கானத்தில் இராமனை துரத்தல் இ இரண்டும்
அன்றது ஆம் எனில் அரசன் முன் ஆருயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவென் யான் போதி நீ என்றாள்

3 கைகேயி சூழ்ச்சிவினைப் படலம்

#1
கூனி போன பின் குல மலர் குப்பை-நின்று இழிந்தாள்
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல்
தேன் அவாவுறு வண்டு_இனம் அலமர சிதைத்தாள்
#2
விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்ன
கிளை கொள் மேகலை சிந்தினள் கிண்கிணியோடும்
வளை துறந்தனள் மதியினில் மறு துடைப்பாள் போல்
அளக வாள் நுதல் அரும்_பெறல் திலகமும் அழித்தாள்
#3
தா இல் மா மணி கலம் மற்றும் தனித்தனி சிதறி
நாவி ஓதியை நானிலம் தைவர பரப்பி
காவி உண்ட கண் அஞ்சனம் கான்றிட கலுழா
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு என புவி மிசை புரண்டாள்
#4
நவ்வி வீழ்ந்து என நாடக மயில் துயின்று என்ன
கவ்வை கூர்தர சனகி ஆம் கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை
#5
நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை
யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில்
வாழிய என்று அயில் மன்னர் துன்ன வந்தான்
ஆழி நெடும் கை மடங்கல் ஆளி அன்னான்
#6
வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப வந்து ஆங்கு
ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி
பாயல் துறந்த படை தடம் கண் மென் தோள்
ஆய்_இழை-தன்னை அடைந்த ஆழி மன்னன்
#7
அடைந்து அவண் நோக்கி அரந்தை என்-கொல் வந்து
தொடர்ந்து என துயர்கொண்டு சோரும் நெஞ்சன்
மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல்
தடம் கைகள் கொண்டு தழீஇ எடுக்கலுற்றான்
#8
நின்று தொடர்ந்த நெடும் கை-தம்மை நீக்கி
மின் துவள்கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள்
ஒன்றும் இயம்பலள் நீடு உயிர்க்கலுற்றாள்
மன்றல் அரும் தொடை மன்னன் ஆவி அன்னாள்
#9
அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி
என்னை நிகழ்ந்தது இ ஏழு ஞாலம் வாழ்வார்
உன்னை இகழ்ந்தவர் மாள்வர் உற்றது எல்லாம்
சொன்ன பின் என் செயல் காண்டி சொல்லிடு என்றான்
#10
வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை
கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப
உண்டு-கொலாம் அருள் என்-கண் உன்-கண் ஒக்கின்
பண்டைய இன்று பரிந்து அளித்தி என்றாள்
#11
கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்
வெள்ள நெடும் சுடர் மின்னின் மின்ன நக்கான்
உள்ளம் உவந்தது செய்வன் ஒன்றும் உலோபேன்
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான்
#12
ஆன்றவன் அ உரை கூற அன்னம் அன்னாள்
தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல்
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி என்றாள்
#13
வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி
இரங்கிட வேண்டுவது இல்லை ஈவென் என்-பால்
பரம் கெட இப்பொழுதே பகர்ந்திடு என்றான்
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான்
#14
ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது என புகன்று நின்றாள்
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்
#15
நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த
சோக விடம் தொடர துணுக்கம் எய்தா
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்
#16
பூதலம் உற்று அதனில் புரண்ட மன்னன்
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்
வேதனை முற்றிட வெந்து வெந்து கொல்லன்
ஊது உலையில் கனல் என்ன வெய்து_உயிர்த்தான்
#17
உலர்ந்தது நா உயிர் ஓடல் உற்றது உள்ளம்
புலர்ந்தது கண்கள் பொடித்த பொங்கு சோரி
சலம் தலைமிக்கது தக்கது என்-கொல் என்று என்று
அலந்தலை உற்ற அரும் புலன்கள் ஐந்தும்
#18
மேவி நிலத்தில் இருக்கும் நிற்கும் வீழும்
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்
ஆவி பதைப்ப அலக்கண் எய்தி நின்றான்
#19
பெண் என உட்கும் பெரும் பழிக்கு நாணும்
உள் நிறை வெப்பொடு உயிர்த்து உயிர்த்து உலாவும்
கண்ணிலன் ஒப்ப அயர்க்கும் வன் கை வேல் வெம்
புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான்
#20
கம்ப நெடும் களி யானை அன்ன மன்னன்
வெம்பி விழுந்து எழும் விம்மல் கண்டு வெய்துற்று
உம்பர் நடுங்கினர் ஊழி பேர்வது ஒத்தது
அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால்
#21
அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும் உள்ளம்
நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால்
வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே
தஞ்சு என மாதரை உள்ளலார்கள் தக்கோர்
#22
இ நிலை நின்றவள்-தன்னை எய்த நோக்கி
நெய் நிலை வேலவன் நீ திசைத்தது உண்டோ
பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ
உன் நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான்
#23
திசைத்ததும் இல்லை எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை முன் ஈந்த இ வரங்கள்
குசை பரியோய் தரின் இன்று கொள்வேன் அன்றேல்
வசை திறன் நின்-வயின் நிற்க மாள்வென் என்றாள்
#24
இந்த நெடும் சொல் அ ஏழை கூறு முன்னே
வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப
சிந்தை திரிந்து திகைத்து அயர்ந்து வீழ்ந்தான்
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன்
#25
ஆ கொடியாய் எனும் ஆவி காலும் அந்தோ
ஓ கொடிதே அறம் என்னும் உண்மை ஒன்றும்
சாக எனா எழும் மெய் தளாடி வீழும்
மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான்
#26
நாரியர் இல்லை இ ஞாலம் எங்கும் என்ன
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும்
பூரியர் எண்ணிடை வீழ்வன் என்று பொங்கும்
வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான்
#27
கையொடு கைகள் புடைக்கும் வாய் கடிக்கும்
மெய்யுரை குற்றம் என புழுங்கி விம்மும்
நெய் எரி உற்று என நெஞ்சு அழிந்து சோரும்
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன்
#28
ஒறுப்பினும் அந்தரம் உண்மை ஒன்றும் ஓவா
மறுப்பினும் அந்தரம் என்று வாய்மை மன்னன்
பொறுப்பினும் இ நிலை போகிலாளை வாளால்
இறுப்பினும் ஆவது இரப்பது என்று எழுந்தான்
#29
கோல் மேற்கொண்டும் குற்றம் அகற்ற குறிக்கொண்டார்
போல் மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னா
கால் மேல் வீழ்ந்தான் கந்து கொல் யானை கழல் மன்னர்
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான்
#30
கொள்ளான் நின் சேய் இ அரசு அன்னான் கொண்டாலும்
நள்ளாது இந்த நானிலம் ஞாலம்-தனில் என்றும்
உள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய்
எள்ளா நிற்கும் வன் பழி கொண்டு என் பயன் என்றான்
#31
வானோர் கொள்ளார் மன்னவர் உய்யார் இனி மற்று என்
ஏனோர் செய்கை யாரொடு நீ இ அரசு ஆள்வாய்
யானே சொல்ல கொள்ள இசைந்தான் முறையாலே
தானே நல்கும் உன் மகனுக்கும் தரை என்றான்
#32
கண்ணே வேண்டும் என்னினும் ஈய கடவேன் என்
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ
பெண்ணே வண்மை கேகயன் மானே பெறுவாயேல்
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான்
#33
வாய் தந்தேன் என்றேன் இனி யானோ அது மாற்றேன்
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே
தாய் தந்து என்ன தன்னை இரந்தால் தழல் வெம் கண்
பேய் தந்தீயும் நீ இது தந்தால் பிழை ஆமோ
#34
இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன்
தன் நேர் இல்லா தீயவள் உள்ளம் தடுமாறாள்
முன்னே தந்தாய் இ வரம் நல்காய் முனிவாயேல்
என்னே மன்னா யார் உளர் வாய்மைக்கு இனி என்றாள்
#35
அ சொல் கேளா ஆவி புழுங்கா அயர்கின்றான்
பொய் சொல் பேணா வாய்மொழி மன்னன் பொறை கூர
நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா
முச்சு அற்றார் போல் பின்னும் இரந்தே மொழிகின்றான்
#36
நின் மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலம் எல்லாம்
உன் வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரை குன்றேன்
என் மகன் என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும்
நன் மகன் இந்த நாடு இறவாமை நய என்றான்
#37
மெய்யே என்-தன் வேர் அற நூறும் வினை நோக்கி
நையா நின்றேன் நாவும் உலர்ந்தேன் நளினம் போல்
கையான் இன்று என் கண் எதிர்நின்றும் கழிவானேல்
உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர் என்றான்
#38
இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள் முனிவு எஞ்சாள்
மரம்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வகை பாராள்
சரம் தாழ் வில்லாய் தந்த வரத்தை தவிர்க என்றல்
உரம்தான் அல்லால் நல் அறம் ஆமோ உரை என்றாள்
#39
கொடியாள் இன்ன கூறினள் கூற குல வேந்தன்
முடி சூடாமல் காத்தலும் மொய் கானிடை மெய்யே
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா
இடி ஏறுண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தான்
#40
வீழ்ந்தான் வீழா வெம் துயரத்தின் கடல் வெள்ளத்து
ஆழ்ந்தான் ஆழா அ கடலுக்கு ஓர் கரை காணான்
சூழ்ந்தாள் துன்பம் சொல் கொடியாள் சொல் கொடு நெஞ்சம்
போழ்ந்தாள் உள்ள புன்மையை நோக்கி புலர்கின்றான்
#41
ஒன்றா நின்ற ஆர் உயிரோடும் உயர் கேள்வர்
பொன்றா-முன்னம் பொன்றினர் என்னும் புகழ் அல்லால்
இன்று ஓர்-காறும் எல் வளையார் தம் இறையோரை
கொன்றார் இல்லை கொல்லுதியோ நீ கொடியோளே
#42
ஏவம் பாராய் இல் முறை நோக்காய் அறம் எண்ணாய்
ஆ என் பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய்
நா அம்பால் என் ஆருயிர் உண்டாய் இனி ஞாலம்
பாவம் பாராது இன் உயிர் கொள்ள படுகின்றாய்
#43
ஏண்-பால் ஓவா நாண் மடம் அச்சம் இவையே தம்
பூண்-பால் ஆக காண்பவர் நல்லார் புகழ் பேணி
நாண்-பால் ஓரா நங்கையர் தம்-பால் நணுகாரே
ஆண்பாலாரே பெண்பால் ஆரோடு அடைவு அம்மா
#44
மண் ஆள்கின்றார் ஆகி வலத்தால் மதியால் வைத்து
எண்ணாநின்றார் யாரையும் எல்லா இகலாலும்
விண்ணோர்-காறும் வென்ற எனக்கு என் மனை வாழும்
பெண்ணால் வந்தது அந்தரம் என்ன பெறுவேனோ
#45
என்று என்று உன்னும் பன்னி இரக்கும் இடர் தோயும்
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும் உயிர் உண்டோ
இன்று இன்று என்னும் வண்ணம் மயங்கும் இடையும் பொன்
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன குவி தோளான்
#46
ஆழி பொன் தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி
பூழி பொன் தார் முற்றும் அடங்க புரள் போழ்தில்
ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென்
பாழி பொன் தோள் மன்னவ என்றாள் பசை அற்றாள்
#47
அரிந்தான் முன் ஓர் மன்னவன் அன்றே அரு மேனி
வரிந்து ஆர் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம் நல்கி
பரிந்தால் என் ஆம் என்றனள் பாயும் கனலே போல்
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள்
#48
வீழ்ந்தாளே இ வெய்யவள் என்னா மிடல் வேந்தன்
ஈந்தேன் ஈந்தேன் இ வரம் என் சேய் வனம் ஆள
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம்
நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது என்றான்
#49
கூறா-முன்னம் கூறுபடுக்கும் கொலை வாளின்
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்க
தேறான் ஆகி செய்கை மறந்தான் செயல் முற்றி
ஊறா நின்ற சிந்தையினாளும் துயிலுற்றாள்
#50
சேண் உலாவிய நாள் எலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின்
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த ஒன்றும் இரங்கிலா
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும்
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே
#51
எண் தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்றன ஏழையால்
வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம்
கண்டு நெஞ்சு கலங்கி அம் சிறை ஆன காமர் துணை கரம்
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே
#52
தோய் கயத்தும் மரத்தும் மென் சிறை துள்ளி மீது எழு புள் எலாம்
தேய்கை ஒத்த மருங்குல் மாதர் சிலம்பின் நின்று சிலம்புவ
கேகயத்து அரசன் பயந்த விடத்தை இன்னது ஒர் கேடு சூழ்
மா கயத்தியை உள் கொதித்து மனத்து வைவன போன்றவே
#53
சேமம் என்பன பற்றி அன்பு திருந்த இன் துயில் செய்த பின்
வாமம் மேகலை மங்கையோடு வனத்துள் யாரும் மறக்கிலா
நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய்
யாமும் இ மண் இறத்தும் என்பன போல் எழுந்தன யானையே
#54
சிரித்த பங்கயம் ஒத்த செம் கண் இராமனை திருமாலை அ
கரி கரம் பொரு கைத்தலத்து உயர் காப்பு நாண் அணிதற்கு முன்
வரித்த தண் கதிர் முத்தது ஆகி இ மண் அனைத்தும் நிழற்ற மேல்
விரித்த பந்தர் பிரித்தது ஆம் என மீன் ஒளித்தது வானமே
#55
நாம வில் கை இராமனை தொழு நாள் அடைந்த உமக்கு எலாம்
காமன் விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது என்பது கற்பியா
தாம் ஒலித்தன பேரி அ ஒலி சாரல் மாரி தழங்கலால்
மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே
#56
இன மலர்_குலம் வாய் விரித்து இள வாச மாருதம் வீச முன்
புனை துகில் கலைசோர நெஞ்சு புழுங்கினார் சில பூவைமார்
மனம் அனுக்கம் விட தனித்தனி வள்ளலை புணர் கள்ள வன்
கனவினுக்கு இடையூறு அடுக்க மயங்கினார் சில கன்னிமார்
#57
சாய் அடங்க நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும்
போய் அடங்க நெடும் கொடும் பழி கொண்டு அரும் புகழ் சிந்தும் அ
தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு சீரிய நங்கைமார்
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த வண் குமுதங்களே
#58
மொய் அராகம் நிரம்ப ஆசை முருங்கு தீயின் முழங்க மேல்
வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும்
மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி
பை அரா நுழைகின்ற போன்றன பண் கனிந்து எழு பாடலே
#59
ஆழியான் முடி சூடு நாள் இடை ஆன பாவி இது ஓர் இரா
ஊழி ஆயினவாறு எனா உயர் போதின் மேல் உறை பேதையும்
ஏழ் உலோகமும் எண் தவம் செய்த கண்ணும் எங்கள் மனங்களும்
வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே
#60
ஐயுறும் சுடர் மேனி யான் எழில் காண மூளும் அவாவினால்
கொய்யுறும் குல மா மலர் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர்
நெய் உறும் சுடர் வேல் நெடும் கண் முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும்
பொய் உறங்கும் மடந்தைமார் குழல் வண்டு பொம்மென விம்மவே
#61
ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி அனந்தரால்
ஏடு அகம் பொதி தார் பொருந்திட யாமம் பேரி இசைத்தலால்
சேடகம் புனை கோதை மங்கையர் சிந்தையில் செறி திண்மையால்
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே
#62
தழை ஒலித்தன வண்டு ஒலித்தன தார் ஒலித்தன பேரி ஆம்
முழவு ஒலித்தன தேர் ஒலித்தன முத்து ஒலித்தன மல்கு பேர்
இழை ஒலித்தன புள் ஒலித்தன யாழ் ஒலித்தன எங்கணும்
மழை ஒலித்தன போல் கலித்த மனத்தின் முந்துறு வாசியே
#63
வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அ
மெய்யன் வீரருள் வீரன் மா மகன் மேல் விளைந்து எழு காதலால்
நைய நைய நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான்
தெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின தீபமே
#64
வங்கியம் பல தேன் விளம்பின பாணி முந்துறு வாணியின்
பங்கி அம்பரம் எங்கும் விம்மின பம்பை பம்பின பல் வகை
பொங்கு இயம் பலவும் கறங்கின நூபுரங்கள் புலம்ப வெண்
சங்கு இயம்பின கொம்பு அலம்பின சாம கீதம் நிரம்பவே
#65
தூபம் முற்றிய கார் இருள் பகை துள்ளி ஓடிட உள் எழும்
தீபம் முற்றவும் விட்டு அகன்றன சேயது ஆருயிர் தேய வெம்
பாபம் முற்றிய பேதை செய்த பகை திறத்தினில் வெய்யவன்
கோபம் முற்றி மிக சிவந்தனன் ஒத்தனன் குண குன்றிலே
#66
மூவர் ஆய் முதல் ஆகி மூலம் அது ஆகி ஞாலமும் ஆகிய
தேவ தேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேண் நிலம்
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர்
பாவைமார் முகம் என்ன-முன்னம் மலர்ந்த பங்கய ராசியே
#67
இன்ன வேலையின் ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா
துன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம்
#68
குஞ்சரம் அனையார் சிந்தை கொள் இளையார்
பஞ்சினை அணிவார் பால் வளை தெரிவார்
அஞ்சனம் என வாள் அம்புகள் இடையே
நஞ்சினை இடுவார் நாள்_மலர் புனைவார்
#69
பொங்கிய உவகை வெள்ளம் பொழிதர கமலம் பூத்த
சங்கை_இல் முகத்தார் நம்பி தம்பியர் அனையர் ஆனார்
செம் கயல் நறவம் மாந்தி களிப்பன சிவக்கும் கண்ணார்
குங்கும சுவடு நீங்கா குவவு தோள் குமரர் எல்லாம்
#70
மாதர்கள் கற்பின் மிக்கார் கோசலை மனத்தை ஒத்தார்
வேதியர் வசிட்டன் ஒத்தார் வேறு உள மகளிர் எல்லாம்
சீதையை ஒத்தார் அன்னாள் திருவினை ஒத்தாள் அ ஊர்
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார்
#71
இமிழ் திரை பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே
குமிழ் முலை சீதை கொண்கண் கோ_முடி புனைதல் காண்பான்
அமிழ்து உண குழுமுகின்ற அமரரின் அரச வெள்ளம்
#72
பாகு இயல் பவள செ வாய் பணை முலை பரவை அல்குல்
தோகையர் குழாமும் மைந்தர் சும்மையும் துவன்றி எங்கும்
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால்
போகில மீளகில்லா பொன் நகர் வீதி எல்லாம்
#73
வேந்தரே பெரிது என்பாரும் வேதியர் பெரிது என்பாரும்
மாந்தரே பெரிது என்பாரும் மகளிரே பெரிது என்பாரும்
போந்ததே பெரிது என்பாரும் புகுவதே பெரிது என்பாரும்
தேர்ந்ததே தேரின் அல்லால் யாவரே தெரிய கண்டார்
#74
குவளையின் எழிலும் வேலின் கொடுமையும் குழைத்து கூட்டி
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி
தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார்
துவளும் நுண் இடையார் ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார்
#75
நலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறும் துழாயின்
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார்
இலங்கையின் நிருதரே இ ஏழ் உலகத்து வாழும்
விலங்கலும் ஆசை நின்ற விடா மத விலங்கலேயால்
#76
சந்திரர் கோடி என்ன தரள வெண் கவிகை ஓங்க
அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்து என கவரி துன்ன
இந்திரற்கு உவமை சாலும் இரு நில கிழவர் எல்லாம்
வந்தனர் மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார்
#77
முன் பயந்தெடுத்த காதல் புதல்வனை முறையினோடும்
இல் பயன் சிறப்பிப்பாரின் ஈண்டிய உவகை தூண்ட
அற்புதன் திருவை சேரும் அரு மணம் காண புக்கார்
நல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறை கிழவர் எல்லாம்
#78
விண்ணவர் விசும்பு தூர்த்தார் விரி திரை உடுத்த கோல
மண்ணவர் திசைகள் தூர்த்தார் மங்கலம் இசைக்கும் சங்கம்
கண் அகல் முரசின் அதை கண்டவர் செவிகள் தூர்த்த
எண்_அரும் கனக மாரி எழு திரை கடலும் தூர்த்த
#79
விளக்கு ஒளி மறைத்த மன்னர் மின் ஒளி மகுட கோடி
துளக்கு ஒளி விசும்பின் ஊரும் சுடரையும் மறைத்த சூழ்ந்த
அளக்கர் வெண் முத்த மூரல் முறுவலார் அணியின் சோதி
வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே
#80
ஆயது ஓர் அமைதியின்-கண் ஐயனை மகுடம் சூட்டற்கு
ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் இயைய கொண்டு
தூய நான்மறைகள் வேத பாரகர் சொல்ல தொல்லை
வாயில்கள் நெருக்கம் நீங்க மா தவ கிழவன் வந்தான்
#81
கங்கையே முதல ஆக கன்னி ஈறு ஆய தீர்த்தம்
மங்கல புனலும் நாலு வாரியின் நீரும் பூரித்து
அங்கியின் வினையிற்கு ஏற்ற யாவையும் அமைத்து வீர
சிங்க ஆசனமும் வைத்து செய்வன பிறவும் செய்தான்
#82
கணித நூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன
பிணி அற நோற்று நின்ற பெரியவன் விரைவின் ஏகி
மணி முடி வேந்தன்-தன்னை வல்லையின் கொணர்தி என்ன
பணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான்
#83
விண் தொட நிவந்த கோயில் வேந்தர்-தம் வேந்தன் தன்னை
கண்டிலன் வினவ கேட்டான் கைகயள் கோயில் நண்ணி
தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல மற்று அவரும் சொல்ல
பெண்டிரில் கூற்றம் அன்னாள் பிள்ளையை கொணர்க என்றாள்
#84
என்றனள் என்ன கேட்டான் எழுந்த பேர் உவகை பொங்க
பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கி புக்கான்
தன் திரு உள்ளத்து உள்ளே தன்னையே நினையும் அந்த
குன்று இவர் தோளினானை தொழுது வாய் புதைத்து கூறும்
#85
கொற்றவர் முனிவர் மற்றும் குவலயத்து உள்ளார் உன்னை
பெற்றவன் தன்னை போல பெரும் பரிவு இயற்றி நின்றார்
சிற்றவை-தானும் ஆங்கே கொணர்க என செப்பினாள் அ
பொன் தட மகுடம் சூட போகுதி விரைவின் என்றான்
#86
ஐயனும் அ சொல் கேளா ஆயிரம் மௌலி யானை
கைதொழுது அரச வெள்ளம் கடல் என தொடர்ந்து சுற்ற
தெய்வ கீதங்கள் பாட தேவரும் மகிழ்ந்து வாழ்த்த
தையலார் இரைத்து நோக்க தாரணி தேரில் சென்றான்
#87
திரு மணி மகுடம் சூட சேவகன் செல்கின்றான் என்று
ஒருவரின் ஒருவர் முந்த காதலோடு உவகை உந்த
இரு கையும் இரைத்து மொய்த்தார் இன் உயிர் யார்க்கும் ஒன்றாய்
பொரு_அரு தேரில் செல்ல புறத்திடை கண்டார் போல்வார்
#88
துண்ணெனும் சொல்லாள் சொல்ல சுடர் முடி துறந்து தூய
மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா-முன்னம் வள்ளல்
பண் எனும் சொல்லினார்-தம் தோள் எனும் பணைத்த வேயும்
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான்
#89
சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து
வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும்
புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை
கண் உற பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும்
#90
அம் கணன் அவனி காத்தற்கு ஆம் இவன் என்னல் ஆமோ
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார்
செம் கணும் கரிய கோல மேனியும் தேரும் ஆகி
எங்கணும் தோன்றுகின்றான் எனைவரோ இராமன் என்பார்
#91
இனையராய் மகளிர் எல்லாம் இரைத்தனர் நிரைத்து மொய்த்தார்
முனைவரும் நகர மூதூர் முதிஞரும் இளைஞர் தாமும்
அனையவன் மேனி கண்டார் அன்பினுக்கு எல்லை காணார்
நினைவன மனத்தால் வாயால் நிகழ்ந்தது நிகழ்த்தலுற்றாம்
#92
உய்த்தது இ உலகம் என்பார் ஊழி காண்கிற்பாய் என்பார்
மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் என்பார்
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார்
பைம் துழாய் தெரியலாய்க்கே நல்வினை பயக்க என்பார்
#93
உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை நிறத்தை ஒக்கும்
புயல் மொழி மேகம் என்ன புண்ணியம் செய்த என்பார்
செயல்_அரும் தவங்கள் செய்தி செம்மலை தந்த செல்வ
தயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது என்பார்
#94
வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும் இந்த நம்பி-தன் கருணை என்பார்
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார்
#95
நீல மா முகில்_அனான்-தன் நிறைவினோடு அறிவு நிற்க
சீலம் ஆர்க்கு உண்டு கெட்டேன் தேவரின் அடங்குவானோ
காலமாய் குணித்த நுண்மை கணக்கையும் கடந்து நின்ற
மூலம் ஆய் முடிவு இலாத மூர்த்தி இ முன்பன் என்பார்
#96
ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தை
போர் கெழு புலவர்க்கு ஆகி அசுரரை பொருது வென்றோர்
பேர்-கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது ஐயன்
தார் கெழு திரள் தோள் தந்த புகழினை தழுவி என்பார்
#97
சந்தம் இவை தா இல் மணி ஆரம் இவை யாவும்
சிந்துரமும் இங்கு இவை செறிந்த மத வேழ
பந்திகள் வய பரி பசும்பொனின் வெறுக்கை
மைந்த வறியோர் கொள வழங்கு என நிரைப்பார்
#98
மின் பொருவு தேரின் மிசை வீரன் வரு போழ்தில்
தன் பொருவு_இல் கன்று தனி தாவி வரல் கண்டு ஆங்கு
அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல்
என்பு உருக நெஞ்சு உருகியார் உருககில்லார்
#99
சத்திரம் நிழற்ற நிமிர் தானையொடு நானா
அத்திரம் நிழற்ற அருளோடு அவனி ஆள்வார்
புத்திரர் இனி பெறுதல் புல்லிது என நல்லோர்
சித்திரம் என தனி திகைத்து உருகி நிற்பார்
#100
கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன்
தேர் மிசை நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ
கூர் கனக ராசியோடு கோடி மணியாலும்
தூர்-மின் நெடு வீதியினை என்று சொரிவாரும்
#101
தாய் கையில் வளர்ந்திலன் வளர்த்தது தவத்தால்
கேகயன் மடந்தை கிளர் ஞாலம் இவன் ஆள
ஈகையில் உவந்த அ இயற்கை இது என்றால்
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது என்பார்
#102
பாவமும் அரும் துயரும் வேர் பறியும் என்பார்
பூ_வலயம் இன்று தனி அன்று பொது என்பார்
தேவர் பகை உள்ளன இ வள்ளல் தெறும் என்பார்
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது-கொல் என்பார்
#103
ஆண்டு இனையராய் இனைய கூற அடல் வீரன்
தூண்டு புரவி பொரு_இல் சுந்தர மணி தேர்
நீண்ட கொடி மாட நிரை வீதி நிறைய போய்
பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும்
#104
ஆங்கு வந்து அடைந்த அண்ணல் ஆசையின் கவரி வீச
பூம் குழல் மகளிர் உள்ளம் புது களி ஆட நோக்கி
வீங்கு இரும் காதல் காட்டி விரி முகம் கமல பீடத்து
ஓங்கிய மகுடம் சூடி உவகை வீற்றிருப்ப காணான்
#105
வேத்தவை முனிவரோடு விருப்பொடு களிக்கும் மெய்ம்மை
ஏத்தவை இசைக்கும் செம்பொன் மண்டபம் இனிதின் எய்தான்
ஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம்
பூத்தவை வடிவை ஒப்பான் சிற்றவை கோயில் புக்கான்
#106
புக்கவன் தன்னை நோக்கி புரவலர் முனிவர் யாரும்
தக்கதே நினைந்தான் தாதை தாமரை சரணம் சூடி
திக்கினை நிமிர்த்த கோல செம்_கதிர்_செல்வன் ஏய்ந்த
மிக்கு உயர் மகுடம் சூட்ட சூடுதல் விழுமிது என்றார்
#107
ஆயன நிகழும் வேலை அண்ணலும் அயர்ந்து தேறா
தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி
நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா
தாய் என நினைவான் முன்னே கூற்று என தமியள் வந்தாள்
#108
வந்தவள்-தன்னை சென்னி மண் உற வணங்கி வாச
சிந்துர பவள செ வாய் செம் கையின் புதைத்து மற்றை
சுந்தர தட கை தானை மடக்கு உற துவண்டு நின்றான்
அந்தி வந்து அடைந்த தாயை கண்ட ஆன் கன்றின் அன்னான்
#109
நின்றவன்-தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின்
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றி கொடுமை பூண்டாள்
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும்
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள்
#110
எந்தையே ஏவ நீரே உரை-செய இயைவது உண்டேல்
உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ
தந்தையும் தாயும் நீரே தலைநின்றேன் பணி-மின் என்றான்
#111
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்
தாழ் இரும் சடைகள் தாங்கி தாங்க_அரும் தவம் மேற்கொண்டு
பூழி வெம் கானம் நண்ணி புண்ணிய புனல்கள் ஆடி
ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்
#112
இ பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதோ யாரும்
செப்ப_அரும் குணத்து இராமன் திருமுக செவ்வி நோக்கின்
ஒப்பதே முன்பு பின்பு அ வாசகம் உணர கேட்ட
அ பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா
#113
தெருள் உடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி
இருள் உடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான்
உருள் உடை சகடம் பூண் உடையவன் உய்த்த கார் ஏறு
அருள் உடை ஒருவன் நீக்க அ பிணி அவிழ்ந்தது ஒத்தான்
#114
மன்னவன் பணி அன்று ஆகின் நும் பணி மறுப்பனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ
என் இனி உறுதி அப்பால் இ பணி தலைமேல் கொண்டேன்
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்
#115
என்று கொண்டு இனைய கூறி அடி இணை இறைஞ்சி மீட்டும்
தன் துணை தாதை பாதம் அ திசை நோக்கி தாழ்ந்து
பொன் திணி போதினாளும் பூமியும் புலம்பி நைய
குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான்

4 நகர் நீங்கு படலம்

#1
குழைக்கின்ற கவரி இன்றி கொற்ற வெண்குடையும் இன்றி
இழைக்கின்ற விதி முன் செல்ல தருமம் பின் இரங்கி ஏக
மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான்
#2
புனைந்திலன் மௌலி குஞ்சி மஞ்சன புனித நீரால்
நனைந்திலன் என்-கொல் என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும் குழைந்து வாழ்த்தி
நினைந்தது என் இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு என்றாள்
#3
மங்கை அ மொழி கூறலும் மானவன்
செம் கை கூப்பி நின் காதல் திரு மகன்
பங்கம் இல் குணத்து எம்பி பரதனே
துங்க மா முடி சூடுகின்றான் என்றான்
#4
முறைமை அன்று என்பது ஒன்று உண்டு மும்மையின்
நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால்
குறைவு இலன் என கூறினள் நால்வர்க்கும்
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள்
#5
என்று பின்னரும் மன்னன் ஏவியது
அன்று எனாமை மகனே உனக்கு அறன்
நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து
ஒன்றி வாழுதி ஊழி பல என்றாள்
#6
தாய் உரைத்த சொல் கேட்டு தழைக்கின்ற
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான்
நாயகன் எனை நல் நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டு ஓர் பணி என்று இயம்பினான்
#7
ஈண்டு உரைத்த பணி என்னை என்றவட்கு
ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் அகல் கானிடை
மாண்ட மா தவத்தோருடன் வைகி பின்
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் என்றான்
#8
ஆங்கு அ வாசகம் என்னும் அனல் குழை
தூங்கு தன் செவியில் தொடரா-முனம்
ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம்
வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள்-அரோ
#9
வஞ்சமோ மகனே உனை மா நிலம்
தஞ்சம் ஆக நீ தாங்கு என்ற வாசகம்
நஞ்சமோ இனி நான் உயிர் வாழ்வெனோ
அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால்
#10
கையை கையின் நெரிக்கும் தன் காதலன்
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினை
பெய் வளை தளிரால் பிசையும் புகை
வெய்து_உயிர்க்கும் விழுங்கும் புழுங்குமால்
#11
நன்று மன்னன் கருணை எனா நகும்
நின்ற மைந்தனை நோக்கி நெடும் சுரத்து
என்று போவது எனா எழும் இன் உயிர்
பொன்றும் போது உற்றது உற்றனன் போலுமே
#12
அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ
என் பிழைத்தனை என்று நின்று ஏங்குமால்
முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்
பொன் பிழைக்க பொதிந்தனர் போலவே
#13
அறம் எனக்கு இலையோ என்னும் ஆவி நைந்து
இற அடுத்தது என் தெய்வதங்காள் என்னும்
பிற உரைப்பது என் கன்று பிரிந்துழி
கறவை ஒப்ப கரைந்து கலங்கினாள்
#14
இ திறத்தின் இடர் உறுவாள்-தனை
கைத்தலத்தின் எடுத்து அரும் கற்பினோய்
பொய் திறத்தினன் ஆக்குதியோ புகல்
மெய் திறத்து நம் வேந்தனை நீ என்றான்
#15
பொற்பு உறுத்தன மெய்ம்மை பொதிந்தன
சொற்புறுத்தற்கு உரியன சொல்லினான்
கற்பு உறுத்திய கற்புடையாள்-தனை
வற்புறுத்தி மனம் கொள தேற்றுவான்
#16
சிறந்த தம்பி திரு உற எந்தையை
மறந்தும் பொய்யிலன் ஆக்கி வனத்திடை
உறைந்து தீரும் உறுதி பெற்றேன் இதின்
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ
#17
விண்ணும் மண்ணும் இ வேலையும் மற்றும் வேறு
எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும்
அண்ணல் ஏவல் மறுக்க அடியனேற்கு
ஒண்ணுமோ இதற்கு உள் அழியேல் என்றான்
#18
ஆகின் ஐய அரசன்-தன் ஆணையால்
ஏகல் என்பது யானும் உரைக்கிலென்
சாகலா உயிர் தாங்க வல்லேனையும்
போகின் நின்னொடும் கொண்டனை போகு என்றாள்
#19
என்னை நீங்கி இடர் கடல் வைகுறும்
மன்னர் மன்னனை வற்புறுத்தாது உடன்
துன்னும் கானம் தொடர துணிவதோ
அன்னையே அறம் பார்க்கிலை ஆம் என்றான்
#20
வரி வில் எம்பி இ மண் அரசு ஆய் அவற்கு
உரிமை மா நிலம் உற்ற பின் கொற்றவன்
திருவின் நீங்கி தவம் செயும் நாள் உடன்
அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே
#21
சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும்
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே
எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான்
#22
முன்னர் கோசிகன் என்னும் முனிவரன்
தன் அருள் தலை தாங்கிய விஞ்சையும்
பின்னர் எய்திய பேறும் பிழைத்தவோ
இன்னம் நன்று அவர் ஏயின செய்தலே
#23
மா தவர்க்கு வழிபாடு இழைத்து அரும்
போதம் முற்றி பொரு_அரு விஞ்சைகள்
ஏதம் அற்றன தாங்கி இமையவர்
காதல் பெற்று இ நகர் வர காண்டியால்
#24
மகர வேலை மண் தொட்ட வண்டு ஆடு தார்
சகரர் தாதை பணி தலைநின்று தம்
புகர் இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய
நிகர் இல் மா புகழ் நின்றது அன்றோ எனா
#25
மான் மறி கரத்தான் மழு ஏந்துவான்
தான் மறுத்திலன் தாதை சொல் தாயையே
ஊன் அற குறைத்தான் உரவோன் அருள்
யான் மறுப்பது என்று எண்ணுவதோ என்றான்
#26
இ திறத்த எனை பல வாசகம்
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா
எ திறத்தும் இறக்கும் இ நாடு எனா
மெய் திறத்து விளங்கு_இழை உன்னுவாள்
#27
அவனி காவல் பரதனது ஆகுக
இவன் இ ஞாலம் இறந்து இரும் கானிடை
தவன் நிலாவகை காப்பென் தகவினால்
புவனி நாதன் தொழுது என்று போயினாள்
#28
போகின்றாளை தொழுது புரவலன்
ஆகம் மற்று அவள்-தன்னையும் ஆற்றி இ
சோகம் தீர்ப்பவள் என்று சுமித்திரை
மேகம் தோய் தனி கோயிலை மேயினான்
#29
நடந்த கோசலை கேகய நாட்டு இறை
மடந்தை கோயிலை எய்தினள் மன்னவன்
கிடந்த பார் மிசை வீழ்ந்தனள் கெட்டு உயிர்
உடைந்த போழ்தின் உடல் விழுந்து என்னவே
#30
பிறியார் பிரிவு ஏது என்னும் பெரியோய் தகவோ என்னும்
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும்
வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும்
அறிவோ வினையோ என்னும் அரசே அரசே என்னும்
#31
இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி
உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம்
பொருள் அற்றிட முற்றுறும் அ பகலில் புகுதற்கு என்றோ
அருள கருதுற்றது நீ அரசர்க்கு அரசே என்னும்
#32
திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே திருவின் திருவே
நிரை ஆர் கலையின் கடலே நெறி ஆர் மறையின் நிலையே
கரையா அயர்வேன் எனை நீ கருணாலயனே என் என்று
உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும்
#33
மின் நின்று அனைய மேனி வெறிதாய் விட நின்றது போல்
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான்
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன்
மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும்
#34
இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையா-முன்னம்
ஒவ்வாது ஒவ்வாது என்னா ஒளிவாள் நிருபர் முனிவர்
அ ஆறு அறிவாய் என்ன வந்தான் முனிவன் அவனும்
வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா
#35
இறந்தான் அல்லன் அரசன் இறவாது ஒழிவான் அல்லன்
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை
துறந்தாள் துயரம் தன்னை துறவாது ஒழிவாள் இவளே
பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ
#36
என்னா உன்னா முனிவன் இடரால் அழிவாள் துயரம்
சொன்னாள் ஆகாள் என முன் தொழு கேகயர்_கோன் மகளை
அன்னாய் உரையாய் அரசன் அயர்வான் நிலை என் என்ன
தன்னால் நிகழ்ந்த எல்லாம் தானே தெரிய சொன்னாள்
#37
சொற்றாள் சொற்றா-முன்னம் சுடர் வாள் அரசர்க்கு அரசை
பொன்_தாமரை போல் கையால் பொடி சூழ் படி-நின்று எழுவி
கற்றாய் அயரேல் அவளே தரும் நின் காதற்கு அரசை
எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவாநின்றான்
#38
சீத பனி நீர் அளவி திண் கால் உக்கம் மென் கால்
போதத்து அளவே தவழ்வித்து இன் சொல் புகலாநின்றான்
ஓத கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய
காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான்
#39
காணா ஐயா இனி நீ ஒழிவாய் கழி பேர் அவலம்
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ
மாணா உரையாள் தானே தரும் மா மழையே அனையான்
பூணாது ஒழிவான் எனின் யாம் உளமோ பொன்றேல் என்றான்
#40
என்ற அ முனிவன்-தன்னை நினையா வினையேன் இனி யான்
பொன்றும் அளவில் அவனை புனை மா மகுடம் புனைவித்து
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும்
குன்றும் பழி பூணாமல் காவாய் கோவே என்றான்
#41
முனியும் முனியும் செய்கை கொடியாள் முகமே முன்னி
இனி உன் புதல்வற்கு அரசும் ஏனையோர்க்கு இன் உயிரும்
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர்
புனிதம் மருவும் புகழே புனைவாய் பொன்னே என்றான்
#42
மொய் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியா-முன்னம்
விம்மா அழுவாள் அரசன் மெய்யின் திரிவான் என்னில்
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல்
பொய் மாணாமற்கு இன்றே பொன்றாது ஒழியேன் என்றாள்
#43
கொழுநன் துஞ்சும் எனவும் கொள்ளாது உலகம் எனவும்
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும்
ஒழிகின்றிலை அன்றியும் ஒன்று உணர்கின்றிலை யான் இனிமேல்
மொழிகின்றன என் என்னா முனியும் முறை அன்று என்பான்
#44
கண்ணோடாதே கணவன் உயிர் ஓடு இடர் காணாதே
புண்ணூடு ஓடும் கனலோ விடமோ என்ன புகல்வாய்
பெண்ணோ தீயோ மாயா பேயோ கொடியாய் நீ இ
மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான்
#45
வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா-முன்னம்
நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில்
போயோ புகலோ தவிரான் புகழோடு உயிரை சுடு வெம்
தீயோய் நின் போல் தீயார் உளரோ செயல் என் என்றான்
#46
தா இல் முனிவன் புகல தளராநின்ற மன்னன்
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை
ஏவினாயோ அவனும் ஏகினானோ என்றான்
#47
கண்டேன் நெஞ்சம் கனிவாய் கனி வாய் விடம் நான் நெடு நாள்
உண்டேன் அதனால் நீ என் உயிரை முதலோடு உண்டாய்
பண்டே எரி முன் உன்னை பாவி தேவி ஆக
கொண்டேன் அல்லேன் வேறு ஓர் கூற்றம் தேடி கொண்டேன்
#48
விழிக்கும் கண் வேறு இல்லா வெம் கான் என் கான்முளையை
சுழிக்கும் வினையால் ஏக சூழ்வாய் என்னை போழ்வாய்
பழிக்கும் நாணாய் மாணா பாவி இனி என் பல உன்
கழுத்தின் நாண் உன் மகற்கு காப்பின் நாண் ஆம் என்றான்
#49
இன்னே பலவும் பகர்வான் இரங்கா தாளை நோக்கி
சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன்
மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான்
#50
என்னை கண்டும் ஏகா-வண்ணம் இடையூறு உடையான்
உன்னை கண்டும் இலனோ என்றான் உயர் கோசலையை
பின்னை கண்டான் அனையான் பிரிய கண்ட துயரம்
தன்னை கண்டே தவிர்வாள் தளர்வான் நிலையில் தளர்வாள்
#51
மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம்
ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனை
தேற்றா நின்றாள் மகனை திரிவான் என்றாள் அரசன்
தோற்றான் மெய் என்று உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள்
#52
தள்ளா நிலை சால் மெய்ம்மை தழுவாவகைதான் எய்தின்
எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால் உரவோய்
விள்ளா நிலை சேர் அன்பால் மகன் மேல் மெலியின் உலகம்
கொள்ளாது அன்றோ என்றான் கணவன் குறைய குறைவாள்
#53
போவாது ஒழியான் என்றாள் புதல்வன்-தன்னை கணவன்
சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள்
காவாய் என்னாள் மகனை கணவன் புகழுக்கு அழிவாள்
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே
#54
உணர்வான் அனையாள் உரையால் உயர்ந்தான் உரை-சால் குமரன்
புணரான் நிலமே வனமே போவானே ஆம் என்னா
இணர் ஆர் தரு தார் அரசன் இடரால் அயர்வான் வினையேன்
துணைவா துணை வா என்றான் தோன்றால் தோன்றால் என்றான்
#55
கண்ணும் நீராய் உயிரும் ஒழுக கழியாநின்றேன்
எண்ணும் நீர் நான்மறையோர் எரி முன் நின் மேல் சொரிய
மண்ணும் நீராய் வந்த புனலை மகனே வினையேற்கு
உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் என்றான்
#56
படை மாண் அரசை பல கால் மழுவாள்-அதனால் எறிவான்
மிடை மா வலி தான் அனையான் வில்லால் அடுமா வல்லாய்
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன்
சடை மா மகுடம் புனைய தந்தேன் அந்தோ என்றான்
#57
கறுத்தாய் உருவம் மனமும் கண்ணும் கையும் செய்யாய்
பொறுத்தாய் பொறையே இறைவன் புரம் மூன்று எரித்த போர் வில்
இறுத்தாய் தமியேன் என்னாது என்னை இ மூப்பிடையே
வெறுத்தாய் இனி நான் வாழ்நாள் வேண்டேன் வேண்டேன் என்றான்
#58
பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே புகழின் புகழே
மின்னின் மின்னும் வரி வில் குமரா மெய்யின் மெய்யே
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன்
உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான்
#59
நெகுதற்கு ஒத்த நெஞ்சும் நேயத்தாலே ஆவி
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன்
தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையை பற்றி
புகுத கண்ட கண்ணால் போக காணேன் என்றான்
#60
எற்றே பகர்வேன் இனி யான் என்னே உன்னின் பிரிய
வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும்
பொன் தேர் அரசே தமியேன் புகழே உயிரே உன்னை
பெற்றேன் அருமை அறிவேன் பிழையேன் பிழையேன் என்றான்
#61
அள்ளல் பள்ளம் புனல் சூழ் அகல் மா நிலமும் அரசும்
கொள்ள குறையா நிதியின் குவையும் முதலாம் எவையும்
கள்ள கைகேசிக்கே உதவி புகழ் கைக்கொண்ட
வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான்
#62
ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து உயர் வானிடை நாகரினும்
பொலியாநின்றார் உன்னை போல்வார் உளரோ பொன்னே
வலியார் உடையார் என்றான் மழுவாள் உடையான் வரவும்
சலியா நிலையாய் என்றால் தடுப்பார் உளரோ என்றான்
#63
கேட்டே இருந்தேன் எனினும் கிளர் வான் இன்றே அடைய
மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா
காட்டே உறைவாய் நீ இ கைகேசியையும் கண்டு இ
நாட்டே உறைவேன் என்றால் நன்று என் நன்மை என்றான்
#64
மெய் ஆர் தவமே செய்து உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும்
உய்யார் உய்யார் கெடுவேன் உன்னை பிரியின் வினையேன்
ஐயா கைகேசியை நேராகேனோ நான் என்றான்
#65
பூண் ஆர் அணியும் முடியும் பொன் ஆசனமும் குடையும்
சேணார் மார்பும் திருவும் தெரிய காண கடவேன்
மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல்
காணாது ஒழிந்தேன் என்றால் நன்று ஆய்த்து அன்றோ கருமம்
#66
ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து அரசன் உயிரும்
சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தி தேய்ந்தான்
மென் தோல் மார்பின் முனிவன் வேந்தே அயரேல் அவனை
இன்று ஏகாத-வண்ணம் தகைவென் உலகோடு என்னா
#67
முனிவன் சொல்லும் அளவில் முடியும்-கொல் என்று அரசன்
தனி நின்று உழல் தன் உயிரை சிறிதே தகைவான் இந்த
புனிதன் போனால் இவனால் போகாது ஒழிவான் என்னா
மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான்
#68
மறந்தான் நினைவும் உயிரும் மன்னன் என்ன மறுகா
இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடர் உற்று அழிவாள்
துறந்தான் மகன் முன் எனையும் துறந்தாய் நீயும் துணைவா
அறம்தான் இதுவோ ஐயா அரசர்க்கு அரசே என்றாள்
#69
மெய்யின் மெய்யே உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே
உய்யும் வகை நின் உயிரை ஓம்பாது இங்ஙன் தேம்பின்
வையம் முழுதும் துயரால் மறுகும் முனிவனுடன் நம்
ஐயன் வரினும் வருமால் அயரேல் அரசே என்றாள்
#70
என்று என்று அரசன் மெய்யும் இரு தாள் இணையும் முகனும்
தன் தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை
ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் மெள்ள
வன் திண் சிலை நம் குரிசில் வருமே வருமே என்றான்
#71
வன் மாய கைகேசி வரத்தால் என்-தன் உயிரை
முன் மாய்விப்ப துணிந்தாள் அன்றேல் கூனி மொழியால்
தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான்
#72
பொன் ஆர் வலய தோளான் கானோ புகுதல் தவிரான்
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது இது கோசலை கேள்
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான்
#73
வெய்ய கானத்திடையே வேட்டை வேட்கை மிகவே
ஐய சென்று கரியோடு அரிகள் துருவி திரிவேன்
கையும் சிலையும் கணையும் கொடு கார் மிருகம் வரும் ஓர்
செய்ய நதியின் கரை-வாய் சென்றே மறைய நின்றேன்
#74
ஒரு மா முனிவன் மனையோடு ஒளி ஒன்றில ஆம் நயனம்
தரு மா மகனே துணை ஆய் தவமே புரி போழ்தினின்-வாய்
அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன்
பொரு மா கணை விட்டிடலும் புவி மீது அலறி புரள
#75
புக்கு பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று ஒலி மேல்
கைக்கண் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன்
அ கை கரியின் குரலே அன்று ஈது என்ன வெருவா
மக்கள் குரல் என்று அயர்வென் மனம் நொந்து அவண் வந்தனெனால்
#76
கையும் கடனும் நெகிழ கணையோடு உருள்வோன் காணா
மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிட மேல் வீழா
ஐய நீதான் யாவன் அந்தோ அருள்க என்று அயர
பொய் ஒன்று அறியா மைந்தன் கேள் நீ என்ன புகல்வான்
#77
இரு கண்களும் இன்றிய தாய் தந்தைக்கும் ஈங்கு அவர்கள்
பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன் பழுது ஆயினதால்
இரு குன்று அனைய புயத்தாய் இபம் என்று உணராது எய்தாய்
உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே
#78
உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு ஒரு நீ
தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன்
விண் மீது அடைவான் தொழுதான் எனவும் அவர்-பால் விளம்பு என்று
எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட ஏகினனால்
#79
மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்-பால் மகவோடு
அம் தண் புனல் கொண்டு அணுக ஐயா இது-போது அளவு ஆய்
வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம்
சந்தம் கமழும் தோளாய் தழுவிக்கொள வா எனவே
#80
ஐயா யான் ஓர் அரசன் அயோத்தி நகரத்து உள்ளேன்
மை ஆர் களபம் துருவி மறைந்தே வதிந்தேன் இருள்-வாய்
பொய்யா வாய்மை புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல்
கை ஆர் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன்
#81
வீட்டுண்டு அலறும் குரலால் வேழ குரல் அன்று எனவே
ஓட்டந்து எதிரா நீ யார் என உற்ற எலாம் உரையா
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய் நின் தாள் வணங்கா வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே இறந்து ஏகினன் விண்ணிடையே
#82
அறுத்தாய் கணையால் எனவே அடியேன்-தன்னை ஐயா
கறுத்தே அருளாய் யானோ கண்ணின் கண்டேன் அல்லேன்
மறு தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்
பொறுத்தே அருள்வாய் என்னா இரு தாள் சென்னி புனைந்தேன்
#83
வீழ்ந்தார் அயர்ந்தார் புரண்டார் விழி போயிற்று இன்று என்றார்
ஆழ்ந்தார் துன்ப கடலுள் ஐயா ஐயா என்றார்
போழ்ந்தாய் நெஞ்சை என்றார் பொன்_நாடு அதனில் போய் நீ
வாழ்ந்தே இருப்ப தரியேம் வந்தேம் வந்தேம் இனியே
#84
என்று என்று அயரும் தவரை இரு தாள் வணங்கி யானே
இன்று உம் புதல்வன் இனி நீர் ஏவும் பணி செய்திடுவேன்
ஒன்றும் தளர்வு உற்று அயரீர் ஒழி-மின் இடர் என்றிடலும்
வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான்
#85
கண்ணுள் மணி போல் மகவை இழந்தும் உயிர் காதலியா
உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார்
விண்ணின்-தலை சேருதும் யாம் எம் போல் விடலை பிரிய
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா
#86
தாவாது ஒளிரும் குடையாய் தவறு இங்கு இது நின் சரணம்
காவாய் என்றாய் அதனால் கடிய சாபம் கருதேம்
ஏவா மகவை பிரிந்து இன்று எம் போல் இடர் உற்றனை நீ
போவாய் அகல்வான் என்னா பொன்_நாட்டிடை போயினரால்
#87
சிந்தை தளர்வு உற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன் சொல்
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால்
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும்
எம்-தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான்
#88
உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல்
புரசை மத களிற்றான் பொற்கோயில் முன்னர்
முரசம் முழங்க முடி சூட்ட மொய்த்து ஆண்டு
அரசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான்
#89
வந்த முனியை முகம் நோக்கி வாள் வேந்தர்
எந்தை புகுந்த இடையூறு உண்டாயதோ
அந்தம்_இல் சோகத்து அழுத குரல் தான் என்ன
சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார்
#90
கொண்டாள் வரம் இரண்டு கேகயர்_கோன் கொம்பு அவட்கு
தண்டாத செங்கோல் தயரதனும்தான் அளித்தான்
ஒண் தார் முகிலை வனம் போகு என்று ஒருப்படுத்தாள்
எண்-தானும் வேறில்லை ஈது அடுத்தவாறு என்றான்
#91
வேந்தன் பணியினால் கைகேசி மெய் புதல்வன்
பாந்தள்-மிசை கிடந்த பார் அளிப்பான் ஆயினான்
ஏந்து தடம் தோள் இராமன் திரு மடந்தை
காந்தன் ஒரு முறை போய் காடு உறைவான் ஆயினான்
#92
வார் ஆர் முலையாரும் மற்றுள்ள மாந்தர்களும்
ஆராத காதல் அரசர்களும் அந்தணரும்
பேராத வாய்மை பெரியோன் உரை செவியில்
சாராத-முன்னம் தயரதனை போல் வீழ்ந்தார்
#93
புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப
மண் உற்று அயர்ந்து மறுகிற்று உடம்பு எல்லாம்
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே
விண் உற்றது எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை
#94
மாதர் அரும் கலமும் மங்கலமும் சிந்தி தம்
கோதை புடைபெயர கூற்று அனைய கண் சிவப்ப
பாத மலர் சிவப்ப தாம் பதைத்து பார் சேர்ந்தார்
ஊதை எறிய ஒசி பூம் கொடி ஒப்பார்
#95
ஆ ஆ அரசன் அருள் இலனே ஆம் என்பார்
காவா அறத்தை இனி கைவிடுவோம் யாம் என்பார்
தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார்
மா வாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார்
#96
கிள்ளையொடு பூவை அழுத கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத உரு அறியா
பிள்ளை அழுத பெரியோரை என் சொல்ல
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால்
#97
சேதாம்பல் போது அனைய செம் கனி வாய் வெண் தளவ
போது ஆம் பல் தோன்ற புணர் முலை மேல் பூம் தரளம்
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக
நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார்
#98
ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்று அலர்ந்த
பூவும் அழுத புனல் புள் அழுத கள் ஒழுகும்
காவும் அழுத களிறு அழுத கால் வய போர்
மாவும் அழுத அ மன்னவனை மானவே
#99
ஞானீயும் உய்கலான் என்னாதே நாயகனை
கான் ஈயும் என்று உரைத்த கைகேசியும் கொடிய
கூனீயும் அல்லால் கொடியார் பிறர் உளரோ
மேனீயும் இன்றி வெறு நீரே ஆயினார்
#100
தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார் தேர் ஓட
நீறு ஆகி சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம்
ஆறு ஆகி ஓடின கண்ணீர் அரு நெஞ்சம்
கூறு ஆகி ஓடாத இ துணையே குற்றமே
#101
மண் செய்த பாவம் உளது என்பார் மா மலர் மேல்
பெண் செய்த பாவம் அதனின் பெரிது என்பார்
புண் செய்த நெஞ்சை விதி என்பார் பூதலத்தோர்
கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார்
#102
ஆளான் பரதன் அரசு என்பார் ஐயன் இனி
மீளான் நமக்கு விதி கொடிதே காண் என்பார்
கோள் ஆகி வந்தவா கொற்ற முடிதான் என்பார்
மாளாத நம்மின் மனம் வலியார் ஆர் என்பார்
#103
ஆதி அரசன் அரும் கேகயன் மகள் மேல்
காதல் முதிர கருத்து அழிந்தான் ஆம் என்பார்
சீதை மணவாளன் தன்னோடும் தீ கானம்
போதும் அது அன்றேல் புகுதும் எரி என்பார்
#104
கையால் நிலம் தடவி கண்ணீர் மெழுகுவார்
உய்யாள் பொன் கோசலை என்று ஓவாது வெய்து_உயிர்ப்பார்
ஐயா இளங்கோவே ஆற்றுதியோ நீ என்பார்
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார்
#105
தள்ளூறு வேறு இல்லை தன் மகற்கு பார் கொள்வான்
எள்ளூறு தீ கருமம் நேர்ந்தாள் இவள் என்னா
கள் ஊறு செம் வாய் கணிகையரும் கைகேசி
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார்
#106
நின்று தவம் இயற்றி தான் தீர நேர்ந்ததோ
அன்றி உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரை
கொன்று களைய குறித்த பொருள் அதுவோ
நன்று வரம் கொடுத்த நாயகற்கு நன்று என்பார்
#107
பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து பிறந்து உலகம்
முற்று உடைய கோவை பிரியாது மொய்த்து ஈண்டி
உற்று உறைதும் யாரும் உறையவே சில் நாளில்
புற்று உடைய காடு எல்லாம் நாடாகி போம் என்பார்
#108
என்னே நிருபன் இயற்கை இருந்தவா
தன் நேர் இலாத தலைமகற்கு தாரணியை
முன்னே கொடுத்து முறை திறம்ப தம்பிக்கு
பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய் என்பார்
#109
கோதை வரி வில் குமரன் கொடுத்த நில
மாதை ஒருவர் புணர்வராம் வஞ்சித்த
பேதை சிறுவனை பின் பார்த்து நிற்குமே
சீதை பிரியினும் தீரா திரு என்பார்
#110
உந்தாது நெய் வார்த்து உதவாது கால் எறிய
நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார்
செந்தாமரை தடம் கண் செவ்வி அருள் நோக்கம்
அந்தோ பிரிதுமோ ஆ விதியே ஓ என்பார்
#111
கேட்டான் இளையோன் கிளர் ஞாலம் வரத்தினாலே
மீட்டாள் அளித்தாள் வனம் தம் முனை வெம்மை முற்றி
தீட்டாத வேல் கண் சிறு தாய் என யாவராலும்
மூட்டாத கால கடை தீ என மூண்டு எழுந்தான்
#112
கண்ணின் கடை தீ உக நெற்றியில் கற்றை நாற
விண்ணில் சுடரும் கெட மெய்யினில் நீர் விரிப்ப
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க நின்ற
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான்
#113
சிங்க குருளைக்கு இடு தீம் சுவை ஊனை நாயின்
வெம் கண் சிறு குட்டனுக்கு ஊட்ட விரும்பினாளால்
நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது நன்று இது என்னா
கங்கைக்கு இறைவன் கடக கை புடைத்து நக்கான்
#114
சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து
வில் தாங்கி வாளி பெரும் புட்டில் புறத்து வீக்கி
பற்று ஆர்ந்த செம்பொன் கவசம் பனி மேரு ஆங்கு ஓர்
புற்று ஆம் என ஓங்கிய தோளொடு மார்பு போர்க்க
#115
அடியில் சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப
பொடியில் தடவும் சிலை நாண் பெரும் பூசல் ஓசை
இடியின் தொடர கடல் ஏழும் மடுத்து இ ஞால
முடிவில் குமுறும் மழை மும்மையின் மேல் முழங்க
#116
வானும் நிலனும் முதல் ஈறு_இல் வரம்பு_இல் பூதம்
மேல்-நின்று கீழ்-காறும் விரிந்தன வீழ்வ போல
தானும் தன தம்முனும் அல்லது மும்மை ஞாலத்து
ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க
#117
புவி பாவை பரம் கெட போரில் வந்தோரை எல்லாம்
அவிப்பானும் அவித்தவர் ஆக்கையை அண்ட முற்ற
குவிப்பானும் இன்றே என கோவினை கொற்ற மௌலி
கவிப்பானும் நின்றேன் இது காக்குநர் கா-மின் என்றான்
#118
விண் நாட்டவர் மண்ணவர் விஞ்சையர் நாகர் மற்றும்
எண் நாட்டவர் யாவரும் நிற்க ஓர் மூவர் ஆகி
மண் நாட்டுநர் காக்குநர் நீக்குநர் வந்தபோதும்
பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேர் உலகத்துள் என்னா
#119
காலை கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி
ஞாலத்தவர் கோ_மகன் அ நகரத்து நாப்பண்
மாலை சிகர தனி மந்தர மேரு முந்தை
வேலை திரிகின்றது போல் திரிகின்ற வேலை
#120
வேற்று கொடியாள் விளைவித்த வினைக்கு விம்மி
தேற்ற தெளியாது அயர் சிற்றவை-பால் இருந்தான்
ஆற்றல் துணை தம்பி-தன் வில்_புயல் அண்ட கோளம்
கீற்று ஒத்து உடைய படும் நாண் உரும் ஏறு கேளா
#121
வீறு ஆக்கிய பொன் கலன் வில்லிட ஆரம் மின்ன
மாறா தனி சொல் துளி மாரி வழங்கி வந்தான்
கால் தாக்க நிமிர்ந்து புகைந்து கனன்று பொங்கும்
ஆறா கனல் ஆற்றும் ஓர் அஞ்சனம் மேகம் என்ன
#122
மின் ஒத்த சீற்ற கனல் விட்டு விளங்க நின்ற
பொன் ஒத்த மேனி புயல் ஒத்த தட கை யானை
என் அத்த என் நீ இறையேனும் முனிந்திலாதாய்
சன்னத்தன் ஆகி தனு ஏந்துதற்கு ஏது என்றான்
#123
மெய்யை சிதைவித்து நின் மேல் முறை நீத்த நெஞ்சம்
மையில் கரியாள் எதிர் நின்னை அம் மௌலி சூட்டல்
செய்ய கருதி தடைசெய்குநர் தேவர் ஏனும்
துய்யை சுடு வெம் கனலின் சுடுவான் துணிந்தேன்
#124
வல கார்முகம் என் கையது ஆக அ வானுளோரும்
விலக்கார் அவர் வந்து விலக்கினும் என் கை வாளிக்கு
இலக்கா எரிவித்து உலகு ஏழினொடு ஏழும் மன்னர்
குல காவலும் இன்று உனக்கு யான் தர கோடி என்றான்
#125
இளையான் இது கூற இராமன் இயைந்த நீதி
வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே
உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம்
விளையாத நிலத்து உனக்கு எங்ஙன் விளைந்தது என்றான்
#126
நீண்டான் அது உரைத்தலும் நித்திலம் தோன்ற நக்கு
சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்ப
பூண்டாய் பகையால் இழந்தே வனம் போதி என்றால்
யாண்டோ அடியேற்கு இனி சீற்றம் அடுப்பது என்றான்
#127
நின்-கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க
புன்கண் பொறி யாக்கை பொறுத்து உயிர் போற்றுகேனோ
என் கட்புலம் முன் உனக்கு ஈந்துவைத்து இல்லை என்ற
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்-கொல் என்றான்
#128
பின் குற்றம் மன்னும் பயக்கும் அரசு என்றல் பேணேன்
முன் கொற்ற மன்னன் முடி கொள்க என கொள்ள மூண்டது
என் குற்றம் அன்றோ இகல் மன்னவன் குற்றம் யாதோ
மின் குற்று ஒளிரும் வெயில் தீ கொடு அமைந்த வேலோய்
#129
நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே
பதியின் பிழை அன்று பயந்து நமை புரந்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த
விதியின் பிழை நீ இதற்கு என்-கொல் வெகுண்டது என்றான்
#130
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க
கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென் கோள் இழைத்தாள்
மதிக்கும் மதி ஆய் முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்
விதிக்கும் விதி ஆகும் என் வில்_தொழில் காண்டி என்றான்
#131
ஆய்தந்து அவன் அ உரை கூறலும் ஐய நின்-தன்
வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால்
நீ தந்தது அன்றே நெறியோர்-கண் நிலாதது ஈன்ற
தாய் தந்தை என்றால் அவர் மேல் சலிக்கின்றது என்னோ
#132
நல் தாதையும் நீ தனி நாயகன் நீ வயிற்றில்
பெற்றாயும் நீயே பிறர் இல்லை பிறர்க்கு நல்க
கற்றாய் இது காணுதி இன்று என கைம்மறித்தான்
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான்
#133
வரதன் பகர்வான் வரம் பெற்றவள்தான் இ வையம்
சரதம் உடையான் அவள் என் தனி தாதை செப்ப
பரதன் பெறுவான் இனி யான் படைக்கின்ற செல்வம்
விரதம் இதின் நல்லது வேறு இனி யாவது என்றான்
#134
ஆன்றான் பகர்வான் பினும் ஐய இ வைய மையல்
தோன்றா நெறி வாழ் துணை தம்முனை போர் தொலைத்தோ
சான்றோர் புகழும் தனி தாதையை வாகை கொண்டோ
ஈன்றாளை வென்றோ இனி இ கதம் தீர்வது என்றான்
#135
செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும் தெவ்வர் சொல்லும்
சொல்லும் சுமந்தேன் இரு தோள் என சோம்பி ஓங்கும்
கல்லும் சுமந்தேன் கணை புட்டிலும் கட்டு அமைந்த
வில்லும் சுமக்க பிறந்தேன் வெகுண்டு என்னை என்றான்
#136
நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான்
தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்
#137
சீற்றம் துறந்தான் எதிர்நின்று தெரிந்து செப்பும்
மாற்றம் துறந்தான் மறை நான்கு என வாங்கல் செல்லா
நால் தெண் திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே
ஏற்றம் தொடங்கா கடலின் தணிவு எய்தி நின்றான்
#138
அன்னான்-தனை ஐயனும் ஆதியொடு அந்தம் என்று
தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற
பொன் மான் உரியானும் தழீஇ என புல்லி பின்னை
சொல் மாண்பு உடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான்
#139
கண்டாள் மகனும் மகனும் தன கண்கள் போல்வார்
தண்டாவனம் செல்வதற்கே சமைந்தார்கள்-தம்மை
புண் தாங்கு நெஞ்சத்தனளாய் படி மேல் புரண்டாள்
உண்டாய துன்ப கடற்கு எல்லை உணர்ந்திலாதாள்
#140
சோர்வாளை ஓடி தொழுது ஏந்தினன் துன்பம் என்னும்
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான்
போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன்
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான்
#141
கான் புக்கிடினும் கடல் புக்கிடினும் கலி பேர்
வான் புக்கிடினும் எனக்கு அன்னவை மாண் அயோத்தி
யான் புக்கது ஒக்கும் எனை யார் நலிகிற்கும் ஈட்டார்
ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான்
#142
தாய் ஆற்றுகில்லாள்-தனை ஆற்றுகின்றார்கள்-தம்-பால்
தீ ஆற்றுகின்றார் என சிந்தையின்-நின்று செற்ற
நோய் ஆற்றுகில்லா உயிர் போல நுடங்கு இடையார்
மாயா பழியாள் தர வற்கலை ஏந்தி வந்தார்
#143
கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய்
நீர் ஆய் உக கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார்
பேரா இடர்ப்பட்டு அயலார் உறு பீழை கண்டும்
தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார்
#144
வாள் நித்தில வெண் நகையார் தர வள்ளல் தம்பி
யாணர் திருநாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம்
பூண பிறந்தானும் நின்றான் அவை போர் விலோடும்
காண பிறந்தேனும் நின்றேன் அவை காட்டும் என்றான்
#145
அன்னான் அவர் தந்தன ஆதரத்தோடும் ஏந்தி
இன்னா இடர் தீர்ந்து உடன் ஏகு என எம்பிராட்டி
சொன்னால் அதுவே துணை ஆம் என தூய நங்கை
பொன் ஆர் அடி மேல் பணிந்தான் அவளும் புகல்வாள்
#146
ஆகாதது அன்றால் உனக்கு அ வனம் இ அயோத்தி
மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும்
போகா உயிர் தாயர் நம் பூம் குழல் சீதை என்றே
ஏகாய் இனி இ-வயின் நிற்றலும் ஏதம் என்றாள்
#147
பின்னும் பகர்வாள் மகனே இவன் பின் செல் தம்பி
என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல்
முன்னம் முடி என்றனள் வார் விழி சோர நின்றாள்
#148
இருவரும் தொழுதனர் இரண்டு கன்று ஒரீஇ
வெருவரும் ஆவினின் தாயும் விம்மினாள்
பொரு_அரும் குமரரும் போயினார் புறம்
திரு அரை துகில் ஒரீஇ சீரை சாத்தியே
#149
தான் புனை சீரையை தம்பி சாத்திட
தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான்
வான் புனை இசையினாய் மறுக்கிலாது நீ
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா
#150
அன்னையர் அனைவரும் ஆழி வேந்தனும்
முன்னையர் அல்லர் வெம் துயரின் மூழ்கினார்
என்னையும் பிரிந்தனர் இடர் உறா-வகை
உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான்
#151
ஆண்தகை அ மொழி பகர அன்பனும்
தூண் தகு திரள் புயம் துளங்க துண்ணெனா
மீண்டது ஓர் உயிர் இடை விம்ம விம்முவான்
ஈண்டு உனக்கு அடியனேன் பிழைத்தது யாது என்றான்
#152
நீர் உள எனின் உள மீனும் நீலமும்
பார் உள எனின் உள யாவும் பார்ப்புறின்
நார் உள தனு உளாய் நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம் அருளுவாய் என்றான்
#153
பைம்_தொடி ஒருத்தி சொல் கொண்டு பார்_மகள்
நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா
உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன்
மைந்தன் என்று இனைய சொல் வழங்கினாய் எனா
#154
செய்து உடை செல்வமோ யாதும் தீர்ந்து எமை
கை துடைத்து ஏகவும் கடவையோ ஐய
நெய் துடைத்து அடையலர் நேய மாதர் கண்
மை துடைத்து உறை புகும் வயம் கொள் வேலினாய்
#155
உரைத்த பின் இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன்
வரை தடம் தோளினான் வதனம் நோக்கினான்
விரை தடம் தாமரை கண்ணை மிக்க நீர்
நிரைத்து இடை இடை விழ நெடிது நிற்கின்றான்
#156
அ-வயின் அரசவை அகன்று நெஞ்சகத்து
எவ்வம் இல் இருந்தவ முனிவன் எய்தினான்
செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர்
கவ்வை அம் பெரும் கடல் முனியும் கால்வைத்தான்
#157
அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான்
பொன் அரை சீரையின் பொலிவு நோக்கினான்
என் இனி உணர்த்துவது எடுத்த துன்பத்தால்
தன்னையும் உணர்ந்திலன் உணரும் தன்மையான்
#158
வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்
தாழ் வினை அது வர சீரை சாத்தினான்
சூழ் வினை நான்முகத்து ஒருவன் சூழினும்
ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கல்-பாலதோ
#159
வெம் வினையவள் தர விளைந்ததேயும் அன்று
இ வினை இவன்-வயின் எய்தல்-பாற்றும் அன்று
எ வினை நிகழ்ந்ததோ ஏவர் எண்ணமோ
செவ்விதின் ஒருமுறை தெரியும் பின் என்றான்
#160
வில் தடம் தாமரை செம் கண் வீரனை
உற்று அடைந்து ஐய நீ ஒருவி ஓங்கிய
கல் தடம் காணுதி என்னின் கண் அகல்
மல் தடம் தானையான் வாழ்கிலான் என்றான்
#161
அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல்
என்னது கடன் அவன் இடரை நீக்குதல்
நின்னது கடன் இது நெறியும் என்றனன்
பன்னக பாயலின் பள்ளி நீங்கினான்
#162
வெம் வரம்பை_இல் சுரம் விரவு என்றான் அலன்
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு
அ அரம் பொருத வேல் அரசன் ஆய்கிலாது
இ வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான்
#163
ஏன்றனன் எந்தை இ வரங்கள் ஏவினாள்
ஈன்றவள் யான் அது சென்னி ஏந்தினேன்
சான்று என நின்ற நீ தடுத்தியோ என்றான்
தோன்றிய நல் அறம் நிறுத்த தோன்றினான்
#164
என்ற பின் முனிவன் ஒன்று இயம்ப எண்ணிலன்
நின்றனன் நெடும் கணீர் நிலத்து நீர்த்து உக
குன்று அன தோளவன் தொழுது கொற்றவன்
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான்
#165
சுற்றிய சீரையன் தொடரும் தம்பியன்
முற்றிய உவகையன் முளரி போதினும்
குற்றம் இல் முகத்தினன் கொள்கை கண்டவர்
உற்றதை ஒருவகை உணர்த்துவாம்-அரோ
#166
ஐயனை காண்டலும் அணங்கு அனார்கள் தாம்
மொய் இளம் தளிர்களால் முளரி மேல் விழும்
மையலின் மதுகரம் கடியுமாறு என
கைகளின் மதர் நெடும் கண்கள் எற்றினார்
#167
தம்மையும் உணர்ந்திலர் தணப்பில் அன்பினால்
அம்மையின் இரு வினை அகற்றவோ அன்றேல்
விம்மிய பேர் உயிர் மீண்டிலாமை-கொல்
செம்மல் தன் தாதையின் சிலவர் முந்தினார்
#168
விழுந்தனர் சிலர் சிலர் விம்மி விம்மி மேல்
எழுந்தனர் சிலர் முகத்து இழி கண்ணீரிடை
அழுந்தினர் சிலர் பதைத்து அளக வல்லியின்
கொழுந்து எரி உற்று என துயரம் கூர்கின்றார்
#169
கரும்பு அன மொழியினர் கண் பனிக்கிலர்
வரம்பு_அறு துயரினால் மயங்கியே-கொலாம்
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர்
பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார்
#170
நெக்கன உடல் உயிர் நிலையில் நின்றில
இ கணம் இ கணம் என்னும் தன்மையும்
புக்கன புறத்தன புண்ணின் கண் மலர்
உக்கன நீர் வறந்து உதிர வாரியே
#171
இரு கையின் கரி நிகர் எண்_இறந்தவர்
பெருகு ஐயில் பெயர்த்தனர் தலையை பேணலர்
ஒரு கையில் கொண்டனர் உருட்டுகின்றனர்
சுரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார்
#172
சிந்தின அணி மணி சிதறி வீழ்ந்தன
பைம் துணர் மாலையின் பரிந்த மேகலை
நந்தினர் நகை ஒளி விளக்கம் நங்கைமார்
சுந்தர வதனமும் மதிக்கு தோற்றவே
#173
அறுபதினாயிரர் அரசன் தேவியர்
மறு_அறு கற்பினர் மழை கண்ணீரினர்
சிறுவனை தொடர்ந்தனர் திறந்த வாயினர்
எறி திரை கடல் என இரங்கி ஏங்கினார்
#174
கன்னி நல் மயில்களும் குயில் கணங்களும்
அன்னமும் சிறை இழந்து அவனி சேர்ந்தன
என்ன வீழ்ந்து உழந்தனர் இராமன் அல்லது
மன் உயிர் புதல்வரை மற்றும் பெற்றிலார்
#175
கிளையினும் நரம்பினும் நிரம்பும் கேழன
அளவு_இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால்
தொளை படு குழலினோடு யாழ்க்கு தோற்றன
இனையவர் அமுதினும் இனிய சொற்களே
#176
புகல் இடம் கொடு வனம் போலும் என்று தம்
மகன்-வயின் இரங்குறும் மகளிர் வாய்களால்
அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள்
பகலிடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே
#177
திடர் உடை குங்கும சேறும் சாந்தமும்
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன
மிடை முலை குவடு ஒரீஇ மேகலை தடம்
கடலிடை புகுந்த கண் கலுழி ஆறு-அரோ
#178
தண்டலை கோசல தலைவன் மாதரை
கண்டனன் இரவியும் கமல வாள் முகம்
விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும்
உண்டு இடர் உற்ற போது என் உறாதன
#179
தாயரும் கிளைஞரும் சார்ந்துளார்களும்
சேயரும் அணியரும் சிறந்த மாதரும்
காய் எரி உற்றனர் அனைய கவ்வையர்
வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர்
#180
இரைத்தனர் இரைத்து எழுந்து ஏங்கி எங்கணும்
திரை பெரும் கடல் என தொடர்ந்து பின் செல
உரைப்பதை உணர்கிலன் ஒழிப்பது ஓர்கிலன்
வரை புயத்து அண்ணல் தன் மனையை நோக்கினான்
#181
நல் நெடு நளி முடி சூட நல் மணி
பொன் நெடும் தேரொடும் பவனி போனவன்
துன் நெடும் சீரையும் சுற்றி மீண்டும் அ
பொன் நெடும் தெருவிடை போதல் மேயினான்
#182
அந்தணர் அரும் தவர் அவனி காவலர்
நந்தல்_இல் நகருளார் நாட்டுளார்கள் தம்
சிந்தை என் புகல்வது தேவர் உள்ளமும்
வெந்தனர் மேல் வரும் உறுதி வேண்டலர்
#183
அஞ்சன மேனி இ அழகற்கு எய்திய
வஞ்சனை கண்ட பின் வகிர்ந்து நீங்கலா
நெஞ்சினும் வலிது உயிர் நினைப்பது என் சில
நஞ்சினும் வலிய நம் நலம் என்றார் சிலர்
#184
மண் கொடு வரும் என வழி இருந்த யாம்
எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ
பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில்
கண் கொடு பிறத்தலும் கடை என்றார் சிலர்
#185
முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன்
உழுவை சேர் கானகத்து உறைவென் யான் என
எழுவதே எழுதல் கண்டு இருப்பதே இருந்து
அழுவதே அழகிது எம் அன்பு என்றார் சிலர்
#186
வலம் கடிந்து ஏழையர் ஆய மன்னரை
நலம் கடிந்து அறம் கெட நயத்தியோ எனா
குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை
நிலம் கடிந்தாளொடு நிகர் என்றார் சிலர்
#187
திரு அரை சுற்றிய சீரை ஆடையன்
பொரு_அரும் துயரினன் தொடர்ந்து போகின்றான்
இருவரை பயந்தவள் ஈன்ற கான்முளை
ஒருவனோ இவற்கு இ ஊர் உறவு என்றார் சிலர்
#188
முழு கலின் வலிய நம் மூரி நெஞ்சினை
மழுக்களின் பிளத்தும் என்று ஓடுவார் வழி
ஒழுக்கிய கண்ணின் நீர் கலுழி ஊற்றிடை
இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து இடர் உற்றார் சிலர்
#189
பொன் அணி மணி அணி மெய்யின் போக்கினர்
மின் என மின் என விளங்கும் மெய் விலை
பல் நிற துகிலினை பறித்து நீக்கியே
சின்ன நுண் துகிலினை செறிக்கின்றார் சிலர்
#190
நிறை மக உடையவர் நெறி செல் ஐம்பொறி
குறை மக குறையினும் கொடுப்பராம் உயிர்
முறை மகன் வனம் புக மொழியை காக்கின்ற
இறை_மகன் திருமனம் இரும்பு என்றார் சிலர்
#191
வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர்
பூம் கொடி ஒதுங்குவ போல் ஒதுங்கினர்
ஏங்கிய குரலினர் இணைந்த காந்தளின்
தாங்கிய செம் கை தம் தலையின் மேல் உளார்
#192
தலை குவட்டு அயல் மதி தவழும் மாளிகை
நிலை குவட்டு இடை இடை நின்ற நங்கைமார்
முலை குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக
மலை குவட்டு அயர்வு உறும் மயிலின் மாழ்கினார்
#193
மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை
எஞ்சல்_இல் சாளரத்து இரங்கும் இன் சொலார்
அஞ்சன கண்ணின் நீர் அருவி சோர்தர
பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார்
#194
நல் நெடும் கண்களின் நான்ற நீர் துளி
தன் நெடும் தாரைகள் தளத்தின் வீழ்தலால்
மன் நெடும் குமரன்-மாட்டு அழுங்கி மாடமும்
பொன் நெடும் கண் குழித்து அழுவ போன்றவே
#195
மக்களை மறந்தனர் மாதர் தாயரை
புக்கு_இடம் அறிந்திலர் புதல்வர் பூசலிட்டு
உக்கனர் உயங்கினர் உருகி சோர்ந்தனர்
துக்கம் நின்று அறிவினை சூறையாடவே
#196
காமரம் கனிந்து என கனிந்த மென் மொழி
மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால்
தே மரு நறும் குழல் திருவின் நீங்கிய
தாமரை ஒத்தன தவள மாடமே
#197
மழை குலம் புரை குழல் விரிந்து மண் உற
குழை குலம் முகத்தியர் குழாங்கள் ஏங்கின
இழை குலம் சிதறிட ஏவுண்டு ஓய்வுறும்
உழை குலம் உழைப்பன ஒத்து ஓர் பால் எல்லாம்
#198
கொடி அடங்கின மனை குன்றம் கோ முரசு
இடி அடங்கின முழக்கு இழந்த பல்_இயம்
படி அடங்கலும் நிமிர் பசும் கண் மாரியால்
பொடி அடங்கின மதில் புறத்து வீதியே
#199
அட்டிலும் இழந்தன புகை அகில் புகை
நெட்டிலும் இழந்தன நிறைந்த பால் கிளி
வட்டிலும் இழந்தன மகளிர் வான் மணி
தொட்டிலும் இழந்தன மகவும் சோரவே
#200
ஒளி துறந்தன முகம் உயிர் துறந்து என
துளி துறந்தன முகில் தொகையும் தூய மா
வளி துறந்தன மதம் துறந்த யானையும்
களி துறந்தன மலர் கள் உண் வண்டுமே
#201
நிழல் பிரிந்தன குடை நெடும் கண் ஏழையர்
குழல் பிரிந்தன மலர் குமரர் தாள் இணை
கழல் பிரிந்தன சின காமன் வாளியும்
அழல் பிரிந்தன துணை பிரிந்த அன்றிலே
#202
தார் ஒலி நீத்தன புரவி தண்ணுமை
வார் ஒலி நீத்தன மழையின் விம்முறும்
தேர் ஒலி நீத்தன தெருவும் தெண் திரை
நீர் ஒலி நீத்தன நீத்தம் போலுமே
#203
முழவு எழும் ஒலி இல முறையின் யாழ் நரம்பு
எழ எழும் ஒலி இல இமைப்பு இல் கண்ணினர்
விழவு எழும் ஒலி இல வேறும் ஒன்று இல
அழ எழும் ஒலி அலது அரச வீதியே
#204
தெள் ஒலி சிலம்புகள் சிலம்பு போல் மனை
நள் ஒலித்தில நளிர் கலையும் அன்னவே
புள் ஒலித்தில புனல் பொழிலும் அன்னவே
கள் ஒலித்தில மலர் களிறும் அன்னவே
#205
செய்ம் மறந்தன புனல் சிவந்த வாய்ச்சியர்
கைம் மறந்தன பசும் குழவி காந்து எரி
நெய்ம் மறந்தன நெறி அறிஞர் யாவரும்
மெய்ம் மறந்தனர் ஒலி மறந்த வேதமே
#206
ஆடினர் அழுதனர் அமுத ஏழ் இசை
பாடினர் அழுதனர் பரிந்த கோதையர்
ஊடினர் அழுதனர் உயிரின் அன்பரை
கூடினர் அழுதனர் குழாம் குழாம் கொடே
#207
நீட்டில களிறு கை நீரின் வாய் புதல்
பூட்டில புரவிகள் புள்ளும் பார்ப்பினுக்கு
ஈட்டில இரை புனிற்று ஈன்ற கன்றையும்
ஊட்டில கறவை நைந்து உருகி சோர்ந்தவே
#208
மாந்தர்-தம் மொய்ம்பினின் மகளிர் கொங்கை ஆம்
ஏந்து இளநீர்களும் வறுமை எய்தின
சாந்து அயர் மகிழ்நர்-தம் முடியில் தையலார்
கூந்தலின் வறுமைய மலரின் கூலமே
#209
ஓடை நல் அணி முனிந்தன உயர் களிறு உச்சி
சூடை நல் அணி முனிந்தன தொடர் மனை கொடியின்
ஆடை நல் அணி முனிந்தன அம் பொன் செய் இஞ்சி
பேடை நல் அணி முனிந்தன மென் நடை புறவம்
#210
திக்கு நோக்கிய தீவினை பயன் என சிந்தை
நெக்கு நோக்குவோர் நல்வினை பயன் என நேர்வோர்
பக்கம் நோக்கல் என் பருவரல் இன்பம் என்று இரண்டும்
ஒக்க நோக்கிய யோகரும் அரும் துயர் உழந்தார்
#211
ஓவு_இல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய
மேவு தொல் அழகு எழில் கெட விம்மல் நோய் விம்ம
தாவு இல் ஐம்பொறி மறுகு உற தயரதன் என்ன
ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம்
#212
உயங்கி அ நகர் உலைவு உற ஒருங்கு உழைச்சுற்றம்
மயங்கி ஏங்கினர் வயின்வயின் வரம்பு இலர் தொடர
இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன்
தயங்கு பூண் முலை சானகி இருந்துழி சார்ந்தான்
#213
அழுது தாயரோடு அரும் தவர் அந்தணர் அரசர்
புழுதி ஆடிய மெய்யினர் புடை வந்து பொரும
பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா
எழுது பாவை அன்னாள் மன துணுக்கமொடு எழுந்தாள்
#214
எழுந்த நங்கையை மாமியர் தழுவினர் ஏங்கி
பொழிந்த உண்கண் நீர் புது புனல் ஆட்டினர் புலம்ப
அழிந்த சிந்தையள் அன்னமும் இன்னது என்று அறியாள்
வழிந்த நீர் நெடும் கண்ணினள் வள்ளலை நோக்கி
#215
பொன்னை உற்ற பொலம் கழலோய் புகழ்
மன்னை உற்றது உண்டோ மற்று இ வன் துயர்
என்னை உற்றது இயம்பு என்று இறைஞ்சினாள்
மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள்
#216
பொரு_இல் எம்பி புவி புரப்பான் புகழ்
இருவர் ஆணையும் ஏந்தினென் இன்று போய்
கருவி மா மழை கல்_தடம் கண்டு நான்
வருவென் ஈண்டு வருந்தலை நீ என்றான்
#217
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்
மேய மண் இழந்தான் என்றும் விம்மலள்
நீ வருந்தலை நீங்குவென் யான் என்ற
தீய வெம் சொல் செவி சுட தேம்புவாள்
#218
துறந்து போம் என சொற்ற சொல் தேறுமோ
உறைந்த பாற்கடல் சேக்கை உடன் ஒரீஇ
அறம் திறம்பல் கண்டு ஐயன் அயோத்தியில்
பிறந்த பின்பும் பிரியலள் ஆயினாள்
#219
அன்ன தன்மையள் ஐயனும் அன்னையும்
சொன்ன செய்ய துணிந்தது தூயதே
என்னை என்னை இருத்தி என்றான் எனா
உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள்
#220
வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்
கல் அரக்கும் கடுமைய அல்ல நின்
சில் அரக்குண்ட சேவடி போது என்றான்
#221
பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெரும் காடு என்றாள்
#222
அண்ணல் அன்ன சொல் கேட்டனன் அன்றியும்
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்
கண்ணில் நீர் கடல் கைவிட நேர்கிலன்
எண்ணுகின்றனன் என் செயல்-பாற்று எனா
#223
அனைய வேலை அக மனை எய்தினள்
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்
நினையும் வள்ளல் பின் வந்து அயல் நின்றனள்
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள்
#224
ஏழை-தன் செயல் கண்டவர் யாவரும்
வீழும் மண்ணிடை வீழ்ந்தனர் வீந்திலர்
வாழும் நாள் உள என்ற பின் மாள்வரோ
ஊழி பேரினும் உய்குநர் உய்வரே
#225
தாயர் தவ்வையர் தன் துணை சேடியர்
ஆய மன்னிய அன்பினர் என்று இவர்
தீயில் மூழ்கினர் ஒத்தனர் செங்கணான்
தூய தையலை நோக்கினன் சொல்லுவான்
#226
முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும்
வெல்லும் வெண் நகையாய் விளைவு உன்னுவாய்
அல்லை போத அமைந்தனை ஆதலின்
எல்லை_அற்ற இடர் தருவாய் என்றான்
#227
கொற்றவன் அது கூறலும் கோகிலம்
செற்றது அன்ன குதலையள் சீறுவாள்
உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே
என் துறந்த பின் இன்பம்-கொலாம் என்றாள்
#228
சீரை சுற்றி திருமகள் பின் செல
மூரி வில் கை இளையவன் முன் செல
காரை ஒத்தவன் போம்படி கண்ட அ
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ
#229
ஆரும் பின்னர் அழுது அவலித்திலர்
சோரும் சிந்தையர் யாவரும் சூழ்ந்தனர்
வீரன் முன் வனம் மேவுதும் யாம் எனா
போர் என்று ஒல்லொலி கைம்மிக போயினார்
#230
தாதை வாயில் குறுகினன் சார்தலும்
கோதை வில்லவன் தாயரை கும்பிடா
ஆதி மன்னனை ஆற்று-மின் நீர் என்றான்
மாதராரும் விழுந்து மயங்கினார்
#231
வாழ்த்தினார் தம் மகனை மருகியை
ஏத்தினார் இளையோனை வழுத்தினார்
காத்து நல்கு-மின் தெய்வதங்காள் என்றார்
நா தழும்ப அரற்றி நடுங்குவார்
#232
அன்ன தாயர் அரிதின் பிரிந்த பின்
முன்னர் நின்ற முனிவனை கைதொழா
தன்னது ஆருயிர் தம்பியும் தாமரை
பொன்னும் தானும் ஒர் தேர் மிசை போயினான்

5 சுமந்திரன் மீட்சிப் படலம்

தைலம் ஆட்டு படலம்

#1
ஏவிய குரிசில் பின் யாவர் ஏகிலார்
மா இயல் தானை அ மன்னை நீங்கலா
தேவியர் ஒழிந்தனர் தெய்வ மா நகர்
ஓவியம் ஒழிந்தன உயிர் இலாமையால்
#2
கைகள் நீர் பரந்து கால் தொடர கண் உகும்
வெய்ய நீர் வெள்ளத்து மெள்ள சேறலால்
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல்
தெய்வ மீன் ஒத்தது அ செம்பொன் தேர்-அரோ
#3
மீன் பொலிதர வெயில் ஒதுங்க மேதியோடு
ஆன் புக கதிரவன் அத்தம் புக்கனன்
கான் புக காண்கிலேன் என்று கல்லிடை
தான் புக முடுகினன் என்னும் தன்மையான்
#4
பகுத்த வான் மதி கொடு பதுமத்து அண்ணலே
வகுத்த வாள் நுதலியர் வதன ராசி போல்
உகுத்த கண்ணீரினின் ஒளியும் நீங்கிட
முகிழ்த்து அழகு இழந்தன முளரி ஈட்டமே
#5
அந்தியில் வெயில் ஒளி அழிய வானகம்
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன்
மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய
சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே
#6
பரந்து மீன் அரும்பிய பசலை வானகம்
அரந்தை_இல் முனிவரன் அறைந்த சாபத்தால்
நிரந்தரம் இமைப்பு இலா நெடும் கண் ஈண்டிய
புரந்தரன் உரு என பொலிந்தது எங்குமே
#7
திரு நகர்க்கு ஓசனை இரண்டு சென்று ஒரு
விரை செறி சோலையை விரைவின் எய்தினான்
இரதம்-நின்று இழிந்து பின் இராமன் இன்புறும்
உரை செறி முனிவரோடு உறையும் காலையே
#8
வட்டம் ஓர் ஓசனை வளைவிற்றாய் நடு
எள்-தனை இடவும் ஓர் இடம் இலா வகை
புள் தகு சோலையின் புறத்தை சூழ்ந்து தாம்
விட்டிலர் குரிசிலை வேந்தர் வேறுளோர்
#9
குயின்றன குல மணி நதியின் கூலத்தில்
பயின்று உயர் வாலுக பரப்பில் பைம் புலில்
வயின்-தொறும் வயின்-தொறும் வைகினர் ஒன்றும்
அயின்றிலர் துயின்றிலர் அழுது விம்மினார்
#10
வாவி விரி தாமரையின் மா மலரின் வாச
காவி விரி நாள்_மலர் முகிழ்த்து அனைய கண்ணார்
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக
நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார்
#11
பெரும் பகல் வருந்தினர் பிறங்கு முலை தெங்கின்
குரும்பைகள் பொரும் செவிலி மங்கையர் குறங்கில்
அரும்பு அனைய கொங்கை அயில் அம்பு அனைய உண்கண்
கரும்பு அனைய செம் சொல் நவில் கன்னியர் துயின்றார்
#12
பூ அகம் நிறைந்த புளின திரள்கள்-தோறும்
மா வகிரின் உண்கணர் மட பிடியின் வைக
சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன
தூ அகல்_இல் குந்தம் மறம் மைந்தர்கள் துயின்றார்
#13
மாக மணி வேதிகையில் மாதவி செய் பந்தர்
கேகய நெடும் குலம் என சிலர் கிடந்தார்
பூக வனம்-ஊடு படுகர் புளின முன்றில்
தோகை இள அன்ன நிரையின் சிலர் துயின்றார்
#14
சம்பக நறும் பொழில்களில் தருண வஞ்சி
கொம்பு அழுது ஒசிந்தன என சிலர் குழைந்தார்
வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும்
அம் பவள வல்லிகள் என சிலர் அசைந்தார்
#15
தகவும் மிகு தவமும் இவை தழுவ உயர் கொழுநர்
முகமும் அவர் அருளும் நுகர்கிலர்கள் துயர் முடுக
அகவும் இள மயில்கள் உயிர் அலசியன அனையார்
மகவு முலை வருட இள மகளிர்கள் துயின்றார்
#16
குங்கும மலை குளிர் பனி குழுமி என்ன
துங்க முலையில் துகள் உற சிலர் துயின்றார்
அங்கை அணையில் பொலிவு அழுங்க முகம் எல்லாம்
பங்கயம் முகிழ்த்தன என சிலர் படிந்தார்
#17
ஏனையரும் இன்னணம் உறங்கினர் உறங்கா
மானவனும் மந்திரி சுமந்திரனை வா வென்று
ஊனம்_இல் பெரும் குணம் ஒருங்கு உடைய உன்னால்
மேல் நிகழ்வது உண்டு அ உரை கேள் என விளம்பும்
#18
பூண்ட பேர் அன்பினாரை போக்குவது அரிது போக்காது
ஈண்டு-நின்று ஏகல் பொல்லாது எந்தை நீ இரதம் இன்னே
தூண்டினை மீள்வது ஆக்கின் சுவட்டை ஓர்ந்து என்னை அங்கே
மீண்டனன் என்ன மீள்வர் இது நின்னை வேண்டிற்று என்றான்
#19
செவ்விய குரிசில் கூற தேர் வலான் செப்புவான் அ
வெவ்விய தாயின் தீய விதியினின் மேலன் போலாம்
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன்
அ-வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான்
#20
தேவியும் இளவலும் தொடர செல்வனை
பூ இயல் கானகம் புக உய்த்தேன் என்கோ
கோவினை உடன் கொடு குறுகினேன் என்கோ
யாவது கூறுகேன் இரும்பின் நெஞ்சினேன்
#21
தார் உடை மலரினும் ஒதுங்க தக்கிலா
வார் உடை முலையொடும் மதுகை மைந்தரை
பாரிடை செலுத்தினேன் பழைய நண்பினேன்
தேரிடை வந்தனன் தீது இலேன் என்கோ
#22
வன் புல கல் மன மதி இல் வஞ்சனேன்
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்-பால்
உன் புலக்கு உரிய சொல் உணர்த்த செல்கெனோ
தென் புல கோ_மகன் தூதின் செல்கெனோ
#23
நால் திசை மாந்தரும் நகர மாக்களும்
தேற்றினர் கொணர்வார் என் சிறுவன்-தன்னை என்று
ஆற்றின அரசனை ஐய வெய்ய என்
கூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன்-கொலோ
#24
அங்கி மேல் வேள்வி செய்து அரிதின் பெற்ற நின்
சிங்க ஏறு அகன்றது என்று உணர்த்த செல்கெனோ
எங்கள் கோ_மகற்கு இனி என்னின் கேகயன்
நங்கையே கடைமுறை நல்லள் போலுமால்
#25
முடிவுற இன்னை மொழிந்த பின்னரும்
அடி உற தழுவினன் அழுங்கு பேர் அரா
இடி உற துவளுவது என்னும் இன்னலன்
படி உற புரண்டனன் பலவும் பன்னினான்
#26
தட கையால் எடுத்து அவன் தழுவி கண்ண நீர்
துடைத்து வேறு இருத்தி மற்று இனைய சொல்லினான்
அடக்கும் ஐம்பொறியொடு கரணத்து அப்புறம்
கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான்
#27
பிறத்தல் ஒன்று உற்ற பின் பெறுவ யாவையும்
திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய்
புறத்துறு பெரும் பழி பொது இன்று எய்தலும்
அறத்தினை மறத்தியோ அவலம் உண்டு எனா
#28
முன்பு நின்று இசை நிறீஇ முடிவு முற்றிய
பின்பும் நின்று உறுதியை பயக்கும் பேர் அறம்
இன்பம் வந்து உறும் எனின் இனியதாய் இடை
துன்பம் வந்து உறும் எனின் துறங்கல் ஆகுமோ
#29
நிற பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற
மற பயன் விளைத்திடல் வன்மை அன்று-அரோ
இறப்பினும் திரு எலாம் இழப்ப எய்தினும்
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே
#30
கான் புறம் சேறலில் அருமை காண்டலால்
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம்
யான் பிறந்து அறத்தின்-நின்று இழுக்கிற்று என்னவோ
ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய்
#31
வினைக்கு அரு மெய்ம்மையன் வனத்துள் விட்டனன்
மனக்கு அரும் புதல்வனை என்றல் மன்னவன்
தனக்கு அரும் தவம் அது தலைக்கொண்டு ஏகுதல்
எனக்கு அரும் தவம் இதற்கு இரங்கல் எந்தை நீ
#32
முந்தினை முனிவனை குறுகி முற்றும் என்
வந்தனை முதலிய மாற்றம் கூறி பின்
எந்தையை அவனொடும் எய்தி ஆண்டு என
சிந்தனை உணர்த்துதி என்று செப்புவான்
#33
முனிவனை எம்பியை முறையில் நின்று அரும்
புனித வேதியர்க்கும் மேல் உறை புத்தேளிர்க்கும்
இனியன இழைத்தி என்று இயம்பி என் பிரி
தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால்
#34
வெவ்வியது அன்னையால் விளைந்தது ஈண்டு ஒரு
கவ்வை என்று இறையும் தன் கருத்தின் நோக்கலன்
எ அருள் என்-வயின் வைத்தது இன் சொலால்
அ அருள் அவன்-வயின் அருளுக என்றியால்
#35
வேண்டினென் இ வரம் என்று மேலவன்
ஈண்டு அருள் எம்பி-பால் நிறுவி ஏகினை
பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு எனது
ஆண்தகை வேந்தனை அவலம் ஆற்றி பின்
#36
ஏழ்_இரண்டு ஆண்டும் நீத்து ஈண்ட வந்து உனை
தாழ்குவென் திருவடி தப்பிலேன் என
சூழி வெம் களிற்று இறை தனக்கு சோர்வு இலா
வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய்
#37
முறைமையால் என் பயந்தெடுத்த மூவர்க்கும்
குறைவு_இலா என் நெடு வணக்கம் கூறி பின்
இறை_மகன் துயர் துடைத்து இருத்தி மாடு என்றான்
மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான்
#38
ஆள்வினை ஆணையின் திறம்பல் அன்று எனா
தாள்_முதல் வணங்கிய தனி திண் தேர் வலான்
ஊழ்வினை வசத்து உயிர் நிலை என்று உன்னுவான்
வாள் விழி சனகியை வணங்கி நோக்கினான்
#39
அன்னவள் கூறுவாள் அரசர்க்கு அத்தையர்க்கு
என்னுடை வணக்கம் முன் இயம்பி யானுடை
பொன் நிற பூவையும் கிளியும் போற்று-மின்
என்ன மற்று எங்கையர்க்கு இயம்புவாய் என்றாள்
#40
தேர் வலான் அ உரை கேட்டு தீங்கு உறின்
யார் வலார் உயிர் துறப்பு எளிது அன்றே எனா
போர் வலான் தடுக்கவும் பொருமி விம்மினான்
சோர்வு_இலாள் அறிகிலா துயர்க்கு சோர்கின்றான்
#41
ஆறினன் போல் சிறிது அவலம் அ வழி
வேறு இலா அன்பினான் விடை தந்தீக எனா
ஏறு சேவகன் தொழுது இளைய மைந்தனை
கூறுவது யாது என இனைய கூறினான்
#42
உரை-செய்து எம் கோ_மகற்கு உறுதி ஆக்கிய
தரை கெழு திருவினை தவிர்த்து மற்று ஒரு
விரை செறி குழலி-மாட்டு அளித்த மெய்யனை
அரைசன் என்று இன்னம் ஒன்று அறையல்-பாலதோ
#43
கானகம் பற்றி நல் புதல்வன் காய் உண
போனகம் பற்றிய பொய்_இல் மன்னற்கு இங்கு
ஊனகம் பற்றிய உயிர் கொடு இன்னும் போய்
வானகம் பற்றிலா வலிமை கூறு என்றான்
#44
மின்-உடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு என்
மன்-உடன் பிறந்திலென் மண் கொண்டு ஆள்கின்றான்
தன்-உடன் பிறந்திலென் தம்பி முன் அலென்
என்-உடன் பிறந்த யான் வலியன் என்றியால்
#45
ஆரியன் இளவலை நோக்கி ஐய நீ
சீரிய_அல்லன செப்பல் என்ற பின்
பாரிடை வணங்கினன் பரியும் நெஞ்சினன்
தேரிடை வித்தகன் சேறல் மேயினான்
#46
கூட்டினன் தேர் பொறி கூட்டி கோள் முறை
பூட்டினன் புரவி அ புரவி போம் நெறி
காட்டினன் காட்டி தன் கல்வி மாட்சியால்
ஓட்டினன் ஒருவரும் உணர்வுறாமலே
#47
தையல்-தன் கற்பும் தன் தகவும் தம்பியும்
மை_அறு கருணையும் உணர்வும் வாய்மையும்
செய்ய தன் வில்லுமே சேமமாக கொண்டு
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே

6 தயரதன் மோட்சப் படலம்

#1
பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரை பொருந்தி அன்னார்
செய் வினைக்கு உதவும் நட்பால் செல்பவர் தடுப்பது ஏய்க்கும்
மை விளக்கியதே அன்ன வயங்கு இருள் துரக்க வானம்
கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள்
#2
மருமத்து தன்னை ஊன்றும் மற கொடும் பாவம் தீர்க்கும்
உரும் ஒத்த சிலையினோரை ஒருப்படுத்து உதவி நின்ற
கருமத்தின் விளைவை எண்ணி களிப்பொடு காண வந்த
தருமத்தின் வதனம் என்ன பொலிந்தது தனி வெண் திங்கள்
#3
காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கி
தேம்பின குவிந்த போலும் செங்கழுநீரும் சேரை
பாம்பின தலைய ஆகி பரிந்தன குவிந்து சாய்ந்த
ஆம்பலும் என்ற-போது நின்ற போது அலர்வது உண்டோ
#4
அஞ்சன குன்றம் அன்ன அழகனும் அழகன் தன்னை
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான்
வெம் சிலை புருவத்தாள்-தன் மெல் அடிக்கு ஏற்ப வெண் நூல்
பஞ்சிடை படுத்தால் அன்ன வெண்ணிலா பரப்ப போனார்
#5
சிறுகு இடை வருந்த கொங்கை ஏந்திய செல்வம் என்னும்
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின்
நறியன தொடர்ந்து சென்று நடந்தனள் நவையின் நீங்கும்
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ
#6
பரிதி வானவனும் கீழ்-பால் பரு வரை பற்றா-முன்னம்
திருவின் நாயகனும் தென்-பால் யோசனை இரண்டு போனான்
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும்
துரித மான் தேரில் போனான் செய்தது சொல்லலுற்றாம்
#7
கடிகை ஓர் இரண்டு மூன்றில் கடி மதில் அயோத்தி கண்டான்
அடி இணை தொழுதான் ஆதி முனிவனை அவனும் உற்ற
படி எலாம் கேட்டு நெஞ்சில் பருவரல் உழந்தான் முன்னே
முடிவு எலாம் உணர்ந்தான் அந்தோ முடிந்தனன் மன்னன் என்றான்
#8
நின்று உயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க வள்ளல்
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான்
வென்றவர் உளரோ மேலை விதியினை என்று விம்மி
பொன் திணி மன்னன் கோயில் சுமந்திரனோடும் போனான்
#9
தேர் கொண்டு வள்ளல் வந்தான் என்று தம் சிந்தை உந்த
ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றி
கார் கொண்ட மேனியானை கண்டிலர் கண்ணில் வற்றா
நீர் கொண்ட நெடும் தேர் பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார்
#10
இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும்
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான்
புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி
விரத மா தவனை கண்டான் வீரன் வந்தனனோ என்றான்
#11
இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான்
வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம்
சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயர் உறு முனிவன் நான் இ
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான்
#12
நாயகன் பின்னும் தன் தேர் பாகனை நோக்கி நம்பி
சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர் வலானும்
வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலை பொன்னும்
போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்
#13
இந்திரன் முதல்வராய கடவுளர் யாரும் ஈண்டி
சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி
வந்தனன் எந்தை தந்தை என மனம் களித்து வள்ளல்
உந்தியான் உலகின் உம்பர் மீள்கு_இலா உலகத்து உய்த்தார்
#14
உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி
அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி
மயில்_குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள்
வெயில் சுடு கோடை தன்னில் என்பு_இலா உயிரின் வேவாள்
#15
இருந்த அந்தணனோடு எல்லாம் ஈன்றவன் தன்னை ஈன
பெரும் தவம் செய்த நங்கை கணவனில் பிரிந்து தெய்வ
மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி
அரும் துணை இழந்த அன்றில் பெடை என அரற்றலுற்றாள்
#16
தானே தானே தஞ்சம் இலாதான் தகைவு இல்லான்
போனான் போனான் எங்களை நீத்து இப்பொழுது என்னா
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற
மீனே என்ன மெய் தடுமாறி விழுகின்றாள்
#17
ஒன்றோ நல் நாட்டு உய்க்குவர் இ நாட்டு உயிர் காப்பார்
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே
இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான்
கொன்றான் அன்றே தந்தையை என்றாள் குலைகின்றாள்
#18
நோயும் இன்றி நோன் கதிர் வாள் வேல் இவை இன்றி
மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன்
காயும் புள்ளி கற்கடம் நாகம் கனி வாழை
வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள்
#19
வடி தாழ் கூந்தலில் கேகயன் மாதே மதியாலே
பிடித்தாய் வையம் பெற்றனை பேரா வரம் இன்னே
முடித்தாய் அன்றே மந்திரம் என்றாள் முகில்-வாய் மின்
துடித்தால் என்ன மன்னவன் மார்பில் துவள்கின்றாள்
#20
அரும் தேரானை சம்பரனை பண்டு அமர் வென்றாய்
இருந்தார் வானோர் உன் அருளாலே இனிது அன்னார்
விருந்து ஆகின்றாய் என்றனள் வேழத்து அரசு ஒன்றை
பிரிந்தே துன்பத்து ஆழ் பிடி என்ன பிணியுற்றாள்
#21
வேள்வி செல்வம் துய்த்தி-கொல் மெய்ம்மை துறை மேவும்
சூழ்வின் செல்வம் துய்த்தி-கொல் தோலா மனு நூலின்
வாழ்வு செல்வம் துய்த்தி-கொல்-மன் என்றனள் வானோர்
கேள்வி செல்வம் துய்க்க வயிற்று ஓர் கிளை தந்தான்
#22
ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற
தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர
ஊழி திரிவது என கோயில் உலையும் வேலை மற்று ஒழிந்த
மாழை உண்கண் தேவியரும் மயிலின் குழாத்தின் வந்து இரைந்தார்
#23
துஞ்சினானை தம் உயிரின் துணையை கண்டார் துணுக்கத்தால்
நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்காநின்றார் என்றாலும்
அஞ்சி அழுங்கி விழுந்திலரால் அன்பின் தறுகண் பிறிது உண்டோ
வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார்
#24
அளம் கொள் அளக்கர் இரும் பரப்பில் அண்டர் உலகில் அப்புறத்தில்
விளங்கும் மாதர் கற்பினார் இவரின் யாரோ என நின்றார்
களங்கம் நீத்த மதி முகத்தார் கான வெள்ளம் கால் கோப்ப
துளங்கல் இல்லா தனி குன்றில் தொக்க மயிலின் சூழ்ந்து இருந்தார்
#25
கைத்த சொல்லால் உயிர் இழந்தும் புதல்வன் பிரிந்தும் கடை ஓட
மெய்த்த வேந்தன் திரு உடம்பை பிரியார் பற்றி விட்டிலரால்
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவி பெரிய கடல் கடக்க
உய்த்து மீண்ட நாவாயில் தாமும் போவார் ஒக்கின்றார்
#26
மாதரார்கள் அறுபதினாயிரரும் உள்ளம் வலித்து இருப்ப
கோது இல் குணத்து கோசலையும் இளைய மாதும் குழைந்து ஏங்க
சோதி மணி தேர் சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல வந்த
வேத முனிவன் விதி செய்த வினையை நோக்கி விம்முவான்
#27
செய்ய கடவ செயற்கு உரிய சிறுவர் ஈண்டை யார் அல்லர்
எய்த கடவ பொருள் எய்தாது இகவாது என்ன இயல்பு எண்ணா
மையல் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்ன
தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான்
#28
தேவிமாரை இவற்கு உரிமை செய்யும் நாளில் செம் தீயின்
ஆவி நீத்திர் என நீக்கி அரிவைமார்கள் இருவரையும்
தா இல் கோயில் தலை இருத்தி தண் தார் பரதன் கொண்டு அணைக என்று
ஏவினான் மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்தோரை
#29
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான்
சேனாபதியின் சுமந்திரனை செயற்பாற்கு உரிய செய்க என்றான்
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம்
#30
மீன் நீர் வேலை முரசு இயம்ப விண்ணோர் ஏத்த மண் இறைஞ்ச
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க சுடர் தேர் ஏறி தோன்றினான்
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வரும் அளவும்
யானே காப்பென் இ உலகை என்பான் போல எறி கதிரோன்
#31
வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு
இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார் அருள் இருக்கும்
பெரும் தாமரை கண் கரு முகிலை பெயர்ந்தார் காணார் பேதுற்றார்
பொருந்தா நயனம் பொருந்தி நமை பொன்ற சூழ்ந்த என புரண்டார்
#32
எட்டு திசையும் ஓடுவான் எழுவார் விழுவார் இடர் கடல் உள்
விட்டு நீத்தான் நமை என்பார் வெய்ய ஐயன் வினை என்பார்
ஒட்டி படர்ந்த தண்டகம் இ உலகத்து உளது அன்றோ உணர்வை
சுட்டு சோர்தல் பழுது அன்றோ தொடர்தும் தேரின் சுவடு என்பார்
#33
தேரின் சுவடு நோக்குவார் திரு மா நகரின் மிசை திரிய
ஊரும் திகிரி குறி கண்டார் உவந்தார் எல்லாம் உயிர் வந்தார்
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி
காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார்
#34
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி
ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து
போன பொழுதில் புகுந்த உயிர் பொறுத்தார் ஒத்தார் பொரு_அரிய
வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர்
#35
ஆறு செல்ல செல்ல தேர் ஆழி கண்டார் அயல்-பால
வேறு சென்ற நெறி காணார் விம்மாநின்ற உவகையராய்
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும்
ஏறி ஒடுங்கும் எறி கடல் போல் எயில் மா நகரம் எய்தினார்
#36
புக்கார் அரசன் பொன்_உலகம் போனான் என்னும் பொருள் கேட்டார்
உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால்
தக்கான் போனான் வனம் என்னும் தகையும் உணர்ந்தார் மிகை ஆவி
அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால்
#37
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய
இன்னல் சிறையின் இடைப்பட்டார் இருந்தார் நின்ற அரும் தவனும்
உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று
பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து பதைப்பை நீக்கினான்
#38
வெள்ளத்திடை வாழ் வட அனலை அஞ்சி வேலை கடவாத
பள்ள கடலின் முனி பணியால் பையுள் நகரம் வைகிட மேல்
வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் வயங்கு இருளின்
நள்ளில் போன வரி சிலை கை நம்பி செய்கை நடத்துவாம்

7 கங்கைப் படலம்

#1
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான்
#2
அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள் கடல் அமிழ்தின்
தெளிவு அன்னது ஓர் மொழியாள் நிறை தவம் அன்னது ஓர் செயலாள்
வெளி அன்னது ஓர் இடையாளொடும் விடை அன்னது ஓர் நடையான்
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான்
#3
அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா
நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான்
துஞ்சும் களி வரி வண்டுகள் குழலின் படி சுழலும்
கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள்
#4
மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின்
பாகம் தரும் நுதலாளொடு பவளம் தரும் இதழான்
மேகம் தனி வருகின்றது மின்னோடு என மிளிர் பூண்
நாகம் நனி வருகின்றது பிடியோடு என நடவா
#5
தொளை கட்டிய கிளை முட்டிய சுருதி சுவை அமுதின்
கிளை கட்டிய கருவி கிளர் இசையின் பசை நறவின்
விளை கட்டியின் மதுரித்து எழு கிளவி கிளி விழி போல்
களை கட்டவர் தளை விட்டு எறி குவளை தொகை கண்டான்
#6
அருப்பு ஏந்திய கலச துணை அமுது ஏந்திய மத மா
மருப்பு ஏந்திய எனல் ஆம் முலை மழை ஏந்திய குழலாள்
கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள் இடர் காணாள்
பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினள் போனாள்
#7
பல் நந்து உகு தரளம் தொகு படர் பந்திகள் படு நீர்
அன்னம் துயில் வதி தண்டலை அயல் நந்து உளை புளினம்
சின்னம் தரும் மலர் சிந்திய செறி நந்தனவனம் நல்
பொன் உந்திய நதி கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார்
#8
கால் பாய்வன முது மேதிகள் கதிர் மேய்வன கடைவாய்
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம்
போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார்
#9
பரிதி பற்றிய பல் கலன் முற்றினர்
மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ
சுருதி கற்று உயர் தோம்_இலர் சுற்றுறும்
விரி திரை புனல் கங்கையை மேவினார்
#10
கங்கை என்னும் கடவுள் திரு நதி
தங்கி வைகும் தபோதனர் யாவரும்
எங்கள் செல்_கதி வந்தது என்று ஏமுறா
அம் கண் நாயகன் காண வந்து அண்மினார்
#11
பெண்ணின் நோக்கும் சுவையில் பிறர் பிறர்க்கு
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை
பண்ணின் நோக்கும் பரா அமுதை பசும்
கண்ணின் நோக்கினர் உள்ளம் களிக்கின்றார்
#12
எதிர்கொண்டு ஏத்தினர் இன் இசை பாடினர்
வெதிர் கொள் கோலினர் ஆடினர் வீரனை
கதிர் கொள் தாமரை கண்ணனை கண்ணினால்
மதுர வாரி அமுது என மாந்துவார்
#13
மனையின் நீங்கிய மக்களை வைகலும்
நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார்
அனையர் வந்துற ஆண்டு எதிர்ந்தார்கள் போல்
இனிய மா தவ பள்ளிகொண்டு எய்தினார்
#14
பொழியும் கண்ணீர் புது புனல் ஆட்டினர்
மொழியும் இன் சொலின் மொய் மலர் சூட்டினர்
அழிவு_இல் அன்பு எனும் ஆர் அமிழ்து ஊட்டினர்
வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர்
#15
காயும் கானில் கிழங்கும் கனிகளும்
தூய தேடி கொணர்ந்தனர் தோன்றல் நீ
ஆய கங்கை அரும் புனல் ஆடினை
தீயை ஓம்பினை செய் அமுது என்றனர்
#16
மங்கையர்க்கு விளக்கு அன்ன மானையும்
செம் கை பற்றினன் தேவரும் துன்பு அற
பங்கயத்து அயன் பண்டு தன் பாதத்தின்
அம் கையின் தரும் கங்கையின் ஆடினான்
#17
கன்னி நீக்க அரும் கங்கையும் கைதொழா
பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர்
என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்த
உன்னின் நீக்கினென் உய்ந்தனென் யான் என்றாள்
#18
வெம் கண் நாக கரத்தினன் வெண் நிற
கங்கை வார் சடை கற்றையன் கற்பு உடை
மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர்
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான்
#19
தள்ளும் நீர் பெரும் கங்கை தரங்கத்தால்
வள்ளி நுண் இடை மா மலராளொடும்
வெள்ளி வெண் நிற பாற்கடல் மேலை_நாள்
பள்ளி நீங்கிய பான்மையின் தோன்றினான்
#20
வஞ்சி நாண இடைக்கு மட நடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க அடி அன்ன
கஞ்சம் நீரில் ஒளிப்ப கயல் உக
பஞ்சி மெல் அடி பாவையும் ஆடினாள்
#21
தேவதேவன் செறி சடை கற்றையுள்
கோவை மாலை எருக்கொடு கொன்றையின்
பூவு நாறலள் பூம் குழல் கற்றையின்
நாவி நாள்_மலர் கங்கையும் நாறினாள்
#22
நுரை கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்
நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள்
திரை கை நீட்டி செவிலியின் ஆட்டினாள்
#23
மங்கை வார் குழல் கற்றை மழை_குலம்
தங்கு நீரிடை தாழ்ந்து குழைப்பன
கங்கை யாற்றொடும் காளிந்தி-தன்னொடும்
பொங்கு நீர் சுழி போவன போன்றதே
#24
சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று தன்
விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து
முழுகி தோன்றுகின்றாள் முதல் பாற்கடல்
அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள்
#25
செய்ய தாமரை தாள் பண்டு தீண்டலால்
வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள்
ஐயன் மேனி எலாம் அளைந்தாள் இனி
வையம் மா நரகத்திடை வைகுமோ
#26
துறை நறும் புனல் ஆடி சுருதியோர்
உறையுள் எய்தி உணர்வு உடையோர் உணர்
இறைவன் கைதொழுது ஏந்து எரி ஓம்பி பின்
அறிஞர் காதற்கு அமை விருந்து ஆயினான்
#27
வருந்தி தான் தர வந்த அமுதையும்
அருந்தும் நீர் என்று அமரரை ஊட்டினான்
விருந்து மெல் அடகு உண்டு விளங்கினான்
திருந்தினார்-வயின் செய்தன தேயுமோ

8 குகப் படலம்

#1
ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு
நாயகன் போர் குகன் எனும் நாமத்தான்
தூய கங்கை துறை விடும் தொன்மையான்
காயும் வில்லினன் கல் திரள் தோளினான்
#2
துடியன் நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்
அடியன் அல் செறிந்து அன்ன நிறத்தினான்
நெடிய தானை நெருங்கலின் நீர் முகில்
இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான்
#3
கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகை
பம்பை பம்பு படையினன் பல்லவத்து
அம்பன் அம்பிக்கு நாதன் அழி கவுள்
தும்பி ஈட்டம் புரை கிளை சுற்றத்தான்
#4
காழம் இட்ட குறங்கினன் கங்கையின்
ஆழம் இட்ட நெடுமையினான் அரை
தாழ விட்ட செம் தோலன் தயங்குற
சூழ விட்ட தொடு புலி வாலினான்
#5
பல் தொடுத்து அன்ன பல் சூழ் கவடியன்
கல் தொடுத்து அன்ன போலும் கழலினான்
அல் தொடுத்து அன்ன குஞ்சியன் ஆளியின்
நெல் தொடுத்து நெரிந்த புருவத்தான்
#6
பெண்ணை வன் செறும்பின் பிறங்கி செறி
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன்
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான்
#7
கச்சொடு ஆர்த்த கறை கதிர் வாளினன்
நச்சு அராவின் நடுக்கு உறு நோக்கினன்
பிச்சராம் அன்ன பேச்சினன் இந்திரன்
வச்சிராயுதம் போலும் மருங்கினான்
#8
சிருங்கிபேரம் என திரை கங்கையின்
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன்
ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன்
இருந்த வள்ளலை காண வந்து எய்தினான்
#9
சுற்றம் அ புறம் நிற்க சுடு கணை
வில் துறந்து அரை வீக்கிய வாள் ஒழித்து
அற்றம் நீத்த மனத்தினன் அன்பினன்
நல் தவ பள்ளி வாயிலை நண்ணினான்
#10
கூவா-முன்னம் இளையோன் குறுகி நீ
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான்
தேவா நின் கழல் சேவிக்க வந்தனென்
நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான்
#11
நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவன் தொழுது தம்பி
கொற்றவ நின்னை காண குறுகினன் நிமிர்ந்த கூட்ட
சுற்றமும் தானும் உள்ளம் தூயவன் தாயின் நல்லான்
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் ஒருவன் என்றான்
#12
அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன
பண்ணவன் வருக என்ன பரிவினன் விரைவில் புக்கான்
கண்ணனை கண்ணின் நோக்கி கனிந்தனன் இருண்ட குஞ்சி
மண் உற பணிந்து மேனி வளைத்து வாய் புதைத்து நின்றான்
#13
இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆக
திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திரு உளம் என்ன வீரன்
விருத்த மா தவரை நோக்கி முறுவலன் விளம்பலுற்றான்
#14
அரிய தாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதர கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்மனோர்க்கும்
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான்
#15
சிங்க ஏறு அனைய வீரன் பின்னரும் செப்புவான் யாம்
இங்கு உறைந்து எறி நீர் கங்கை ஏறுதும் நாளை யாணர்
பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து இனிது உன் ஊரில்
தங்கி நீ நாவாயோடும் சாருதி விடியல் என்றான்
#16
கார் குலாம் நிறத்தான் கூற காதலன் உணர்த்துவான் இ
பார் குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலா கள்வனேன் யான் இன்னலின் இருக்கை நோக்கி
தீர்கிலேன் ஆனது ஐய செய்குவென் அடிமை என்றான்
#17
கோதை வில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான்
சீதையை நோக்கி தம்பி திருமுகம் நோக்கி தீரா
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன்
யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான்
#18
திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன
பருவரல் தம்பி கூற பரிந்தவன் பையுள் எய்தி
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே
பெரு நில கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா
#19
விரி இருள் பகையை ஓட்டி திசைகளை வென்று மேல் நின்று
ஒரு தனி திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும்
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள்-புரிந்து வீந்த
செரு வலி வீரன் என்ன செம்_கதிர்_செல்வன் சென்றான்
#20
மாலை வாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல்
வேலை வாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல்
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி
காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான்
#21
தும்பியின் குழாத்தின் சுற்றும் சுற்றத்தன் தொடுத்த வில்லன்
வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கி தலைமகன் தன்மை நோக்கி
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான்
#22
துறக்கமே முதல ஆய தூயன யாவையேனும்
மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள்
இறக்குமாறு இது என்பான் போல் முன்னை நாள் இறந்தான் பின் நாள்
பிறக்குமாறு இது என்பான் போல் பிறந்தனன் பிறவா வெய்யோன்
#23
செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை தேரில் தோன்றும்
வெம் சுடர் செல்வன் மேனி நோக்கின விரிந்த வேறு ஓர்
அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கி செய்ய
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே
#24
நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி நாம
தோள் முதற்கு அமைந்த வில்லான் மறையவர் தொடர போனான்
ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி ஐய
கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின் என்றான்
#25
ஏவிய மொழி கேளா இழி புனல் பொழி கண்ணான்
ஆவியும் உலைகின்றான் அடி இணை பிரிகல்லான்
காவியின் மலர் காயா கடல் மழை அனையானை
தேவியொடு அடி தாழா சிந்தனை உரை செய்வான்
#26
பொய் முறை இலரால் எம் புகல் இடம் வனமேயால்
கொய் முறை உறு தாராய் குறைவிலெம் வலியேமால்
செய் முறை குற்றேவல் செய்குதும் அடியோமை
இ முறை உறவு என்னா இனிது இரு நெடிது எம் ஊர்
#27
தேன் உள திணை உண்டால் தேவரும் நுகர்தற்கு ஆம்
ஊன் உள துணை நாயேம் உயிர் உள விளையாட
கான் உள புனல் ஆட கங்கையும் உளது அன்றோ
நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால்
#28
தோல் உள துகில் போலும் சுவை உள தொடர் மஞ்சம்
போல் உள பரண் வைகும் புரை உள கடிது ஓடும்
கால் உள சிலை பூணும் கை உள கலி வானின்
மேல் உள பொருளேனும் விரைவொடு கொணர்வேமால்
#29
ஐ_இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர் ஆணை
செய்குநர் சிலை வேடர் தேவரின் வலியாரால்
உய்குதும் அடியேம் எம் குடிலிடை ஒரு நாள் நீ
வைகுதி எனின் மேல் ஓர் வாழ்வு இலை பிறிது என்றான்
#30
அண்ணலும் அது கேளா அகம் நிறை அருள் மிக்கான்
வெண் நிற நகை-செய்தான் வீர நின்னுழை யாம் அ
புண்ணிய நதி ஆடி புனிதரை வழிபாடு உற்று
எண்ணிய சில நாளில் குறுகுதும் இனிது என்றான்
#31
சிந்தனை உணர்கிற்பான் சென்றனன் விரைவோடும்
தந்தனன் நெடு நாவாய் தாமரை நயனத்தான்
அந்தணர்-தமை எல்லாம் அருளுதிர் விடை என்னா
இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா
#32
விடு நனி கடிது என்றான் மெய் உயிர் அனையானும்
முடுகினன் நெடு நாவாய் முரி திரை நெடு நீர்-வாய்
கடிதினின் மட அன்ன கதி அது செல நின்றார்
இடர் உற மறையோரும் எரி உறு மெழுகு ஆனார்
#33
பால் உடை மொழியாளும் பகலவன் அனையானும்
சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாட
தோல் உடை நிமிர் கோலின் துழவிட எழு நாவாய்
கால் உடை நெடு ஞெண்டின் சென்றது கடிது அம்மா
#34
சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை
காந்து இன மணி மின்ன கடி கமழ் கமலத்தின்
சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால்
ஏந்தினள் ஒரு தானே ஏற்றினள் இனிது அப்பால்
#35
அ திசை உற்று ஐயன் அன்பனை முகம் நோக்கி
சித்திர கூடத்தின் செல் நெறி பகர் என்ன
பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா
உத்தம அடி நாயேன் ஓதுவது உளது என்றான்
#36
நெறி இடு நெறி வல்லேன் நேடினென் வழுவாமல்
நறியன கனி காயும் நறவு இவை தர வல்லேன்
உறைவிடம் அமைவிப்பேன் ஒரு நொடி வரை உம்மை
பிறிகிலென் உடன் ஏக பெறுகுவென் எனின் நாயேன்
#37
தீயன வகை யாவும் திசை திசை செல நூறி
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன்
மேயின பொருள் நாடி தருகுவென் வினை முற்றும்
ஏயின செய வல்லேன் இருளினும் நெறி செல்வேன்
#38
கல்லுவென் மலையேனும் கவலையின் முதல் யாவும்
செல்லுவென் நெறி தூரம் செறி புனல் தர வல்லேன்
வில் இனம் உளென் ஒன்றும் வெருவலென் ஒருபோதும்
மல்லினும் உயர் தோளாய் மலர் அடி பிரியேனால்
#39
திரு உளம் எனின் மற்று என் சேனையும் உடனே கொண்டு
ஒருவலென் ஒருபோதும் உறைகுவென் உளர் ஆனார்
மருவலர் எனின் முன்னே மாள்குவென் வசை இல்லேன்
பொரு_அரு மணி மார்பா போதுவென் உடன் என்றான்
#40
அன்னவன் உரை கேளா அமலனும் உரைநேர்வான்
என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இ
நல்_நுதலவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்
#41
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றி
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்
#42
படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம்
இடர் உறு பகை யா போய் யான் என உரியாய் நீ
சுடர் உறு வடி வேலாய் சொல் முறை கடவேன் யான்
வட திசை வரும் அ நாள் நின்னுழை வருகின்றேன்
#43
அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி
இங்கு உள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ
உன் கிளை எனது அன்றோ உறு துயர் உறல் ஆமோ
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான்
#44
பணி மொழி கடவாதான் பருவரல் இகவாதான்
பிணி உடையவன் என்னும் பிரிவினன் விடைகொண்டான்
அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும்
திணி மரம் நிறை கானில் சேணுறு நெறி சென்றார்

9 வனம் புகு படலம்

#1
பூரியர் புணர் மாதர் பொது மனம் என மன்னும்
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில்
ஆரியன் வரலோடும் அமுது அளவிய சீத
கார் உறு குறி மான காட்டியது அவண் எங்கும்
#2
வெயில் இள நிலவே போல் விரி கதிர் இடை வீச
பயில் மரம் நிழல் ஈன பனி புரை துளி வான
புயல் தர இள மென் கால் பூ அளவியது எய்த
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார்
#3
மன்றலின் மலி கோதாய் மயில் இயல் மட மானே
இன் துயில் வதி கோபத்து_இனம் விரிவன எங்கும்
கொன்றைகள் சொரி போதின் குப்பைகள் குல மாலை
பொன் திணி மணி மான பொலிவன பல காணாய்
#4
பாண் இள மிஞிறு ஆக படு மழை பணை ஆக
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல்
பூணியல் நின சாயல் பொலிவது பல கண்ணின்
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய்
#5
சேந்து ஒளி விரி செ வாய் பைம் கிளி செறி கோல
காந்தளின் மலர் ஏறி பொலிவது கவின் ஆரும்
மா தளிர் நறு மேனி மங்கை நின் மணி முன்கை
ஏந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய்
#6
நெய் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றி
கை ஞிறை நிமிர் கண்ணாய் கருதின இனம் என்றே
மெய் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு
மஞ்ஞையும் மட மானும் வருவன பல காணாய்
#7
பூ அலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும்
மா அலர் சொரி சூழல் துயில் எழு மயில் ஒன்றின்
தூவியின் மணம் நாற துணை பிரி பெடை தான் அ
சேவலொடு உற ஊடி திரிவதன் இயல் காணாய்
#8
அருந்ததி அனையாளே அமுதினும் இனியாளே
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம்
பொருந்தின களி வண்டின் பொலிவன பொன் ஊதும்
இருந்தையின் எழு நீ ஒத்து எழுவன இயல் காணாய்
#9
ஏந்து இள முலையாளே எழுத அரு எழிலாளே
காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை
பாந்தள் இது என உன்னி கவ்விய படி பாரா
தேம் தளவுகள் செய்யும் சிறு குறு_நகை காணாய்
#10
குன்று உறை வய மாவின் குருளையும் இருள் சிந்தி
பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும்
அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின்
கன்றொடு விளையாடும் களியன பல காணாய்
#11
அகில் புனை குழல் மாதே அணி இழை எனல் ஆகும்
நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும்
துகில் புரை திரை நீரில் தோய்வன துறை ஆடும்
முகிழ் இள முலையாரின் மூழ்குவ பல காணாய்
#12
முற்றுறு முகை கிண்டி முரல்கில சில தும்பி
வில் திரு நுதல் மாதே அம் மலர் விரி கோங்கின்
சுற்று உறு மலர் ஏறி துயில்வன சுடர் மின்னும்
பொன் தகடு உறு நீலம் புரைவன பல காணாய்
#13
கூடிய நறை வாயில் கொண்டன விழி கொள்ளா
மூடிய களி மன்ன முடுகின நெறி காணா
ஆடிய சிறை மா வண்டு அந்தரின் இசை முன்னம்
பாடிய பெடை கண்ணா வருவன பல காணாய்
#14
கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்ன
பொன் அணி நிற வேங்கை கோங்குகள் புது மென் பூ
அன்ன மென் நடையாய் நின் அளக நல் நுதல் அப்பும்
சின்ன மென் மலர் மான சிந்துவ பல காணாய்
#15
மணம் கிளர் மலர் வாச மாருதம் வர வீச
கணம் கிளர்தரு சுண்ணம் கல் இடையன கானத்து
அணங்கினும் இனியாய் உன் அணி வட முலை முன்றில்
சுணங்கு_இனம் அவை மான துறுவன அவை காணாய்
#16
அடி இணை பொறைகல்லா என்று-கொல் அதர் எங்கும்
இடை இடை மலர் சிந்தும் இன மரம் இவை காணாய்
கொடியினொடு இள வாச கொம்புகள் குயிலே உன்
துடி புரை இடை நாணி துவள்வன அவை காணாய்
#17
வாள் புரை விழியாய் உன் மலர் அடி அணி மான
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய்
கோள் புரை இருள் வாச குழல் புரை மழை காணாய்
தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை காணாய்
#18
பூ நனை சினை துன்றி புள் இடை இடை பம்பி
நால் நிற நளிர் வல்லி கொடி நவை இல பல்கி
மான் இனம் மயில் மாலை குயில் இனம் வதி கானம்
தீ நிகர் தொழில் ஆடை திரை பொருவன பாராய்
#19
என்று நல் மடவாளோடு இனிதினின் விளையாடி
பொன் திணி திரள் தோளான் போயினன் நெறி போதும்
சென்றது குட-பால் அ திரு மலை இது அன்றோ
என்றனன் வினை வென்றோர் மேவு இடம் எனலோடும்
#20
அருத்தியின் அகம் விம்மும் அன்பினன் நெடு நாளில்
திருத்திய வினை முற்றிற்று இன்று எனல் தெரிகின்றான்
பரத்துவன் எனும் நாம பர முனி பவ நோயின்
மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான்
#21
குடையினன் நிமிர் கோலன் குண்டிகையினன் மூரி
சடையினன் உரி மானின் சருமன் நல் மர நாரின்
உடையினன் மயிர் நாலும் உருவினன் நெறி பேணும்
நடையினன் மறை நாலும் நடம் நவில் தரு நாவான்
#22
செம் தழல் புரி செல்வன் திசைமுக_முனி செவ்வே
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும்
அந்தணன் உலகு ஏழும் அமை எனின் அமரேசன்
உந்தியின் உதவாமே உதவிடு தொழில் வல்லான்
#23
அ முனி வரலோடும் அழகனும் அலர் தூவி
மு முறை தொழுதான் அ முதல்வனும் எதிர் புல்லி
இ முறை உருவோ நான் காண்குவது என உள்ளம்
விம்மினன் இழி கண்ணீர் விழி வழி உக நின்றான்
#24
அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை அது தீர
புகல் இடம் எமது ஆகும் புரையிடை இது நாளில்
தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என்
இகல் அடு சிலை வீர இளையவனொடும் என்றான்
#25
உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரை-செய்தான்
நல் தவ முனி அந்தோ விதி தரு நவை என்பான்
இற்றது செயல் உண்டோ இனி என இடர் கொண்டான்
பெற்றிலள் தவம் அந்தோ பெரு நில_மகள் என்றான்
#26
துப்பு உறழ் துவர் வாயின் தூய் மொழி மயிலோடும்
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று
எ பரிசு உயிர் உய்ந்தான் என் துணையவன் என்றான்
#27
அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ
நல்லவும் உள செய்யும் நவைகளும் உள அந்தோ
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் என்னா
புல்லினன் உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான்
#28
புக்கு உறைவிடம் நல்கி பூசனை முறை பேணி
தக்கன கனி காயும் தந்து உரைதரும் அன்பால்
தொக்க நல் முறை கூறி தூயவன் உயிர் போலும்
மக்களின் அருள் உற்றான் மைந்தரும் மகிழ்வு உற்றார்
#29
வைகினர் இனிது அன்னார் அ வழி மறையோனும்
உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின் என்பான்
செய்தனன் இனிது எல்லாம் செல்வனை முகம் முன்னா
கொய் குல மலர் மார்ப கூறுவது உளது என்றான்
#30
நிறையும் நீர் மலர் நெடும் கனி கிழங்கு காய் கிடந்து ஓர்
குறையும் அற்றன தூய்மையால் குலவியது எம்மோடு
உறையும் இ வழி உயர் தவம் ஒருங்குடன் முயல்வார்க்கு
இறையும் ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது இன்னும்
#31
கங்கையாளொடு கரியவள் நா_மகள் கலந்த
சங்கம் ஆதலின் பிரியலென் தாமரை வடித்த
செம் கண் நாயக அயனுக்கும் அரும்_பெறல் தீர்த்தம்
எங்கள் போலியர் தரத்தது அன்று இருத்திர் ஈண்டு என்றான்
#32
பூண்ட மா தவன் அ மொழி விரும்பினன் புகல
நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு நெடு நாள்
மாண்ட சிந்தைய இ வழி வைகுவென் என்றால்
ஈண்ட யாவரும் நெருங்குவர் என்றனன் இராமன்
#33
ஆவது உள்ளதே ஐய கேள் ஐ_இரண்டு அமைந்த
காவத பொழிற்கு அ புறம் கழிந்த பின் காண்டி
மேவு காதலின் வைகுதிர் விண்ணினும் இனிதால்
தேவர் கைதொழும் சித்திரகூடம் என்று உளதே
#34
என்று காதலின் ஏயினன் அடி தொழுது ஏத்தி
கொன்றை வேய்ங்குழல் கோவலர் முல்லை அம் குடுமி
சென்று செம்_கதிர்_செல்வனும் நடு உற சிறு மான்
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார்
#35
ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார்
ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு நீர் உண்டார்
ஏறி ஏகுவது எங்ஙனம் என்றலும் இளையோன்
#36
வாங்கு வேய்ங்கழை துணித்தனன் மாணையின் கொடியால்
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரின் உலம் போல்
வீங்கு தோள் அண்ணல் தேவியோடு இனிது வீற்றிருப்ப
நீங்கினான் அந்த நெடு நதி இரு கையால் நீந்தி
#37
ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான்
மாலை மால் வரை தோள் எனும் மந்தரம் திரிய
காலை வேலையை கடந்தது கழிந்த நீர் கடிதின்
மேலை வேலையில் பாய்ந்தது மீண்ட நீர் வெள்ளம்
#38
அனையர் அ புனல் ஏறினர் அ கரை அணைந்தார்
புனையும் வற்கலை பொற்பினர் நெடு நெறி போனார்
சினையும் மூலமும் முகடும் வெந்து இரு நிலம் தீய்ந்து
நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடும் சுரம் நேர்ந்தார்
#39
நீங்கல் ஆற்றலள் சனகி என்று அண்ணலும் நினைந்தான்
ஓங்கு வெய்யவன் உடுபதி என கதிர் உகுத்தான்
தாங்கு வெம் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த
பாங்கு வெம் கனல் பங்கய வனங்களாய் பரந்த
#40
வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள்
பறித்து வீழ்த்திய மலர் என குளிர்ந்தன பசைந்த
இறுத்து எறிந்தன வல்லிகள் இளம் தளிர் ஈன்ற
கறுத்த வாள் அரவு எயிற்றினூடு அமுது உக களித்த
#41
குழுமி மேகங்கள் குமுறின குளிர் துளி கொணர்ந்த
முழு வில் வேடரும் முனிவரின் முனிகிலர் உயிரை
தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த
உழுவையின் முலை மான் இளம் கன்றுகள் உண்ட
#42
கல் அளை கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ் பாம்பு
அல்லல் உற்றில அலை புனல் கிடந்தன அனைய
வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன மணி வாழ்
புல் எயிற்று இளம் கன்னியர் தோள் என பொலிந்த
#43
படர்ந்து எழுந்த புல் பசு நிற கம்பளம் பரப்பி
கிடந்த போன்றன கேகயம் தோகைகள் கிளர
மடந்தைமார் என நாடகம் வயின்-தொறும் நவின்ற
தொடர்ந்து பாணரின் தூங்கு_இசை முரன்றன தும்பி
#44
காலம் இன்றியும் கனிந்தன கனி நெடும் கந்தம்
மூலம் இன்றியும் முகிழ்த்தன நிலன் உற முழுதும்
கோல மங்கையர் ஒத்தன கொம்பர்கள் இன்ப
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளதோ
#45
எயினர் தங்கு இடம் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த
வயின்வயின்-தொறும் மணி நிற கோபங்கள் மலர்ந்த
பயில் மரம்-தொறும் பரிந்தன பேடையை பயிலும்
குயில் இரங்கின குருந்து_இனம் அரும்பின முருந்தம்
#46
பந்த ஞாட்புறு பாசறை பொருள்-வயின் பருவம்
தந்த கேள்வரை உயிர் உற தழுவினர் பிரிந்த
கந்த ஓதியர் சிந்தையின் கொதிப்பது அ கழலோர்
வந்த போது அவர் மனம் என குளிர்ந்தது அ வனமே
#47
வெளிறு நீங்கிய பாலையை மெல்லென போனார்
குளிறும் வான் மதி குழவி தன் சூல் வயிற்று ஒளிப்ப
பிளிறு மேகத்தை பிடி என பெரும் பனை தட கை
களிறு நீட்டும் அ சித்திரகூடத்தை கண்டார்

10 சித்திரகூடப் படலம்

#1
நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து ஒரு நெறி நின்ற
அனகன் அம் கணன் ஆயிரம் பெயர் உடை அமலன்
சனகன் மா மட_மயிற்கு அந்த சந்தனம் செறிந்த
கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுற காட்டும்
#2
வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே
தாளின் ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல்
நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமம் சூல்
காளமேகமும் நாகமும் தெரிகில காணாய்
#3
குருதி வாள் என செ அரி பரந்த கண் குயிலே
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை
சுருதி போல் தெளி மரகத கொழும் சுடர் சுற்ற
பருதி வானவன் பசும் பரி புரைவன பாராய்
#4
வடம் கொள் பூண் முலை மட மயிலே மழை மதமா
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமை-தொறும் தொடக்கி
தடங்கள்-தோறும் நின்று ஆடுவ தண்டலை அயோத்தி
நுடங்கு மாளிகை துகில் கொடி நிகர்ப்பன நோக்காய்
#5
உவரி_வாய் அன்றி பாற்கடல் உதவிய அமுதே
துவரின் நீள் மணி தடம்-தொறும் இடம்-தொறும் துவன்றி
கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதின்
பவள மால் வரை அருவியை பொருவிய பாராய்
#6
சலம் தலைக்கொண்ட சீயத்தால் தனி மத கத மா
உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில் மடவார்
புலந்த-காலை அற்று உக்கன குங்கும பொதியில்
கலந்த முத்து என வேழ முத்து இமைப்பன காணாய்
#7
நீண்ட மால் வரை மதி உற நெடு முடி நிவந்த
தூண்டு மா மணி சுடர் சடை கற்றையின் தோன்ற
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடை பாகன்
காண் தகும் சடை கங்கையை நிகர்ப்பன காணாய்
#8
தொட்ட வார் சுனை சுடர் ஒளி மணியொடும் தூவி
விட்ட சென்றன விடா மத மழை அன வேழம்
வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும்
பட்டம் நெற்றியில் சுற்றிய போல்வன பாராய்
#9
இழைந்த நூல் இணை மணி குடம் சுமக்கின்றது என்ன
குழைந்த நுண் இடை குவி இள வன முலை கொம்பே
தழைந்த சந்தன சோலை தன் செலவினை தடுப்ப
நுழைந்து போகின்ற மதி இறால் ஒப்ப நோக்காய்
#10
உருகு காதலின் தழை-கொண்டு மழலை வண்டு ஓச்சி
முருகு நாறு செந்தேனினை முழை-நின்றும் வாங்கி
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை
பருக வாயினில் கையின்-நின்று அளிப்பது பாராய்
#11
அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும்
களிப்பு இல் இந்தியத்து யோகியை கரக்கிலன் அது போல்
ஒளித்து நின்றுளர் ஆயினும் உரு தெரிகின்ற
பளிக்கு அறை சில பரிமுக மாக்களை பாராய்
#12
ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே
கூடுகின்றிலர் கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப
ஊடுகின்றனர் கொழுநரை உருகினர் நோக்க
பாடுகின்றன கின்னர மிதுனங்கள் பாராய்
#13
வில்லி வாங்கிய சிலை என பொலி நுதல் விளக்கே
வல்லிதாம் கழை தாக்கலின் வழிந்து இழி பிரசம்
கொல்லி வாங்கிய குன்றவர் கொடி நெடும் கவலை
கல்லி வாங்கிய குழிகளை நிறைப்பன காணாய்
#14
ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி
அருவி நீர் கொடு வீச தான் அ புறத்து ஏறி
கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனை காணாய்
#15
வீறு பஞ்சினில் அமிழ்த நெய் மாட்டிய விளக்கே
சீறு வெம் கதிர் செறிந்தன பேர்கல திரியா
மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல்
பாறை மற்று ஒரு பரிதியின் பொலிவது பாராய்
#16
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே
நீல வண்டு_இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ
கோல வேங்கையின் கொம்பர்கள் பொன் மலர் தூவி
காலினில் தொழுது எழுவன நிகர்ப்பன காணாய்
#17
வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்தே
எல் கொள் மால் வரை உம்பரின் இரும் புனம் காக்கும்
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்த
கற்கள் வானிடை மீன் என வீழ்வன காணாய்
#18
வரி கொள் ஒண் சிலை வயவர்-தம் கணிச்சியின் மறித்த
பரிய கால் அகில் சுட நிமிர் பசும் புகை படலம்
அரிய வேதியர் ஆகுதி புகையொடும் அளவி
கரிய மால் வரை கொழுந்து என படர்வன காணாய்
#19
நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும்
சோனை வார் குழல் சுமை பொறாது இறும் இடை தோகாய்
வான யாற்று மீன் மலர்ந்தன என புனல் வறந்த
கான யாறுகள் கதிர் மணி இமைப்பன காணாய்
#20
மஞ்சு அளாவிய மாணிக்க பாறையில் மறைவ
செஞ்செவே நெடு மரகத பாறையில் தெரிவ
விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய விமல
பஞ்சு அளாவிய சீறடி சுவடிகள் பாராய்
#21
சுழித்த தண் புனல் சுழி புரை உந்தி அம் தோகாய்
கொழித்த மா மணி அருவியொடு இழிவன கோலம்
அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல்
கழித்து நீக்கிய கற்பக நறு மலர் காணாய்
#22
அறை கழல் சிலை குன்றவர் அகன் புனம் காவல்
பறை எடுத்து ஒரு கடுவன் நின்று அடிப்பது பாராய்
பிறையை எட்டினள் பிடித்து இதற்கு இது பிழை என்னா
கறை துடைக்குறு பேதை ஓர் கொடிச்சியை காணாய்
#23
அடுத்த பல் பகல் அன்பரின் பிரிந்தவர் என்பது
எடுத்து நம்-தமக்கு இயம்புவ என கரிந்து இருண்ட
தொடுத்த மாதவி சூழலில் சூர்_அர_மகளிர்
படுத்து வைகிய பல்லவ சயனங்கள் பாராய்
#24
நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேர்_இழை நிறை தேன்
வனைந்த வேங்கையில் கோங்கினில் வயின்-தொறும் தொடுத்து
குனிந்த ஊசலில் கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சி
கனிந்த பாடல் கேட்டு அசுணமா வருவன காணாய்
#25
இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியோய்
அலவும் நுண் துளி அருவி நீர் அரம்பையர் ஆட
கலவை சாந்து செம் குங்குமம் கற்பகம் கொடுத்த
பலவும் தோய்தலின் பரிமளம் கமழ்வன பாராய்
#26
செம்பொனால் செய்து குலிகம் இட்டு எழுதிய செப்பு ஓர்
கொம்பு தாங்கியது என பொலி வன முலை கொடியே
அம் பொன் மால் வரை அலர் கதிர் உச்சி சென்று அணுக
பைம்பொன் மா முடி மிலைச்சியது ஒப்பது பாராய்
#27
மடந்தைமார்களுக்கு ஒரு திலதமே மணி நிற திணி கல்
தொடர்ந்த பாறையில் வேய்_இனம் சொரி கதிர் முத்தம்
இடம்-தொறும் கிடந்து இமைப்பன எக்கு இளம் செக்கர்
படர்ந்த வானிடை தாரகை நிகர்ப்பன பாராய்
#28
குழுவு நுண் தொளை வேயினும் குறி நரம்பு எறிவு உற்று
எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே
முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு இடை மிடைந்த
பழுவம் வெம் கனல் கதுவியது ஒப்பன பாராய்
#29
வளைகள் காந்தளில் பெய்தன அனைய கைம் மயிலே
தொளை கொள் தாழ் தட கை நெடும் துருத்தியில் தூக்கி
அளவு_இல் மூப்பினர் அரும் தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து
களப மால் கரி குண்டிகை சொரிவன காணாய்
#30
வடுவின் மா வகிர் இவை என பொலிந்த கண் மயிலே
இடுகு கண்ணினர் இடர் உறு மூப்பினர் ஏக
நெடுகு கூனல் வால் நீட்டின உருகு உறு நெஞ்ச
கடுவன் மா தவர்க்கு அரு நெறி காட்டுவ காணாய்
#31
பாந்தள் தேர் இவை பழிபட பரந்த பேர் அல்குல்
ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயைய
கூந்தல் மென் மயில் குறுகின நெடும் சிறை கோலி
காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ காணாய்
#32
அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அரும் கலமே
நலம் பெய் வேதியர் மார்பினுக்கு இயைவு உற நாடி
சிலம்பி பஞ்சினில் சிக்கு_அற தெரிந்த நூல் தே மாம்
பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய்
#33
தெரிவைமார்க்கு ஒரு கட்டளை என செய்த திருவே
பெரிய மா கனி பலா கனி பிறங்கிய வாழை
அரிய மா கனி கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப
கரிய மா கிழங்கு அகழ்ந்தன கொணர்வன காணாய்
#34
ஐவன குரல் ஏனலின் கதிர் இறுங்கு அவரை
மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி
பொய் வணக்கிய மா தவர் புரை-தொறும் புகுந்து உன்
கை வணத்த வாய் கிள்ளை தந்து அளிப்பன காணாய்
#35
இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என அடங்கி
சடை கொள் சென்னியர் தாழ்வு இலர் தாம் மிதித்து ஏற
படிகளாம் என தாழ்வரை கிடப்பன பாராய்
#36
அசும்பு பாய் வரை அரும் தவம் முடித்தவர் துணை கண்
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு விண் தருவான்
விசும்பு தூர்ப்பன ஆம் என வெயில் உக விளங்கும்
பசும்பொன் மானங்கள் போவன வருவன பாராய்
#37
இனைய யாவையும் ஏந்து_இழைக்கு இயம்பினன் காட்டி
அனைய மால் வரை அரும் தவர் எதிர்வர வணங்கி
வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான்
மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன்
#38
மா இயல் உதயம் ஆம் துளப வானவன்
மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக
கா இயல் குட வரை கால நேமி மேல்
ஏவிய திகிரி போல் இரவி ஏகினான்
#39
சக்கரத்தானவன் உடலில் தாக்கு உற
எக்கிய சோரியின் பரந்தது எங்கணும்
செக்கர் அ தீயவன் வாயின் தீர்ந்து வேறு
உக்க வான் தனி எயிறு ஒத்தது இந்துவே
#40
ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரை
பூ நனி முகிழ்த்தன புலரி போன பின்
மீன் என விளங்கிய வெள்ளி ஆம்பல் வீ
வான் எனும் மணி தடம் மலர்ந்த எங்குமே
#41
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின
நிந்தை_இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின
அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான்
#42
மொய் உறு நறு மலர் முகிழ்த்தவாம் சில
மை_அறு நறு மலர் மலர்ந்தவாம் சில
ஐயனோடு இளவற்கும் அமுதனாளுக்கும்
கைகளும் கண்களும் கமலம் போன்றவே
#43
மாலை வந்து அகன்ற பின் மருங்கு இலாளொடும்
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என
கோலை வந்து உமிழ் சிலை தம்பி கோலிய
சாலை வந்து எய்தினான் தவத்தின் எய்தினான்
#44
நெடும் கழை குறும் துணி நிறுவி மேல் நிரைத்து
ஒடுங்கல்_இல் நெடு முகடு ஒழுக்கி ஊழ் உற
இடுங்கல்_இல் கை விசித்து ஏற்றி எங்கணும்
முடங்கல்_இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே
#45
தேக்கு அடை படலையின் செறிவு செய்து பின்
பூ கிளர் நாணலின் புல்லு வேய்ந்து கீழ்
தூக்கிய வேய்களின் சுவரும் சுற்று உற
போக்கி மண் எறிந்து அவை புனலின் தீற்றியே
#46
வேறு இடம் இயற்றினன் மிதிலை நாடிக்கும்
கூறின நெறி முறை குயிற்றி குங்கும
சேறு கொண்டு அழகுற திருத்தி திண் சுவர்
ஆறு இடு மணியொடு தரளம் அப்பியே
#47
மயிலுடை பீலியின் விதானம் மேல் வகுத்து
அயிலுடை சுரிகையால் அருகு தூக்கு அறுத்து
எயில் இளம் கழைகளால் இயற்றி ஆறு இடு
செயலுடை புது மலர் பொற்ப சிந்தியே
#48
இன்னணம் இளையவன் இழைத்த சாலையில்
பொன் நிற திருவொடும் குடி புக்கான்-அரோ
நல் நெடும் திசைமுகன் அகத்தும் நம்மனோர்க்கு
உன்ன_அரும் உயிருளும் ஒக்க வைகுவான்
#49
மாயம் நீங்கிய சிந்தனை மா மறை
தூய பாற்கடல் வைகுந்தம் சொல்லல் ஆம்
ஆய சாலை அரும் பெறல் அன்பினன்
நேய நெஞ்சின் விரும்பி நிரம்பினான்
#50
மேவு கானம் மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தா இல் எம்பி கை சாலை சமைத்தன
யாவை யாதும் இலார்க்கு இயையாதவே
#51
என்று சிந்தித்து இளையவன் பார்த்து இரு
குன்று போல குவவிய தோளினாய்
என்று கற்றனை நீ இது போல் என்றான்
துன்று தாமரை கண் பனி சோர்கின்றான்
#52
அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால்
படரும் நல் அறம் பாலித்து இரவியின்
சுடரும் மெய் புகழ் சூடினென் என்பது என்
இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள் என்றான்
#53
அந்த வாய்மொழி ஐயன் இயம்பலும்
நொந்த சிந்தை இளையவன் நோக்கினான்
எந்தை காண்டி இடரினுக்கு அங்குரம்
முந்து வந்து முளைத்தது அன்றோ என்றான்
#54
ஆக செய்_தக்கது இல்லை அறத்தில்-நின்று
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான்
ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான்
சோக பங்கம் துடைப்பு அரிதால் எனா
#55
பின்னும் தம்பியை நோக்கி பெரியவன்
மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு இதற்கு
என்ன கேடு உண்டு இ எல்லை_இல் இன்பத்தை
உன்னு மேல் வரும் ஊதியத்தோடு என்றான்
#56
தேற்றி தம்பியை தேவரும் கைதொழ
நோற்று இருந்தனன் நோன் சிலையோன் இப்பால்
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர்
கூற்றின் உற்றது கூறலுற்றாம்-அரோ

11 பள்ளிபடைப் படலம்

#1
தூதர் வந்தனர் உந்தை சொல்லோடு என
காதல் முந்தி களிக்கின்ற சிந்தையான்
போதுக ஈங்கு என புக்கு அவர் கைதொழ
தீது இலன்-கொல் திரு முடியோன் என்றான்
#2
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன்
இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும்
உலைவு இல் செல்வத்தனோ என உண்டு என
தலையின் ஏந்தினன் தாழ் தட கைகளே
#3
மற்றும் சுற்ற துளார்க்கும் வரன்முறை
உற்ற தன்மை வினாவி உவந்த பின்
இற்றது ஆகும் எழுது_அரு மேனியாய்
கொற்றவன் தன் திருமுகம் கொள்க என்றார்
#4
என்று கூறலும் ஏத்தி இறைஞ்சினான்
பொன் திணிந்த பொரு_இல் தட கையால்
நின்று வாங்கி உருகிய நெஞ்சினான்
துன்று நாள்_மலர் சென்னியில் சூடினான்
#5
சூடி சந்தனம் தோய்த்து உடை சுற்று மண்
மூடு தோட்டின் முடங்கல் நிமிர்ந்தனன்
ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்கு
கோடி மேலும் நிதியம் கொடுத்தனன்
#6
வாள் நிலா நகை தோன்ற மயிர் புறம்
பூண வான் உயர் காதலின் பொங்கினான்
தாள் நிலாம் மலர் தூவினன் தம்முனை
காணலாம் எனும் ஆசை கடாவவே
#7
எழுக சேனை என்று ஏவினன் எய்தினன்
தொழுது கேகயர் கோ_மகன் சொல்லொடும்
தழுவு தேரிடை தம்பியொடு ஏறினான்
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான்
#8
யானை சுற்றின தேர் இரைத்து ஈண்டின
மான வேந்தர் குழுவினர் வாளுடை
தானை சூழ்ந்தன சங்கம் முரன்றன
மீன வேலையின் விம்மின பேரியே
#9
கொடி நெருங்கின தொங்கல் குழீஇயின
வடி நெடும் கண் மடந்தையர் ஊர் மட
பிடி துவன்றின பூண் ஒளி பேர்ந்தன
இடி துவன்றின மின் என எங்குமே
#10
பண்டி எங்கும் பரந்தன பல்_இயம்
கொண்டு இயம்பின கொண்டலின் கோதையில்
வண்டு இயம்பின வாளியின் வாவுறும்
செண்டு இயங்கு பரியும் செறிந்தவே
#11
துளை முகத்தின் சுருதி விளம்பின
உளை முகத்தின் உம்பரின் ஏகிட
விளை முகத்தன வேலையின் மீது செல்
வளை முகத்தன வாசியும் வந்தவே
#12
வில்லின் வேதியர் வாள் செறி வித்தகர்
மல்லின் வல்லர் சுரிகையின் வல்லவர்
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர்
தொல்லை வாரண பாகரும் சுற்றினார்
#13
எறி பகட்டு_இனம் ஆடுகள் ஏற்றை மா
குறி கொள் கோழி சிவல் குறும்பூழ் நெடும்
பொறி மயிர் கவுதாரிகள் போற்றுறு
நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார்
#14
நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில்
பறந்து போதும்-கொல் என்று பதைக்கின்றார்
பிறந்து தேவர் உணர்ந்து பெயர்ந்து முன்
உறைந்து வான் உறுவார்களை ஒக்கின்றார்
#15
ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் என
தான் அளைந்து தழுவின தண்ணுமை
தேன் அளைந்து செவி உற வார்த்து என
வான் அளைந்தது மாகதர் பாடலே
#16
ஊறு கொண்ட முரசு உமிழ் ஓதையை
வீறு கொண்டன வேதியர் வாழ்த்து ஒலி
ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை
மாறு கொண்டன வந்திகர் வாழ்த்து-அரோ
#17
ஆறும் கானும் அகல் மலையும் கடந்து
ஏறி ஏழ் பகல் நீந்தி பின் எந்திரத்து
ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை
நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான்
#18
ஏர் துறந்த வயல் இள மைந்தர் தோள்
தார் துறந்தன தண் தலை நெல்லினும்
நீர் துறந்தன தாமரை நீத்து என
பார் துறந்தனள் பங்கய செல்வியே
#19
பிதிர்ந்து சாறு பெரும் துறை மண்டிட
சிதர்ந்து சிந்தி அழிந்தன தேம் கனி
முதிர்ந்து கொய்யுநர் இன்மையின் மூக்கு அவிழ்ந்து
உதிர்ந்து உலர்ந்தன ஒண் மலர் ஈட்டமே
#20
ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம் என
ஆய்ந்து மள்ளர் அரிகுநர் இன்மையால்
பாய்ந்த சூத பசு நறும் தேறலால்
சாய்ந்து ஒசிந்து முளைத்தன சாலியே
#21
எள் குலா மலர் ஏசிய நாசியர்
புள் குலா வயல் பூசல் கடைசியர்
கட்கிலார் களை காதல் கொழுநரோடு
உள் கலாம் உடையாரின் உயங்கினார்
#22
ஓதுகின்றில கிள்ளையும் ஓதியர்
தூது சென்றில வந்தில தோழர்-பால்
மோதுகின்றில பேரி முழா விழா
போதுகின்றில பொன் அணி வீதியே
#23
பாடல் நீத்தன வண்டொடு பாண் குழாம்
ஆடல் நீத்த அரங்கொடு அகன் புனல்
சூடல் நீத்தன சூடிகை சூளிகை
மாடம் நீத்தன மங்கல வள்ளையே
#24
நகை இழந்தன வாள் முகம் நாறு அகில்
புகை இழந்தன மாளிகை பொங்கு அழல்
சிகை இழந்தன தீவிகை தே மலர்
தொகை இழந்தன தோகையர் ஓதியே
#25
அலர்ந்த பைம் கூழ் அகன் குள கீழன
மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால்
உலர்ந்த வன்கண் உலோபர் கடைத்தலை
புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே
#26
நாவின் நீத்து_அரு நல் வளம் துன்னிய
பூவின் நீத்து என நாடு பொலிவு ஒரீஇ
தேவி நீத்து அரும் சேண் நெறி சென்றிட
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே
#27
என்ற நாட்டினை நோக்கி இடர் உழந்து
ஒன்றும் உற்றது உணர்ந்திலன் உன்னுவான்
சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ
#28
மீண்டும் ஏகி அ மெய் எனும் நல் அணி
பூண்ட வேந்தன் திருமகன் புந்திதான்
தூண்டு தேரினும் முந்து உற தூண்டுவான்
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான்
#29
அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய் அமுது
உண்டு போதி என்று ஒண் கதிர் செல்வனை
விண் தொடர்ந்து விலக்குவ போல்வன
கண்டிலன் கொடியின் நெடும் கானமே
#30
ஈட்டு நல் புகழ்க்கு ஈட்டிய யாவையும்
வேட்ட வேட்டவர் கொண்-மின் விரைந்து என
கோட்டி மாக்களை கூவுவ போல்வன
கேட்டிலன் முரசின் கிளர் ஓதையே
#31
கள்ளை மா கவர் கண்ணியன் கண்டிலன்
பிள்ளை மா களிறும் பிடி ஈட்டமும்
வள்ளை_மாக்கள் நிதியும் வயிரியர்
கொள்ளை_மாக்களின் கொண்டனர் ஏகவே
#32
காவல் மன்னவன் கான்முளை கண்டிலன்
ஆவும் மாவும் அழி கவுள் வேழமும்
மேவு காதல் நிதியின் வெறுக்கையும்
பூவின் வானவர் கொண்டனர் போகவே
#33
சூழ் அமைந்த சுரும்பும் நரம்பும் தம்
ஏழ் அமைந்த இசை இசையாமையால்
மாழை உண்கண் மயில் எனும் சாயலார்
கூழை போன்ற பொருநர் குழாங்களே
#34
தேரும் மாவும் களிறும் சிவிகையும்
ஊரும் பண்டியும் ஊருநர் இன்மையால்
யாரும் இன்றி எழில்_இல வீதிகள்
வாரி இன்றிய வாலுக ஆற்றினே
#35
அன்ன தன்மை அக_நகர் நோக்கினான்
பின்னை அ பெரியோர் தம் பெருந்தகை
மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது
என்ன தன்மை இளையவனே என்றான்
#36
அடங்கலர் ஊர் என மெல்லிதால்
சூல் தடம் கருங்கார் புரை தோற்றத்தான்
சேல் தடம் கண் திருவொடும் நீங்கிய
பால் தடம் கடல் ஒத்தது பார் என்றான்
#37
குரு மணி பூண் அரசிளங்கோளரி
இரு கை கூப்பி இறைஞ்சினன் எய்தியது
ஒரு வகைத்து அன்று உறு துயர் ஊழி வாழ்
திரு நகர் திரு தீர்ந்தனன் ஆம் என்றான்
#38
அனைய வேலையில் அ கடை தோரண
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள்
நினையும் மாத்திரத்து ஏகிய நேமியான்
தனையனும் தந்தை சார்விடம் மேவியான்
#39
விருப்பின் எய்தினன் வெம் திறல் வேந்தனை
இருப்பு நல் இடம் எங்கணும் கண்டிலன்
அருப்பம் அன்று இது என்று ஐயுறவு எய்தினான்
பொருப்பு நாண உயர்ந்த புயத்தினான்
#40
ஆய காலையில் ஐயனை தந்த அ
தூய தாயை தொழல் உறுவான்-தனை
கூயள் அன்னை குறுகுதிர் ஈண்டு என
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள்
#41
வந்து தாயை அடியில் வணங்கலும்
சிந்தை ஆர தழுவினள் தீது_இலர்
எந்தை என்னையர் எங்கையர் என்றனள்
அந்தம்_இல் குணத்தானும் அது ஆம் என்றான்
#42
மூண்டு எழு காதலால் முளரி தாள் தொழ
வேண்டினென் எய்தினென் உள்ளம் விம்முமால்
ஆண்தகை நெடு முடி அரசர் கோ_மகன்
யாண்டையான் பணித்திர் என்று இரு கை கூப்பினான்
#43
ஆனவன் உரை செய அழிவு_இல் சிந்தையாள்
தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அ
தேன் அமர் தெரியலான் தேவர் கைதொழ
வானகம் எய்தினான் வருந்தல் நீ என்றாள்
#44
எறிந்தன கடிய சொல் செவியுள் எய்தலும்
நெறிந்து அலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன்
அறிந்திலன் உயிர்த்திலன் அசனி ஏற்றினால்
மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே
#45
வாய் ஒளி மழுங்க தன் மலர்ந்த தாமரை
ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர
தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல்
நீ அலது உரை-செய நினைப்பார்களோ என்றான்
#46
எழுந்தனன் ஏங்கினன் இரங்கி பின்னரும்
விழுந்தனன் விம்மினன் வெய்து_உயிர்த்தனன்
அழிந்தனன் அரற்றினன் அரற்றி இன்னன
மொழிந்தனன் பின்னரும் முருகன் செவ்வியான்
#47
அறம்-தனை வேர் அறுத்து அருளை கொன்றனை
சிறந்த நின் தண் அளி திருவை தேசு அழித்து
இறந்தனை ஆம் எனின் இறைவ நீதியை
மறந்தனை உனக்கு இதின் மாசு மேல் உண்டோ
#48
சின குறும்பு எறிந்து எழு காம தீ அவித்து
இன குறும்பு யாவையும் எற்றி யாவர்க்கும்
மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய் மறந்து
உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்-பாலதோ
#49
முதலவன் முதலிய முந்தையோர் பழம்
கதையையும் புதுக்கிய தலைவன் கண் உடை
நுதலவன் சிலை விலின் நோன்மை நூறிய
புதல்வனை எங்ஙனம் பிரிந்து போயினாய்
#50
செம் வழி உருட்டிய திகிரி மன்னவ
எ வழி மருங்கினும் இரவலாளர் தாம்
இ வழி உலகின் இல் இன்மை நண்பினோர்
அ வழி உலகினும் உளர்-கொலோ ஐயா
#51
பல் பகல் நிழற்றும் நின் கவிகை பாய் நிழல்
நிற்பன பல் உயிர் உணங்க நீ நெடும்
கற்பக நறு நிழல் காதலித்தியோ
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே
#52
இம்பர் நின்று ஏகினை இருக்கும் சார்பு இழந்து
உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ
சம்பரன் அனைய அ தானை தானவர்
அம்பரத்து இன்னமும் உளர்-கொலாம் ஐயா
#53
இயம் கெழு தானையர் இறுத்த மா திறை
உயங்கல் இல் மறையவர்க்கு உதவி உம்பரின்
அயம் கெழு வேள்வியோடு அமரர்க்கு ஆக்கிய
வயங்கு எரி வளர்க்கலை வைக வல்லையோ
#54
ஏழ் உயர் மத களிற்று இறைவ ஏகினை
வாழிய கரியவன் வறியன் கை என
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா
ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ
#55
பற்று இலை தவத்தினின் பயந்த மைந்தற்கு
முற்று உலகு அளித்து அது முறையின் எய்திய
கொற்றவன் முடி மண கோலம் காணவும்
பெற்றிலை போலும் நின் பெரிய கண்களால்
#56
ஆற்றலன் இன்னன பன்னி ஆவலித்து
ஊற்று உறு கண்ணினன் உருகுவான்-தனை
தேற்றினன் ஒரு வகை சிறிது தேறிய
கூற்று உறழ் வரி சிலை குரிசில் கூறுவான்
#57
எந்தையும் யாயும் எம்பிரானும் எம் முனும்
அந்தம்_இல் பெரும் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால்
சிந்தை வெம் கொடும் துயர் தீர்கலாது என்றான்
#58
அ உரை கேட்டலும் அசனி_ஏறு என
வெம் உரை வல்லவள் மீட்டும் கூறுவாள்
தெவ் அடு சிலையினாய் தேவி தம்பி என்று
இ இருவோரொடும் கானத்தான் என்றான்
#59
வனத்தினன் என்று அவள் இசைத்த மாற்றத்தை
நினைத்தனன் இருந்தனன் நெருப்பு உண்டான் என
வினை திறம் யாது இனி விளைப்பது இன்னமும்
எனைத்து உள கேட்பன துன்பம் யான் என்றான்
#60
ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல் அ
பூம் கழல் காலவன் வனத்து போயது
தீங்கு இழைத்த அதனினோ தெய்வம் சீறியோ
ஓங்கிய விதியினோ யாதினோ எனா
#61
தீயன இராமனே செய்யுமேல் அவை
தாய் செயல் அல்லவோ தலத்து உளோர்க்கு எலாம்
போயது தாதை விண் புக்க பின்னரோ
ஆயதன் முன்னரோ அருளுவீர் என்றான்
#62
குருக்களை இகழ்தலின் அன்று கூறிய
செருக்கினால் அன்று ஒரு தெய்வத்தாலும் அன்று
அருக்கனே அனைய அ அரசர் கோ_மகன்
இருக்கவே வனத்து அவன் ஏகினான் என்றாள்
#63
குற்றம் ஒன்று இல்லையேல் கொதித்து வேறு உளோர்
செற்றதும் இல்லையேல் தெய்வத்தால் அன்றேல்
பெற்றவன் இருக்கவே பிள்ளை கான் புக
உற்றது என் தெரிதர உரை-செய்வீர் என்றான்
#64
வாக்கினால் வரம் தர கொண்டு மைந்தனை
போக்கினேன் வனத்திடை போக்கி பார் உனக்கு
ஆக்கினேன் அவன் அது பொறுக்கலாமையால்
நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து என்றான்
#65
சூடின மலர் கரம் சொல்லின் முன் செவி
கூடின புருவங்கள் குனித்து கூத்து நின்று
ஆடின உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள்
ஓடின உமிழ்ந்தன உதிரம் கண்களே
#66
துடித்தன கபோலங்கள் சுற்றும் தீ சுடர்
பொடித்தன மயிர் தொளை புகையும் போர்த்தது
மடித்தது வாய் நெடு மழை கை மண் பக
அடித்தன ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே
#67
பாதங்கள் பெயர்-தொறும் பாரும் மேருவும்
போதம் கொள் நெடும் தனி பொரு_இல் கூம்பொடு
மாதங்கம் வரு கலம் மறுகி கால் பொர
ஓதம் கொள் கடலின்-நின்று உலைவ போன்றவே
#68
அஞ்சினர் வானவர் அவுணர் அச்சத்தால்
துஞ்சினர் எனை பலர் சொரி மத தொளை
எஞ்சின திசை கரி இரவி மீண்டனன்
வெம் சின கூற்றும் தன் விழி புதைத்தே
#69
கொடிய வெம் கோபத்தால் கொதித்த கோளரி
கடியவள் தாய் என கருதுகின்றிலன்
நெடியவன் முனியும் என்று அஞ்சி நின்றனன்
இடி உரும் அனைய வெம் மொழி இயம்புவான்
#70
மாண்டனன் எந்தை என் தம்முன் மா தவம்
பூண்டனன் நின் கொடும் புணர்ப்பினால் என்றால்
கீண்டிலென் வாய் அது கேட்டும் நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்
#71
நீ இனம் இருந்தனை யானும் நின்றனென்
ஏ எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென்
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்
தாய் எனும் பெயர் எனை தடுக்கல்-பாலதோ
#72
மாளவும் உளன் ஒரு மன்னன் வன் சொலால்
மீளவும் உளன் ஒரு வீரன் மேய பார்
ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால்
கோள் இல அறநெறி குறை உண்டாகுமோ
#73
சுழியுடை தாய் சொலும் கொடிய சூழ்ச்சியால்
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து ஒரு
பழி உடைத்து ஆக்கினன் பரதன் பண்டு எனும்
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ
#74
நோயீர் அல்லீர் நும் கணவன் தன் உயிர் உண்டீர்
பேயீரே நீர் இன்னம் இருக்க பெறுவீரே
மாயீர் மாயா வன் பழி தந்தீர் முலை தந்தீர்
தாயீரே நீர் இன்னும் எனக்கு என் தருவீரே
#75
ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும்
தின்றும் தீரா வன் பழி கொண்டீர் திரு எய்தி
என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏக
கன்றும் தாயும் போல்வன கண்டும் கழியீரே
#76
இறந்தான் தந்தை ஈந்த வரத்துக்கு இழிவு என்னா
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம்
துறந்தான் தாயின் சூழ்ச்சியின் ஞாலம் அவனோடும்
பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே
#77
மாளும் என்றே தந்தையை உன்னான் வசை கொண்டாள்
கோளும் என்னாலே எனல் கொண்டான் அது அன்றேல்
மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகு எல்லாம்
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசு ஆள்வான்
#78
ஓதா நின்ற தொல் குல மன்னன் உணர்வு அப்பால்
யாதானும் தான் ஆக எனக்கே பணி செய்வான்
தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன் என்ன
போதாதோ என் தாய் இவள் கொண்ட பொருள் அம்மா
#79
உய்யாநின்றேன் இன்னமும் என்முன் உடன் வந்தான்
கை ஆர் கல்லை புல் அடகு உண்ண கலம் ஏந்தி
வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு அமுது என்ன
நெய்யோடு உண்ண நின்றது நின்றார் நினையாரோ
#80
வில் ஆர் தோளான் மேவினன் வெம் கானகம் என்ன
நல்லான் அன்றே துஞ்சினன் நஞ்சே அனையாளை
கொல்லேன் மாயேன் வன் பழியாலே குறைவு அற்றேன்
அல்லேனோ யான் அன்பு உடையார் போல் அழுகின்றேன்
#81
பாரோர் கொள்ளார் யான் உயிர் பேணி பழி பூணேன்
தீராது ஒன்றால் நின் பழி ஊரில் திரு நில்லாள்
ஆரோடு எண்ணிற்று ஆர் உரைதந்தார் அறம் எல்லாம்
வேரோடும் கேடு ஆக முடித்து என் விளைவித்தாய்
#82
கொன்றேன் நான் என் தந்தையை மற்று உன் கொலை வாயால்
ஒன்றோ கானத்து அண்ணலே உய்த்தேன் உலகு ஆள்வான்
நின்றேன் என்றால் நின் பிழை உண்டோ பழி உண்டோ
என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ
#83
கண்ணாலே என் செய் வினை இன்னும் சில காண்பார்
மண்ணோர் பாராது எள்ளுவர் வாளா பழி பூண்டாய்
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று
எண்ணா நின்றேன் அன்றி இரேன் என் உயிரோடே
#84
ஏன்று உன் பாவி கும்பி வயிற்றினிடை வைகி
தோன்றும் தீரா பாதகம் அற்று என் துயர் தீர
சான்றும்-தானே நல் அறம் ஆக தகை ஞாலம்
மூன்றும் காண மா தவம் யானே முயல்கின்றேன்
#85
சிறந்தார் சொல்லும் நல் உரை சொன்னேன் செயல் எல்லாம்
மறந்தாய் செய்தாய் ஆகுதி மாயா உயிர்-தன்னை
துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி உலகத்தே
பிறந்தாய் ஆதி ஈது அலது இல்லை பிறிது என்றான்
#86
இன்னணம் இனையன இயம்பி யானும் இ
பன்ன_அரும் கொடு மன பாவிபாடு இரேன்
துன்ன_அரும் துயர் கெட தூய கோசலை
பொன் அடி தொழுவென் என்று எழுந்து போயினான்
#87
ஆண்தகை கோசலை அருகர் எய்தினன்
மீண்டும் மண் கிழிதர வீழ்ந்து கேழ் கிளர்
காண் தகு தட கையின் கமல சீறடி
பூண்டனன் கிடந்தனன் புலம்பினான்-அரோ
#88
எந்தை எ உலகு உளான் எம்முன் யாண்டையான்
வந்தது தமியென் இ மறுக்கம் காணவோ
சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும்
அந்தரத்து அமரரும் அழுது சோரவே
#89
அடித்தலம் கண்டிலென் யான் என் ஐயனை
படித்தலம் காவலன் பெயரல்-பாலனோ
பிடித்திலிர் போலும் நீர் பிழைத்திரால் எனும்
பொடி தலம் தோள் உற புரண்டு சோர்கின்றான்
#90
கொடியவர் யாவரும் குலங்கள் வேர் அற
நொடிகுவென் யான் அது நுவல்வது எங்ஙனம்
கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன்
முடிகுவென் அரும் துயர் முடிய என்னுமால்
#91
இரதம் ஒன்று ஊர்ந்து பார் இருளை நீக்கும் அ
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம்
பரதன் என்று ஒரு பழி படைத்தது என்னுமால்
மரகத மலை என வளர்ந்த தோளினான்
#92
வாள் தொடு தானையான் வானில் வைகிட
காடு ஒரு தலைமகன் எய்த கண் இலா
நாடு ஒரு துயரிடை நைவதே எனும்
தாள் தொடு தட கை அ தருமமே அனான்
#93
புலம்பு உறு குரிசில்-தன் புலர்வு நோக்கினாள்
குலம் பொறை கற்பு இவை சுமந்த கோசலை
நிலம் பொறை ஆற்றலன் நெஞ்சம் தூய்து எனா
சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள்
#94
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்
செய்யனே என்பது தேறும் சிந்தையாள்
கைகயர் கோ_மகள் இழைத்த கைதவம்
ஐய நீ அறிந்திலை போலுமால் என்றாள்
#95
தாள் உறு குரிசில் அ தாய் சொல் கேட்டலும்
கோள் உறு மடங்கலின் குமுறி விம்முவான்
நாள் உறு நல் அறம் நடுங்க நாவினால்
சூளுறு கட்டுரை சொல்லல் மேயினான்
#96
அறம் கெட முயன்றவன் அருள்_இல் நெஞ்சினன்
பிறன் கடை நின்றவன் பிறரை சீறினோன்
மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன்
துறந்த மா தவர்க்கு அரும் துயரம் சூழ்ந்துளோன்
#97
குரவரை மகளிரை வாளின் கொன்றுளோன்
புரவலன்-தன்னொடும் அமரில் புக்கு உடன்
விரவலர் வெரிந்நிடை விழிக்க மீண்டுளோன்
இரவலர் அரு நிதி எறிந்து வௌவினோன்
#98
தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று
அழைத்தவன் அற நெறி அந்தணாளரில்
பிழைத்தவன் பிழைப்பு_இலா மறையை பேணலாது
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன்
#99
தாய் பசி உழந்து உயிர் தளர தான் தனி
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும்
நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அ
தீ எரி நரகத்து கடிது செல்க யான்
#100
தாளினில் அடைந்தவர்-தம்மை தற்கு ஒரு
கோள் உற அஞ்சினன் கொடுத்த பேதையும்
நாளினும் அறம் மறந்தவனும் நண்ணுறும்
மீள_அரு நரகிடை கடிது வீழ்க யான்
#101
அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன்
மைந்தரை கொன்றுளோன் வழக்கில் பொய்த்துளோன்
நிந்தனை தேவரை நிகழ்த்தினோன் புகும்
வெம் துயர் நரகத்து வீழ்க யானுமே
#102
கன்று உயிர் ஓய்ந்து உக கறந்து பால் உண்டோன்
மன்றிடை பிறர் பொருள் மறைத்து வவ்வினோன்
நன்றியை மறந்திடும் நயம்_இல் நாவினோன்
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே
#103
ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை
ஊறு கொண்டு அலைக்க தன் உயிர் கொண்டு ஓடினோன்
சோறு தன் அயலுளோர் பசிக்க துய்த்துளோன்
ஏறும் அ கதியிடை யானும் ஏறவே
#104
எஃகு எறி செரு_முகத்து ஏற்ற தெவ்வருக்கு
ஒஃகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான்
அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள்
வெஃகிய மன்னன் வீழ் நரகின் வீழ்க யான்
#105
அழிவு அரும் அரசியல் எய்தி ஆகும் என்று
இழி வரு சிறு தொழில் இயற்றி ஆண்டு தன்
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு
பழி வரு நெறி படர் பதகன் ஆக யான்
#106
தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர்
எஞ்சல்_இல் மறுக்கினோடு இரியல் போயுற
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீ கொள
அஞ்சின மன்னவன் ஆக யானுமே
#107
கன்னியை அழி செய கருதினோன் குரு
பன்னியை நோக்கினோன் பருகினோன் நறை
பொன் இகழ் களவினில் பொருந்தினோன் எனும்
இன்னவர் உறு கதி என்னது ஆகவே
#108
ஊண் அல உண் வழி நாயின் உண்டவன்
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை
பேணலன் பிறர் பழி பிதற்றி ஆக யான்
#109
மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன்
சிறு விலை எளியவர் உணவு சிந்தினோன்
நறியன அயலவர் நாவில் நீர் வர
உறு பதம் நுங்கிய ஒருவன் ஆக யான்
#110
வில்லினும் வாளினும் விரிந்த ஆண்_தொழில்
புல்லிடை உகுத்தனென் பொய்ம்மை யாக்கையை
சில் பகல் ஓம்புவான் செறுநர் சீறிய
இல்லிடை இடு பதம் ஏற்க என் கையால்
#111
ஏற்றவற்கு ஒரு பொருள் உள்ளது இன்று என்று
மாற்றலன் உதவலன் வரம்பு_இல் பல் பகல்
ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அ
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான்
#112
பிணிக்கு உறு முடை உடல் பேணி பேணலார்
துணி குறு வயிர வாள் தட கை தூக்கி போய்
மணி குறு_நகை இள மங்கைமார்கள் முன்
தணிக்குறு பகைஞரை தாழ்க என் தலை
#113
கரும்பு அலர் செந்நெல் அம் கழனி கான நாடு
அரும் பகை கவர்ந்து உண ஆவி பேணினென்
இரும்பு அலர் நெடும் தளை ஈர்த்த காலொடும்
விரும்பலர் முகத்து எதிர் விழித்து நிற்க யான்
#114
தூய வாசகம் சொன்ன தோன்றலை
தீய கானகம் திருவின் நீங்கி முன்
போயினான் வர கண்ட பொம்மலாள்
ஆய காதலால் அழுது புல்லினாள்
#115
முன்னை நும் குல முதலுளோர்கள்-தாம்
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்
மன்னர் மன்னவா என்று வாழ்த்தினாள்
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள்
#116
மறு_இல் மைந்தனே வள்ளல் உந்தையார்
இறுதி எய்தி நாள் ஏழ்_இரண்டின
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று
உறுவல் மேயினாள் உரையின் மேயினாள்
#117
அன்னை ஏவினாள் அடி இறைஞ்சினான்
பொன்னின் வார் சடை புனிதனோடும் போய்
தன்னை நல்கி அ தருமம் நல்கினான்
பன்னு தொல் அற படிவம் நோக்கினான்
#118
மண்ணின் மேல் விழுந்து அலறி மாழ்குவான்
அண்ணல் ஆழியான் அவனி காவலான்
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான்
#119
பற்றி அ-வயின் பரிவின் வாங்கினார்
சுற்றும் நான்மறை துறை செய் கேள்வியார்
கொற்ற மண்கணை குமுற மன்னனை
மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினர்
#120
கரை செய் வேலை போல் நகரி கை எடுத்து
உரை செய் பூசலிட்டு உயிர் துளங்குற
அரச வேலை சூழ்ந்து அழுது கைதொழ
புரசை யானையில் கொண்டு போயினார்
#121
சங்கு பேரியும் தழுவு சின்னமும்
எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் என
பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே
#122
மாவும் யானையும் வயங்கு தேர்களும்
கோவும் நான் மறை குழுவும் முன் செல
தேவிமாரொடும் கொண்டு தெண் திரை
தாவு வார் புனல் சரயு எய்தினார்
#123
எய்தி நூலுளோர் மொழிந்த யாவையும்
செய்து தீ கலம் திருத்தி செல்வனை
வெய்தின் ஏற்றினார் வீர நுந்தைபால்
பொய்_இல் மா கடன் கழித்தி போந்து என்றார்
#124
என்னும் வேலையில் எழுந்த வீரனை
அன்னை தீமையால் அரசன் நின்னையும்
துன்னு துன்பத்தால் துறந்து போயினான்
முன்னரே என முனிவன் கூறினான்
#125
துறந்து போயினான் நுந்தை தோன்றல் நீ
பிறந்து பேர் அறம் பிழைத்தது என்றபோது
இறந்து போயினான் இருந்தது ஆண்டு அது
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம்-கொலாம்
#126
இடி-கண் வாள் அரா இடைவது ஆம் எனா
படி-கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான்
தடுக்கல் ஆகலா துயரம் தன் உளே
துடிக்க விம்மி நின்று அழுது சொல்லுவான்
#127
உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே
இரவி-தன் குலத்து எந்தை முந்தையோர்
பிரத பூசனைக்கு உரிய பேறு இலேன்
அரசு செய்யவோ ஆவது ஆயினேன்
#128
பூவில் நான்முகன் புதல்வன் ஆதி ஆம்
தா_இல் மன்னர் தம் தரும நீதியால்
தேவர் ஆயினார் சிறுவன் ஆகியே
ஆவ நான் பிறந்து அவத்தன் ஆனவா
#129
துன்னு தாள் வளம் சுமந்த தாழையில்
பன்னு வான் குலை பதடி ஆயினேன்
என்னை என்னையே ஈன்று காத்த என்
அன்னையார் எனக்கு அழகு செய்தவா
#130
என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அ
துன்று தாரவற்கு இளைய தோன்றலால்
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான்
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான்
#131
இழையும் ஆரமும் இடையும் மின்னிட
குழையும் மா மலர் கொம்பு அனார்கள் தாம்
தழை இல் முண்டகம் தழுவி கானிடை
முழையில் மஞ்ஞை போல் எரியில் மூழ்கினார்
#132
அங்கி நீரினும் குளிர அம்புய
திங்கள் வாள் முகம் திரு விளங்குற
சங்கை தீர்ந்து தம் கணவர் பின் செலும்
நங்கைமார் புகும் உலகம் நண்ணினார்
#133
அனைய மா தவன் அரசர் கோ_மகற்கு
இனைய தன்மையால் இயைவ செய்த பின்
மனையின் எய்தினான் மரபின் வாழ்வினை
வினையின் எய்தும் ஓர் பிணியின் வேலையான்
#134
ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என
மைந்தன் வெம் துயர் கடலின் வைகினான்
தந்தை தன்-வயின் தருமம் யாவையும்
முந்து நூலுளோர் முறையின் முற்றினான்

12 ஆறு செல் படலம்

#1
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து
அரு மறை முனிவனும் ஆண்டையான் என
விரைவின் வந்து ஈண்டினர் விரகின் எய்தினர்
பரதனை வணங்கினர் பரியும் நெஞ்சினர்
#2
மந்திர கிழவரும் நகர மாந்தரும்
தந்திர தலைவரும் தரணி பாலரும்
அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும்
சுந்தர குரிசிலை மரபின் சுற்றினார்
#3
சுற்றினர் இருந்துழி சுமந்திர பெயர்
பொன் தடம் தேர் வலான் புலமை உள்ளத்தான்
கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான்
முற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான்
#4
நோக்கினால் சுமந்திரன் நுவலல் உற்றதை
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன்
காக்குதி உலகம் நின் கடன் அது ஆம் என
கோ குமரனுக்கு அது தெரிய கூறுவான்
#5
வேதியர் அருந்தவர் விருத்தர் வேந்தர்கள்
ஆதியர் நின்-வயின் அடைந்த காரியம்
நீதியும் தருமமும் நிறுவ நீ இது
கோது_அறு குணத்தினாய் மனத்து கோடியால்
#6
தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல்
அருமை என்பது பெரிது அறிதி ஐய நீ
இருமையும் தருவதற்கு இயைவது ஈண்டு இது
தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால்
#7
வள் உறு வயிர வாள் அரசு_இல் வையகம்
நள் உறு கதிர் இலா பகலும் நாளொடும்
தெள்ளுறு மதி இலா இரவும் தேர்தரின்
உள் உறை உயிர் இலா உடலும் ஒக்குமே
#8
தேவர்-தம் உலகினும் தீமை செய்து உழல்
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும்
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை
காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம்
#9
முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின்
மறையவன் வகுத்தன மண்ணில் வானிடை
நிறை பெரும் தன்மையின் நிற்ப செல்வன
இறைவரை இல்லன யாவும் காண்கிலம்
#10
பூத்த நாள்_மலர் அயன் முதல புண்ணியர்
ஏத்து வான் புகழினர் இன்று-காறும் கூ
காத்தனர் பின் ஒரு களைகண் இன்மையால்
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால்
#11
உந்தையோ இறந்தனன் உம்முன் நீத்தனன்
வந்ததும் அன்னை-தன் வரத்தில் மைந்த நீ
அந்தம்_இல் பேர் அரசு அளித்தி அன்னது
சிந்தனை எமக்கு என தெரிந்து கூறினான்
#12
தஞ்சம் இ உலகம் நீ தாங்குவாய் என
செஞ்செவே முனிவரன் செப்ப கேட்டலும்
நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன் அருவி கண்ணினான்
#13
நடுங்கினன் நா தடுமாறி நாட்டமும்
இடுங்கினன் மகளிரின் இரங்கும் நெஞ்சினன்
ஒடுங்கிய உயிரினன் உணர்வு கைதர
தொடங்கினன் அரசவைக்கு உள்ளம் சொல்லுவான்
#14
மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய் முதல்
தோன்றினன் இருக்க யான் மகுடம் சூடுதல்
சான்றவர் உரை-செய தருமம் ஆதலால்
ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ
#15
அடைவு_அரும் கொடுமை என் அன்னை செய்கையை
நடைவரும் தன்மை நீர் நன்று இது என்றிரேல்
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது
கடை வரும் தீ நெறி கலியின் ஆட்சியோ
#16
வேத்தவை இருந்த நீர் விமலன் உந்தியில்
பூத்தவன் முதலினர் புவியுள் தோன்றினார்
மூத்தவர் இருக்கவே முறைமையால் நிலம்
காத்தவர் உளர் எனின் காட்டி காண்டிரால்
#17
நல் நெறி என்னினும் நான் இ நானில
மன் உயிர் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்
அன்னவன் தனை கொணர்ந்து அலங்கல் மா முடி
தொல் நெறி முறைமையின் சூட்டி காண்டிரால்
#18
அன்று எனின் அவனொடும் அரிய கானிடை
நின்று இனிது இருந்தவம் நெறியின் ஆற்றுவென்
ஒன்று இனி உரைக்கின் என் உயிரை நீக்குவென்
என்றனன் என்ற போது இருந்த பேர் அவை
#19
ஆன்ற பேர் அரசனும் இருப்ப ஐயனும்
ஏன்றனன் மணி முடி ஏந்த ஏந்தல் நீ
வான் தொடர் திருவினை மறுத்தி மன் இளம்
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார்
#20
ஆழியை உருட்டியும் அறங்கள் போற்றியும்
வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும்
வாழிய நின் புகழ் என்று வாழ்த்தினார்
#21
குரிசிலும் தம்பியை கூவி கொண்டலின்
முரசு அறைந்து இ நகர் முறைமை வேந்தனை
தருதும் ஈண்டு என்பது சாற்றி தானையை
விரைவினில் எழுக என விளம்புவாய் என்றான்
#22
நல்லவன் உரை-செய நம்பி கூறலும்
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர்
ஒல்லென இரைத்ததால் உயிர்_இல் யாக்கை அ
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே
#23
அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உள
புவி-தலை உயிர் எலாம் இராமன் பொன் முடி
கவிக்கும் என்று உரைக்கவே களித்ததால் அது
செவி புலம் நுகர்வது ஓர் தெய்வ தேன்-கொலாம்
#24
படு முரசு அறைந்தனர் பரதன் தம்முனை
கொடி நகர் தரும் அவன் கொணர சேனையும்
முடுகுக என்ற சொல் மூரி மா நகர்
உடுபதி வேலையின் உதயம் போன்றதே
#25
எழுந்தது பெரும் படை எழு வேலையின்
மொழிந்த பேர் ஊழியின் முழங்கி முந்து எழ
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை போய்
கழிந்தது துயர் நெடும் காதல் தூண்டவே
#26
பண்ணின புரவி தேர் பகடு பண்டியும்
மண்ணினை மறைத்தன மலிந்த மா கொடி
விண்ணினை மறைத்தன விரிந்த மா துகள்
கண்ணினை மறைத்தன கமலத்தோனையே
#27
ஈசன் இ உலகினை அழிக்கும் நாள் எழும்
ஓசையின் நிமிர்ந்துளது ஒல்லென் பேர் ஒலி
காசையின் கரியவன் காண மூண்டு எழும்
ஆசையின் நிமிர்ந்தது அ அனிக ராசியே
#28
படியொடு திரு நகர் துறந்து பல் மரம்
செடியொடு தொடர் வனம் நோக்கி சீதை ஆம்
கொடியொடு நடந்த அ கொண்டல் ஆம் என
பிடியொடு நடந்தன பெரும் கை வேழமே
#29
சேற்று இள மரை மலர் சிதைந்தவாம் என
கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும்
ஏற்று இளம் பிடி_குலம் இகலி இன் நடை
தோற்று இள மகளிரை சுமப்ப போன்றவே
#30
வேதனை வெயில் கதிர் தணிக்க மென் மழை
சீத நீர் தொடு நெடும் கொடியும் சென்றன
கோதை வெம் சிலையவன் கோலம் காண்கிலா
மாதரின் நுடங்குவ வரம்பு_இல் கோடியே
#31
வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்து என
அண்ணல் வெம் கதிரவன் அளவு_இல் மூர்த்தி ஆய்
மண்ணிடை இழிந்து ஒரு வழி கொண்டால் என
எண்ண_அரு மன்னவர் களிற்றின் ஏகினார்
#32
தேர்-மிசை சென்றது ஓர் பரவை செ முக
கார் மிசை சென்றது ஓர் உவரி கார் கடல்
ஏர் முக பரி மிசை ஏகிற்று எங்கணும்
பார் மிசை படர்ந்தது பதாதி பௌவமே
#33
தாரையும் சங்கமும் தாளம் கொம்பொடு
வார் மிசை பம்பையும் துடியும் மற்றவும்
பேரியும் இயம்பல சென்ற பேதைமை
பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே
#34
தா_அரு நாண் முதல் அணி அலால் தகை
மே வரு கலங்களை வெறுத்த மேனியர்
தேவரும் மருள்கொள தெரியும் காட்சியர்
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார்
#35
அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன்
விதி வரும் தனி குடை மீது இலா படை
பொதி பல கவிகை மீன் பூத்தது ஆகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே
#36
செல்லிய செலவினால் சிறிய திக்கு என
சொல்லிய சேனையை சுமந்ததே எனில்
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர்
மெல்லியல் என்றவர் மெலியரே-கொலாம்
#37
தங்கு தண் சாந்து அகில் கலவை சார்கில
குங்குமம் கொட்டில கோவை முத்து இல
பொங்கு இளம் கொங்கைகள் புதுமை வேறு இல
தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய
#38
இன் துணையவர் முலை எழுது சாந்தினும்
மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால்
துன்று இளம் கொடி முதல் தூறு நீங்கிய
குன்று என பொலிந்தன குவவு தோள்களே
#39
நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின்
துறை அற அஞ்சனம் துறந்த நாட்டங்கள்
குறை அற நிகர்த்தன கொற்றம் முற்றுவான்
கறை அற கழுவிய கால வேலையே
#40
விரி மணி மேகலை விரவி ஆர்க்கில
தெரிவையர் அல்குல் தார் ஒலி இல் தேர் என
பரிபுரம் ஆர்க்கில பவள சீறடி
அரி இனம் ஆர்க்கிலா கமலம் என்னவே
#41
மல்கிய கேகயன் மடந்தை வாசகம்
நல்கியது அரிவையர் நடுவிற்கே-கொலாம்
புல்கிய மணி வடம் பூண்கிலாமையால்
ஒல்கிய ஒரு வகை பொறை உயிர்த்தவே
#42
கோ_மகன் பிரிதலின் கோலம் நீத்துள
தாமரை செல்வியும் தவத்தை மேவினாள்
காமனும் அரும் துயர் கடலில் மூழ்கினான்
ஆம் என நிகழ்ந்தது அ அளவு_இல் சேனையை
#43
மண்ணையும் வானையும் வயங்கு திக்கையும்
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்
கண்ணினும் மனத்தினும் கமலத்து அண்ணல்-தன்
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனையே
#44
அலை நெடும் புனல் அற குடித்தலால் அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ்
தலைவனை நிகர்த்தது அ தயங்கு தானையே
#45
அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமா
செறி பெரும் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள்
மறி கடல் ஒத்தது அ அயோத்தி மா நகர்
#46
பெரும் திரை நதிகளும் வயலும் பெட்பு உறு
மரங்களும் மலைகளும் மண்ணும் கண் உற
திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர்
அரும் தெரு ஒத்தது அ படை செல் ஆறு-அரோ
#47
தார்கள்தாம் கோதைதாம் தாமம்தாம் தகை
ஏர்கள்தாம் கலவைதாம் கமழ்ந்தின்று என்பரால்
கார்கள்தாம் என மிக கடுத்த கைம்மலை
வார் கடாம் அல்லது அ மன்னன் சேனையே
#48
ஆள் உலாம் கடலினும் அகன்ற அ கடல்
தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி
கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால்
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே
#49
மத்தளம் முதலிய வயங்கு பல்_இயம்
ஒத்தன சேறலின் உரை இலாமையின்
சித்திர சுவர் நெடும் சேனை தீட்டிய
பத்தியை நிகர்த்தது அ படையின் ஈட்டமே
#50
ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல்
ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணா-வகை
ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது
காடு உறை வாழ்க்கையை கண்ணன் நண்ணவே
#51
கனம் குழை கேகயன் மகளின் கண்ணிய
சினம் கிடந்து எரிதலின் தீர்ந்தவே-கொலாம்
அனங்கன் ஐம் கொடும் கணை அடரும் ஆடவர்
மனம் கிடந்து உண்கில மகளிர் கொங்கையே
#52
இன்னணம் நெடும் படை ஏக ஏந்தலும்
தன்னுடை திரு அரை சீரை சாத்தினான்
பின் இளையவனொடும் பிறந்த துன்பொடும்
நல் நெடும் தேர் மிசை நடத்தல் மேயினான்
#53
தாயரும் அரும் தவத்தவரும் தந்தையின்
ஆய மந்திரியரும் அளவு_இல் சுற்றமும்
தூய அந்தணர்களும் தொடர்ந்து சூழ்வர
போயினன் திரு நகர் புரிசை வாயிலே
#54
மந்தரை கூற்றமும் வழி செல்வாரொடும்
உந்தியே போதல் கண்டு இளவல் ஓடி ஆர்த்து
அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும்
சுந்தர தோளவன் விலக்கி சொல்லுவான்
#55
முன்னையர் முறை கெட முடித்த பாவியை
சின்னபின்னம் செய்து என் சினத்தை தீர்வெனேல்
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால்
அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான்
#56
மொய் பெரும் சேனையும் மூரி ஞாலமும்
கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட
ஐயனும் தேவியும் இளைய ஆளியும்
வைகிய சோலையில் தானும் வைகினான்
#57
அல் அணை நெடும் கணீர் அருவி ஆடினன்
கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன்
வில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய
புல் அணை மருங்கில் தான் பொடியின் வைகினான்
#58
ஆண்டு நின்று ஆண்தகை அடியின் ஏகினான்
ஈண்டிய நெறி என தானும் ஏகினான்
தூண்டிடு தேர்களும் துரக ராசியும்
காண்தகு கரிகளும் தொடர காலினே

13 கங்கை காண் படலம்

#1
பூ விரி பொலன் கழல் பொரு_இல் தானையான்
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட கங்கை எய்தினான்
#2
எண்ண_அரும் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும்
அண்ணல் வெம் கரி மதத்து அருவி பாய்தலால்
உண்ணவும் குடையவும் உரித்து அன்று ஆயதே
#3
அடி மிசை தூளி புக்கு அடைந்த தேவர்-தம்
முடி உற பரந்தது ஓர் முறைமை தேர்ந்திலெம்
நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும்
பொடி மிசை புரண்டவும் புரவி ஈட்டமே
#4
பாலை ஏய் நிறத்தொடு பண்டு தான் படர்
ஓலை ஏய் நெடும் கடல் ஓடிற்று இல்லையால்
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம்
வேலையே மடுத்தது அ கங்கை வெள்ளமே
#5
கான் தலை நண்ணிய காளை பின் படர்
தோன்றலை அ வழி தொடர்ந்து சென்றன
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள்
மூன்று_பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே
#6
அ படை கங்கையை அடைந்த ஆயிடை
துப்பு உடை கடலின் நீர் சுமந்த மேகத்தை
ஒப்பு உடை அண்ணலோடு உடற்றவே-கொலாம்
இ படை எடுத்தது என்று எடுத்த சீற்றத்தான்
#7
குகன் என பெயரிய கூற்றின் ஆற்றலான்
தொகை முரண் சேனையை துகளின் நோக்குவான்
நகை மிக கண்கள் தீ நாற நாசியில்
புகை உற குனிப்புறும் புருவ போர்விலான்
#8
மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன் தான்
ஐ_ஐ நூறு_ஆயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான் வில்லின் கல்வியான்
#9
கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்
வெட்டிய மொழியினன் விழிக்கும் தீயினன்
கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன்
கிட்டியது அமர் என கிளரும் தோளினான்
#10
எலி எலாம் இ படை அரவம் யான் என
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான்
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்
புலி எலாம் ஒரு வழி புகுந்த போலவே
#11
மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான்
ஒருங்கு அடை நெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு
அரும் கடையுகம்-தனில் அசனி மா மழை
கரும் கடல் கிளர்ந்து என கலந்து சூழவே
#12
தோன்றிய புளிஞரை நோக்கி சூழ்ச்சியின்
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு
ஏன்றனென் என் உயிர்_துணைவற்கு ஈகுவான்
ஆன்ற பேர் அரசு நீர் அமைதிர் ஆம் என்றான்
#13
துடி எறி நெறிகளும் துறையும் சுற்றுற
ஒடியெறி அம்பிகள் யாதும் ஓட்டலிர்
கடி எறி கங்கையின் கரை வந்தோர்களை
பிடி எறி பட எனா பெயர்த்தும் கூறுவான்
#14
அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே
செம் சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ
உஞ்சு இவர் போய்விடின் நாய் குகன் என்று எனை ஓதாரோ
#15
ஆழ நெடும் திரை ஆறு கடந்து இவர் போவாரோ
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ
#16
முன்னவன் என்று நினைந்திலன் மொய் புலி அன்னான் ஓர்
பின்னவன் நின்றனன் என்றிலன் அன்னவை பேசானேல்
என் இவன் என்னை இகழ்ந்தது இ எல்லை கடந்து அன்றோ
மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும் சரம் வாயாவோ
#17
பாவமும் நின்ற பெரும் பழியும் பகை நண்போடும்
ஏவமும் என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ
ஆவது போக என் ஆருயிர் தோழமை தந்தான் மேல்
போவது சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ
#18
அரும் தவம் என் துணை ஆள இவன் புவி ஆள்வானோ
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ
பொருந்திய கேண்மை உகந்தவர்-தம்மொடு போகாதே
இருந்தது நன்று கழிக்குவென் என் கடன் இன்றோடே
#19
தும்பியும் மாவும் மிடைந்த பெரும் படை சூழ்வு ஆரும்
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ
வெம்பிய வேடர் உளீர் துறை ஓடம் விலக்கீரோ
நம்பி முன்னே இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ
#20
போன படை தலை வீரர்-தமக்கு இரை போதா இ
சேனை கிடக்கிடு தேவர் வரின் சிலை மா மேகம்
சோனை பட குடர் சூறை பட சுடர் வாளோடும்
தானை பட தனி யானை பட திரள் சாயேனோ
#21
நின்ற கொடை கை என் அன்பன் உடுக்க நெடும் சீரை
அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தை என் அம்பாலே
கொன்று குவித்த நிணம் கொள் பிண குவை கொண்டு ஓடி
துன்று திரை கடல் கங்கை மடுத்து இடை தூராதோ
#22
ஆடு கொடி படை சாடி அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது பார் எனும் இ புகழ் மேவீரோ
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ
#23
மா முனிவர்க்கு உறவாகி வனத்திடையே வாழும்
கோ முனிய தகும் என்று மனத்து இறை கொள்ளாதே
ஏ முனை உற்றிடில் ஏழு கடல் படை என்றாலும்
ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ
#24
என்பன சொல்லி இரும்பு அன மேனியர் ஏனோர் முன்
வன் பணை வில்லினன் மல் உயர் தோளினன் வாள் வீரற்கு
அன்பனும் நின்றனன் நின்றது கண்டு அரி_ஏறு அன்ன
முன்பனில் வந்து மொழிந்தனன் மூரிய தேர் வல்லான்
#25
கங்கை இரு கரை உடையான் கணக்கு இறந்த நாவாயான்
உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான்
வெம் கரியின் ஏறு அனையான் வில் பிடித்த வேலையினான்
கொங்கு அலரும் நறும் தண் தார் குகன் என்னும் குறி உடையான்
#26
கல் காணும் திண்மையான் கரை காணா காதலான்
அற்கு ஆணி கண்டு அனைய அழகு அமைந்த மேனியான்
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய்
நின் காணும் உள்ளத்தான் நெறி எதிர் நின்றனன் என்றான்
#27
தன் முன்னே அவன் தன்மை தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலா திரு மனத்தான்
மன் முன்னே தழீஇ கொண்ட மனக்கு இனிய துணைவனேல்
என் முன்னே அவன் காண்பென் யானே சென்று என எழுந்தான்
#28
என்று எழுந்த தம்பியொடும் எழுகின்ற காதலொடும்
குன்று எழுந்து சென்றது என குளிர் கங்கை கரை குறுகி
நின்றவனை நோக்கினான் திரு மேனி நிலை உணர்ந்தான்
துன்று கரு நறும் குஞ்சி எயினர் கோன் துண்ணென்றான்
#29
வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை
நல் கலை_இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை
கல் கனிய கனிகின்ற துயரானை கண்ணுற்றான்
வில் கையினின்று இடை வீழ விம்முற்று நின்று ஒழிந்தான்
#30
நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலைநின்றான்
துன்பம் ஒரு முடிவு இல்லை திசை நோக்கி தொழுகின்றான்
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான்
#31
உண்டு இடுக்கண் ஒன்று உடையான் உலையாத அன்பு உடையான்
கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பு எல்லாம்
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா
தண் துறை ஓர் நாவாயில் ஒரு தனியே தான் வந்தான்
#32
வந்து எதிரே தொழுதானை வணங்கினான் மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும் அவனும் அவன் அடிவீழ்ந்தான்
தந்தையினும் களிகூர தழுவினான் தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்
#33
தழுவின புளிஞர்_வேந்தன் தாமரை செங்கணானை
எழுவினும் உயர்ந்த தோளாய் எய்தியது என்னை என்ன
முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும்
வழுவினன் அதனை நீக்க மன்னனை கொணர்வான் என்றான்
#34
கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி
மீட்டும் மண் அதனில் வீழ்ந்தான் விம்மினன் உவகை வீங்க
தீட்ட_அரு மேனி மைந்தன் சேவடி கமல பூவில்
பூட்டிய கையன் பொய்_இல் உள்ளத்தன் புகலலுற்றான்
#35
தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி-தன்னை
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா
#36
என் புகழ்கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான்
தன் புகழ் கற்றை மற்றை ஒளிகளை தவிர்க்குமா போல்
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் உயர் குணத்து உரவு தோளாய்
#37
என இவை அன்ன மாற்றம் இயைவன பலவும் கூறி
புனை சுழல் புலவு வேல் கை புளிஞர்_கோன் பொரு_இல் காதல்
அனையவற்கு அமைவின் செய்தான் ஆர் அவற்கு அன்பு இலாதார்
நினைவு_அரும் குணம்-கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல்
#38
அ வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன
செம் வழி உள்ளத்து அண்ணல் தென் திசை செம் கை கூப்பி
எ வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன்
இ வழி வீர யானே காட்டுவல் எழுக என்றான்
#39
கார் என கடிது சென்றான் கல்லிடை படுத்த புல்லின்
வார் சிலை தட கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்
பார் மிசை பதைத்து வீழ்ந்தான் பருவரல் பரவை புக்கான்
வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்
#40
இயன்றது என் பொருட்டினால் இ இடர் உனக்கு என்ற போழ்தும்
அயின்றனை கிழங்கும் காயும் அமுது என அரிய புல்லில்
துயின்றனை எனவும் ஆவி துறந்திலென் சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே
#41
தூண்தர நிவந்த தோளான் பின்னரும் சொல்லுவான் அ
நீண்டவன் துயின்ற சூழல் இது எனின் நிமிர்ந்த நேயம்
பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன் பொழுது நீத்தது
யாண்டு என இனிது கேட்டான் எயினர்_கோன் இதனை சொன்னான்
#42
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச
வில்லை ஊன்றிய கையோடும் வெய்து_உயிர்ப்போடும் வீரன்
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பு_இலன் நயனம் என்றான்
#43
என்பத்தை கேட்ட மைந்தன் இராமனுக்கு இளையார் என்று
முன்பு ஒத்த தோற்றத்தேமில் யான் என்றும் முடிவு_இலாத
துன்பத்துக்கு ஏது ஆனேன் அவன் அது துடைக்க நின்றான்
அன்பத்துக்கு எல்லை உண்டோ அழகிது என் அடிமை என்றான்
#44
அ இடை அண்ணல்-தானும் அன்று அரும் பொடியின் வைகி
தெவ் இடைதர நின்று ஆர்க்கும் செறி கழல் புளிஞர்_கோமாஅன்
இ இடை கங்கை ஆற்றின் ஏற்றினை ஆயின் எம்மை
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி வேந்தன்-பால் விடுத்தது என்றான்
#45
நன்று என புளிஞர்_வேந்தன் நண்ணினன் தமரை நாவாய்
சென்று இனி தருதிர் என்ன வந்தன சிவன் சேர் வெள்ளி
குன்று என குனிக்கும் அம் பொன் குவடு என குபேரன் மானம்
ஒன்று என நாணி பல் வேறு உருவு கொண்டனைய ஆன
#46
நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய்
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன கலந்த எங்கும்
அங்கொடு இங்கு இழித்தி ஏற்றும் அமைதியின் அமரர் வையத்து
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன
#47
வந்தன வரம்பு_இல் நாவாய் வரி சிலை குரிசில் மைந்த
சிந்தனை யாவது என்று சிருங்கிபேரியர்_கோன் செப்ப
சுந்தர வரி விலானும் சுமந்திரன் தன்னை நோக்கி
எந்தை இ தானை-தன்னை ஏற்றுதி விரைவின் என்றான்
#48
குரிசிலது ஏவலால் அ குரகத தேர் வலானும்
வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வகையின் ஏற்ற
கரி பரி இரதம் காலாள் கணக்கு_அறு கரை_இல் வேலை
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே
#49
இடிபடு முழக்கம் பொங்க இன மழை மகர நீரை
முடிவு உற முகப்ப ஊழி இறுதியின் மொய்ப்ப போல
கொடியொடு வங்கம் வேலை கூம்பொடு படர்வ போல
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின நெடும் கை வேழம்
#50
சங்கமும் மகர மீனும் தரளமும் மணியும் தள்ளி
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான
பொங்கு வெம் களிறு நூக்க கரை ஒரீஇ போயிற்று அம்மா
கங்கையும் இராமன் காணும் காதலது என்ன மாதோ
#51
பாங்கின் உத்தரியம் மான படர் திரை தவழ பாரின்
வீங்கு நீர் அழுவம்-தன்னுள் விழு மத கலுழி வெள்ளத்து
ஓங்கல்கள் தலைகள் தோன்ற ஒளித்து அவண் உயர்ந்த கும்பம்
பூம் குழல் கங்கை நங்கை முலை என பொலிந்த மாதோ
#52
கொடிஞ்சொடு தட்டும் அச்சும் ஆழியும் கோத்த மொட்டும்
நெடும் சுவர் கொடியும் யாவும் நெறி வரு முறையின் நீக்கி
விடும் சுவல் புரவியோடும் வேறு வேறு ஏற்றி சென்ற
மடிஞ்ச பின் உடம்பு கூட்டும் வினை என வயிர தேர்கள்
#53
நால்_இரண்டு ஆய கோடி நவை_இல் நாவாய்கள் மீதா
சேல் திரண்டு அனைய ஆய கதியொடும் நிமிர சென்ற
பால் திரண்டு அனைய மெய்ய பயம் திரண்டு அனைய நெஞ்ச
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா
#54
ஊடு உற நெருக்கி ஓடத்து ஒருவர் முன் ஒருவர் கிட்டி
சூடக தளிர் கை மாதர் குழுமினர் துவன்றி தோன்ற
பாடு இயல் களி நல் யானை பந்தி அம் கடையின் குத்த
கோடுகள் மிடைந்த என்ன மிடைந்தன குவவு கொங்கை
#55
பொலம் குழை மகளிர் நாவாய் போக்கின் ஒன்றுஒன்று தாக்க
மலங்கினர் இரண்டு பாலும் மறுகினர் வெருவி நோக்க
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்கும் இங்கும்
கலங்கலின் வெருவி பாயும் கயல்_குலம் நிகர்த்த கண்கள்
#56
இயல்வு உறு செலவின் நாவாய் இரு கையும் எயினர் தூண்ட
துயல்வன துடுப்பு வீசும் துவலைகள் மகளிர் மென் தூசு
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து
அயர்வு உறும் மதுகை மைந்தர்க்கு அயா_உயிர்ப்பு அளித்தது அம்மா
#57
இ கரை இரைத்த சேனை எறி கடல் முகந்து வெஃகி
அ கரை அடைய வீசி வறியன அணுகும் நாவாய்
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கி போக்கி
அ கணத்து உவரி மீளும் அகல் மழை நிகர்த்த அம்மா
#58
அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த
முகிழ் உடை முரண் மா தண்டு கூம்பு என முகிலின் வண்ண
துகிலொடு தொடுத்த செம்பொன் தகட்டிடை தொடுத்த முத்தின்
நகு கொடி நெடிய பாயா நவ்வென சென்ற நாவாய்
#59
ஆனனம் கமலத்து அன்ன மின் அன்ன அமுத செம் வாய்
தேன் நனை குழலார் ஏறும் அம்பிகள் சிந்து முத்தம்
மீன் என விரிந்த கங்கை விண் என பண்ணை முற்றி
வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாதோ
#60
துளி பட துழாவு திண் கோல் துடுப்பு இரு காலின் தோன்ற
நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு என செல்லும் நாவாய்
களி உடை மஞ்ஞை அன்ன கனம் குழை கயல் கண் மாதர்
ஒளிர் அடி கமலம் தீண்ட உயிர் படைத்தனவே ஒத்த
#61
மை_அறு விசும்பில் மண்ணில் மற்றும் ஓர் உலகில் முற்றும்
மெய் வினை தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ கீழோர்
செய் வினை நாவாய் ஏறி தீண்டலர் மனத்தின் செல்லும்
மொய் விசும்பு ஓடம் ஆக தேவரின் முனிவர் போனார்
#62
அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும் எல்லை தீர் நகர்
மறு அறு மாந்தரும் மகளிர் வெள்ளமும்
செறி திரை கங்கை பின் கிடக்க சென்றவே
#63
கழித்து நீர் வரு துறை ஆற்றை சூழ் படை
கழித்து நீங்கியது என கள்ள ஆசையை
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை
இழித்து மேல் ஏறினான் தானும் ஏறினான்
#64
சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற கோசலையை தொழுது நோக்கி
கொற்ற தார் குரிசில் இவர் ஆர் என்று குகன் வினவ கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றாளை
பெற்றத்தால் பெறும் செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள் என்றான்
#65
என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை இவன் யார் என்று
கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ கழல் கால் மைந்தன்
இன் துணைவன் இராகவனுக்கு இலக்குவற்கும் இளையவற்கும் எனக்கும் மூத்தான்
குன்று அனைய திரு நெடும் தோள் குகன் என்பான் இ நின்ற குரிசில் என்றான்
#66
நைவீர் அலீர் மைந்தீர் இனி துயரால் நாடு இறந்து காடு நோக்கி
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே விலங்கல் திண் தோள்
கை வீர களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து நீவிர்
ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள்
#67
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்-தனை நோக்கி ஐய அன்பின்
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான் தன் இளம் தேவி யாவர்க்கும் தொழு குலம் ஆம் இராமன் பின்பு
பிறந்தானும் உளன் என்ன பிரியாதான் தனை பயந்த பெரியாள் என்றான்
#68
சுடு மயானத்திடை தன் துணை ஏக தோன்றல் துயர் கடலின் ஏக
கடுமை ஆர் கானகத்து கருணை ஆர்கலி ஏக கழல் கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும்
#69
படர் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை தன் பாழ்த்த பாவி
குடரிலே நெடும் காலம் கிடந்தேற்கும் உயிர் பாரம் குறைந்து தேய
உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல் இ நின்றாள் என்னை ஈன்றாள்
#70
என்ன கேட்டு அ இரக்கம் இலாளையும்
தன் நல் கையின் வணங்கினன் தாய் என
அன்ன பேடை சிறை இலது ஆய் கரை
துன்னிற்று என்னவும் வந்தது தோணியே
#71
இழிந்த தாயர் சிவிகையின் ஏற தான்
பொழிந்த கண்ணின் புது புனல் போயினான்
ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான்
கழிந்தனன் பல காவதம் காலினே
#72
பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர்
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம்
அருத்தி கூர அணுகினன் ஆண்டு அவன்
விருத்தி வேதியரோடு எதிர் மேவினான்

14 திருவடி சூட்டுப் படலம்

#1
வந்த மா தவத்தோனை அ மைந்தனும்
தந்தை ஆம் என தாழ்ந்து வணங்கினான்
இந்து_மோலி அன்னானும் இரங்கினான்
அந்தம்_இல் நலத்து ஆசிகள் கூறினான்
#2
எடுத்த மா முடி சூடி நின்-பால் இயைந்து
அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய நீ
முடித்த வார் சடை கற்றையை மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது என்றான்
#3
சின கொடும் திறல் சீற்ற வெம் தீயினான்
மன கடுப்பினன் மா தவத்து ஓங்கலை
எனக்கு அடுத்தது செய்திலன் என்ற சொல்
உனக்கு அடுப்பது அன்றால் உரவோய் என்றான்
#4
மறையின் கேள்வற்கு மன் இளம் தோன்றல் பின்
முறையின் நீங்கி முது நிலம் கொள்கிலேன்
இறைவன் கொள்கிலன் ஆம் எனின் யாண்டு எலாம்
உறைவென் கானத்து ஒருங்கு உடனே என்றான்
#5
உரைத்த வாசகம் கேட்டலும் உள் எழுந்து
இரைத்த காதல் இரும் தவத்தோர்க்கு எலாம்
குரைத்த மேனியொடு உள்ளம் குளிர்ந்ததால்
அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே
#6
ஆய காதலோடு ஐயனை கொண்டு தன்
தூய சாலை உறைவிடம் துன்னினான்
மேய சேனைக்கு அமைப்பென் விருந்து எனா
தீயின் ஆகுதி செல்வனும் சிந்தித்தான்
#7
துறந்த செல்வன் நினைய துறக்கம்தான்
பறந்து வந்து படிந்தது பல் சனம்
பிறந்து வேறு ஓர் உலகு பெற்றார் என
மறந்து வைகினர் முன்னை தம் வாழ்வு எலாம்
#8
நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என
அந்தரத்தின் அரம்பையர் அன்பினர்
வந்து உவந்து எதிர் ஏத்தினர் மைந்தரை
இந்துவின் சுடர் கோயில் கொண்டு ஏகினார்
#9
நானம் நன்கு உரைத்தார் நளிர் வானிடை
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார்
தான மா மணி கற்பகம் தாங்கிய
ஊனம்_இல் மலர் ஆடை உடுத்தினார்
#10
கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார்
செம்பொனின் கல ராசி திருத்தினார்
அம்பரத்தின் அரம்பையர் அன்பொடும்
உம்பர்_கோன் நுகர் இன் அமுது ஊட்டினார்
#11
அஞ்சு அடுத்த அமளி அலத்தக
பஞ்சு அடுத்த பரிபுர பல்லவ
நஞ்சு அடுத்த நயனியர் நவ்வியின்
துஞ்ச அத்தனை மைந்தரும் துஞ்சினார்
#12
ஏந்து செல்வத்து இமையவர் ஆம் என
கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார்
வேந்தர் ஆதி சிவிகையின் வீங்கு தோள்
மாந்தர்-காறும் வரிசை வழாமலே
#13
மாதர் யாவரும் வானவர் தேவியர்
கோது_இல் செல்வத்து வைகினர் கொவ்வை வாய்
தீது இல் தெய்வ மடந்தையர் சேடியர்
தாதிமார் என தம் பணி கேட்பவே
#14
நந்து நந்தவனங்களில் நாள்_மலர்
கந்தம் உந்திய கற்பக காவில்-நின்று
அந்தர் வந்து என அந்தி தன் கை தர
மந்த மந்த நடந்தது வாடையே
#15
மான்று அளி_குலம் மா மதம் வந்து உண
தேன் தளிர்த்த கவளமும் செம் கதிர்
கான்ற நெல் தழை கற்றையும் கற்பகம்
ஈன்று அளிக்க நுகர்ந்தன யானையே
#16
நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர்
கர கத கரி கால் நிமிர்ந்து உண்டன
மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல்
குரகதத்தின் குழாங்களும் கொண்டவே
#17
இன்னர் இன்னணம் யாவரும் இந்திரன்
துன்னு போகங்கள் துய்த்தனர் தோன்றல்தான்
அன்ன காயும் கிழங்கும் உண்டு அ பகல்
பொன்னின் மேனி பொடி உற போக்கினான்
#18
நீல வல் இருள் நீங்கலும் நீங்குறும்
மூலம் இல் கனவின் திரு முற்றுற
ஏலும் நல்வினை துய்ப்பவர்க்கு ஈறு செல்
காலம் என்ன கதிரவன் தோன்றினான்
#19
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என
பாறி வீந்தது செல்வம் பரிந்திலர்
தேறி முந்தை தம் சிந்தையர் ஆயினார்
மாறி வந்து பிறந்து அன்ன மாட்சியார்
#20
காலை என்று எழுந்தது கண்டு வானவர்
வேலை அன்று அனிகமே என்று விம்முற
சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழ
பாலை சென்று அடைந்தது பரதன் சேனையே
#21
எழுந்தது துகள் அதின் எரியும் வெய்யவன்
அழுந்தினன் அவிப்ப அரும் வெம்மை ஆறினான்
பொழிந்தன கரி மதம் பொடி வெம் கானகம்
இழிந்தன வழி நடந்து ஏற ஒணாமையே
#22
வடி உடை அயில் படை மன்னர் வெண்குடை
செடி உடை நெடு நிழல் செய்ய தீ பொதி
படி உடை பரல் உடை பாலை மேல் உயர்
கொடி உடை பந்தரின் குளிர்ந்தது எங்குமே
#23
பெருகிய செல்வம் நீ பிடி என்றாள்-வயின்
திருகிய சீற்றத்தால் செம்மையான் நிறம்
கருகிய அண்ணலை கண்டு காதலின்
உருகிய தளிர்த்தன உலவை ஈட்டமே
#24
வன் தெறு பாலையை மருதம் ஆம் என
சென்றது சித்திரகூடம் சேர்ந்ததால்
ஒன்று உரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்று என
பொன்றிய புரவலன் பொரு_இல் சேனையே
#25
தூளியின் படலையும் துரகம் தேரொடு
மூள் இரும் சின கரி முழங்கும் ஓதையும்
ஆள் இருள் குழுவினர் ஆரவாரமும்
கோள் இரும் படை இது என்று உணர கூறவே
#26
எழுந்தனன் இளையவன் ஏறினான் நிலம்
கொழுந்து உயர்ந்து அனையது ஓர் நெடிய குன்றின் மேல்
செழும் திரை பரவையை சிறுமை செய்த அ
கழுந்து உடை வரி சிலை கடலை நோக்கினான்
#27
பரதன் இ படை-கொடு பார் கொண்டு ஆள் மறம்
கருதி உள் கிடந்தது ஓர் கறுவு காந்தலால்
விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான் இது
சரதம் மற்று இலது என தழங்கு சீற்றத்தான்
#28
கட்டினன் சுரிகையும் கழலும் பல் கணை
புட்டிலும் பொறுத்தனன் கவசம் பூட்டு அமைத்து
இட்டனன் எடுத்தனன் வரி வில் ஏந்தலை
தொட்டு அடி வணங்கி நின்று இனைய சொல்லினான்
#29
இருமையும் இழந்த அ பரதன் ஏந்து தோள்
பருமையும் அன்னவன் படைத்த சேனையின்
பெருமையும் நின் ஒரு பின்பு வந்த என்
ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ
#30
படர் எலாம் பட படும் பரும யானையின்
திடர் எலாம் உருட்டின தேரும் ஈர்த்தன
குடர் எலாம் திரைத்தன குருதி ஆறுகள்
கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டியால்
#31
கருவியும் கைகளும் கவச மார்பமும்
உருவின உயிரினோடு உதிரம் தோய்வு இல
திரிவன சுடர் கணை திசை கை யானைகள்
வெருவர செய்வன காண்டி வீர நீ
#32
பண் முதிர் களிற்றொடு பரந்த சேனையின்
எண் முதல் அறுத்து நான் இமைப்பின் நீக்கலால்
விண் முதுகு உளுக்கவும் வேலை ஆடையின்
மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல் நீ
#33
நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய்
சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும்
கவந்தமும் உலகம் நின் கையது ஆயது என்று
உவந்தன குனிப்பன காண்டி உம்பர் போல்
#34
சூழி வெம் கட கரி துரக ராசிகள்
பாழி வன் புயத்து இகல் வயவர் பட்டு அற
வீழி வெம் குருதியால் அலைந்த வேலைகள்
ஏழும் ஒன்றாகி நின்று இரைப்ப காண்டியால்
#35
ஆள் அற அலங்கு தேர் அழிய ஆடவர்
வாள் அற வரி சிலை துணிய மா கரி
தாள் அற தலை அற புரவி தாளொடும்
தோள் அற வடி கணை தொடுப்ப காண்டியால்
#36
தழைத்த வான் சிறையன தசையும் கவ்வின
அழைத்த வான் பறவைகள் அலங்கு பொன் வடிம்பு
இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடை
புழைத்த வான் பெரு வழி போக காண்டியால்
#37
ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த
பெருமகன் ஏவலின் பரதன் தான் பெறும்
இரு நிலம் ஆள்கை விட்டு இன்று என் ஏவலால்
அரு நரகு ஆள்வது காண்டி ஆழியாய்
#38
வையகம் துறந்து வந்து அடவி வைகுதல்
எய்தியது உனக்கு என நின்னை ஈன்றவள்
நைதல் கண்டு உவந்தவள் நவையின் ஓங்கிய
கைகயன் மகள் விழுந்து அரற்ற காண்டியால்
#39
அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய்
விரைஞ்சு ஒரு நொடியில் இ அனிக வேலையை
உரம் சுடு வடி கணை ஒன்றில் வென்று மு
புரம் சுடும் ஒருவனின் பொலிவென் யான் என்றான்
#40
இலக்குவ உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ
கலக்குவென் என்பது கருதினால் அது
விலக்குவது அரிது அது விளம்பல் வேண்டுமோ
புலக்கு உரித்து ஒரு பொருள் புகல கேட்டியால்
#41
நம் குலத்து உதித்தவர் நவையின் நீங்கினர்
எங்கு உலப்புறுவர்கள் எண்ணின் யாவரே
தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர்
பொங்கு உல திரளொடும் பொருத தோளினாய்
#42
எனைத்து உள மறை அவை இயம்பல்-பாலன
பனை திரள் கர கரி பரதன் செய்கையே
அனை திறம் அல்லன அல்ல அன்னது
நினைத்திலை என்-வயின் நேய நெஞ்சினால்
#43
பெருமகன் என்-வயின் பிறந்த காதலின்
வரும் என நினைகையும் மண்ணை என்-வயின்
தரும் என நினைகையும் தவிர தானையால்
பொரும் என நினைகையும் புலமை-பாலதோ
#44
பொன்னொடும் பொரு கழல் பரதன் போந்தனன்
நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே
என்னொடும் பொரும் என இயம்பல்-பாலதோ
மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய்
#45
சேண் உயர் தருமத்தின் தேவை செம்மையின்
ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ
பூண் இயல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டு எனை
காணிய நீ இது பின்னும் காண்டியால்
#46
என்றனன் இளவலை நோக்கி ஏந்தலும்
நின்றனன் பரதனும் நிமிர்ந்த சேனையை
பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின்
தன் துணை தம்பியும் தானும் முந்தினான்
#47
தொழுது உயர் கையினன் துவண்ட மேனியன்
அழுது அழி கண்ணினன் அவலம் ஈது என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை
முழுது உணர் சிந்தையான் முடிய நோக்கினான்
#48
கார் பொரு மேனி அ கண்ணன் காட்டினான்
ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய நீ
தேர் பெரும் தானையால் பரதன் சீறிய
போர் பெரும் கோலத்தை பொருந்த நோக்கு எனா
#49
எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன்
மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழுது
சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர
வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே
#50
கோது அற தவம் செய்து குறிப்பின் எய்திய
நாதனை பிரிந்தனன் நலத்தின் நீங்கினாள்
வேதனை திருமகள் மெலிகின்றாள் விடு
தூது என பரதனும் தொழுது தோன்றினான்
#51
அறம்-தனை நினைந்திலை அருளை நீத்தனை
துறந்தனை முறைமையை என்னும் சொல்லினான்
மறந்தனன் மலர் அடி வந்து வீழ்ந்தனன்
இறந்தனன் தாதையை எதிர்கண்டு என்னவே
#52
உண்டு-கொல் உயிர் என ஒடுங்கினான் உரு
கண்டனன் நின்றனன் கண்ணன் கண் எனும்
புண்டரீகம் பொழி புனல் அவன் சடா
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே
#53
அயா_உயிர்த்து அழு கணீர் அருவி மார்பிடை
உயா உற திரு உளம் உருக புல்லினான்
நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான்
தயா முதல் அறத்தினை தழீஇயது என்னவே
#54
புல்லினன் நின்று அவன் புனைந்த வேடத்தை
பல் முறை நோக்கினான் பலவும் உன்னினான்
அல்லலின் அழுங்கினை ஐய ஆள் உடை
மல் உயர் தோளினான் வலியனோ என்றான்
#55
அரியவன் உரை-செய பரதன் ஐய நின்
பிரிவு எனும் பிணியினால் என்னை பெற்ற அ
கரியவள் வரம் எனும் காலனால் தனக்கு
உரிய மெய் நிறுவி போய் உம்பரான் என்றான்
#56
விண்ணிடை அடைந்தனன் என்ற வெய்ய சொல்
புண்ணிடை அயில் என செவி புகா-முனம்
கண்ணொடு மனம் சுழல் கறங்கு போல ஆய்
மண்ணிடை விழுந்தனன் வானின் உம்பரான்
#57
இரு நிலம் சேர்ந்தனன் இறை உயிர்த்திலன்
உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான்
அருமையின் உயிர் வர அயா_உயிர்த்து அகம்
பொருமினன் பல் முறை புலம்பினான்-அரோ
#58
நந்தா விளக்கு அனைய நாயகனே நானிலத்தோர்
தந்தாய் தனி அறத்தின் தாயே தயா நிலையே
எந்தாய் இகல் வேந்தர் ஏறே இறந்தனையே
அந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரே மற்று என்றான்
#59
சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி
நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி
என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ
கொல் பெற்ற வெற்றி கொலை பெற்ற கூர் வேலோய்
#60
மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க
பொன் உயிர்க்கு தாரோய் பொறை உயிர்த்த ஆறு இதுவோ
உன் உயிர்க்கு கூற்றாய் உலகு ஆள உற்றேனோ
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய்
#61
எம் பரத்தது ஆக்கி அரசு உரிமை இந்தியங்கள்
வெம் பவத்தின் வீய தவம் இழைத்தவாறு இதுவோ
சம்பர பேர் தானவனை தள்ளி சதமகற்கு அன்று
அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய்
#62
வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி
பூண்டு இ உலகுக்கு இடர் கொடுத்த புல்லனேன்
மாண்டு முடிவது அல்லால் மாயா உடம்பு இது கொண்டு
ஆண்டு வருவது இனி யார் முகத்தே நோக்கவோ
#63
தேன் அடைந்த சோலை திரு நாடு கைவிட்டு
கான் அடைந்தேன் என்ன தரியாது காவல நீ
வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய்
#64
வண்மையும் மானமும் மேல் வானவர்க்கும் பேர்க்ககிலா
திண்மையும் செங்கோல் நெறியும் திறம்பாத
உண்மையும் எல்லாம் உடனே கொண்டு ஏகினையே
தண்மை தகை மதிக்கும் ஈந்த தனி குடையோய்
#65
என்று எடுத்து பற்பலவும் பன்னி இடர் உழக்கும்
குன்று எடுத்த போலும் குலவு தோள் கோளரியை
வன் தட கை தம்பியரும் வந்து அடைந்த மன்னவரும்
சென்று எடுத்து தாங்கினார் மா வதிட்டன் தேற்றினான்
#66
பன்ன_அரிய நோன்பின் பரத்துவனே ஆதி ஆம்
பின்னு சடையோரும் பேர் உலகம் ஓர் ஏழின்
மன்னவரும் மந்திரியர் எல்லாரும் வந்து அடைந்தார்
தன் உரிமை சேனை தலைவோரும்தாம் அடைந்தார்
#67
மற்றும் வரல்-பாலர் எல்லாரும் வந்து அடைந்து
சுற்றும் இருந்த அமைதியினில் துன்பு உழக்கும்
கொற்ற குரிசில் முகம் நோக்கி கோ மலரோன்
பெற்ற பெருமை தவ முனிவன் பேசுவான்
#68
துறத்தலும் நல் அற துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை பொருந்தும் மன் உயிர்க்கு
இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதே
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ
#69
உண்மை_இல் பிறவிகள் உலப்பு_இல் கோடிகள்
தண்மையில் வெம்மையில் தழுவின எனும்
வண்மையை நோக்கிடா அரிய கூற்றின்-பால்
கண்மையும் உளது என கருதல் ஆகுமோ
#70
பெறுவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால்
மறு அது கற்பினில் வையம் யாவையும்
அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன்
இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ
#71
சீலமும் தருமமும் சிதைவு_இல் செய்கையாய்
சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும்
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ
#72
கண் முதல் காட்சிய கரை_இல் நீளத்த
உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன
மண் முதல் பூதங்கள் மாயும் என்ற போது
எண் முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ
#73
புண்ணிய நறு நெயில் பொரு_இல் காலம் ஆம்
திண்ணிய திரியினில் விதி என் தீயினில்
எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால்
அண்ணலே அவிவதற்கு ஐயம் யாவதோ
#74
இ உலகத்தினும் இடருளே கிடந்து
அ உலகத்தினும் நரகின் ஆழ்ந்து பின்
வெம் வினை துய்ப்பன விரிந்த யோனிகள்
எ அளவில் செல எண்ணல் ஆகுமோ
#75
உண்டு-கொல் இது அலது உதவி நீ செய்வது
எண் தகு குணத்தினாய் தாதை என்றலால்
புண்டரீக தனி முதற்கும் போக்கு_அரு
விண்டுவின் உலகிடை விளங்கினான்-அரோ
#76
ஐய நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ
செய்வன வரன் முறை திருத்தி சேந்த நின்
கையினால் ஒழுக்குதி கடன் எலாம் என்றான்
#77
விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கையை
எண்ணி நீ அழுங்குதல் இழுதை-பாலதால்
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை போய்
மண்ணு நீர் உகுத்தி நீ மலர்க்கையால் என்றான்
#78
என்ற பின் ஏந்தலும் எழுந்து நான்மறை
பொன் திணிந்தன சடை புனிதனோடும் போய்
சென்றனர் செறி திரை புனலில் செய்க என
நின்றனர் இராமனும் நெறியை நோக்கினான்
#79
புக்கனன் புனலிடை முழுகி போந்தனன்
தக்க நல் மறையவன் சடங்கு காட்ட தான்
மு கையின் நீர் விதி முறையின் ஈந்தனன்
ஒக்க நின்று உயிர்-தொறும் உணர்வு நல்குவான்
#80
ஆனவன் பிற உள யாவும் ஆற்றி பின்
மான மந்திரத்தவர் மன்னர் மா தவர்
ஏனையர் பிறர்களும் சுற்ற ஏகினன்
சானகி இருந்த அ சாலை எய்தினான்
#81
எய்திய வேலையில் தமியள் எய்திய
தையலை நோக்கினன் சாலை நோக்கினான்
கைகளின் கண்_மலர் புடைத்து கால் மிசை
ஐயன் அ பரதன் வீழ்ந்து அரற்றினான்-அரோ
#82
வெம் துயர் தொடர்தர விம்மி விம்மி நீர்
உந்திய நிரந்தரம் ஊற்று மாற்றில
சிந்திய குரிசில் அ செம்மல் சேந்த கண்
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே
#83
அ நெடும் துயர் உறும் அரிய வீரனை
தன் நெடும் தட கையால் இராமன் தாங்கினான்
நல் நெடும் கூந்தலை நோக்கி நாயகன்
என் நெடும் பிரிவினால் துஞ்சினான் என்றான்
#84
துண்ணெனும் நெஞ்சினாள் துளங்கினாள் துணை
கண் எனும் கடல் நெடும் கலுழி கான்றிட
மண் எனும் செவிலி மேல் வைத்த கையினாள்
பண் எனும் கிளவியால் பன்னி ஏங்கினாள்
#85
கல் நகு திரள் புய கணவன் பின் செல
நல் நகர் ஒத்தது நடந்த கானமும்
மன்னவன் துஞ்சினன் என்ற மாற்றத்தால்
அன்னமும் துயர் கடல் அடிவைத்தாள்-அரோ
#86
ஆயவள்-தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர்
தாயரின் முனிவர்-தம் தரும பன்னியர்
தூய நீர் ஆட்டினர் துயரம் நீக்கினர்
நாயகன் சேர்த்தினர் நவையுள் நீங்கினார்
#87
தேன் தரும் தெரியல் அ செம்மல் நால்வரை
ஈன்றவர் மூவரோடு இருமை நோக்குறும்
சான்றவர் குழாத்தொடும் தருமம் நோக்கிய
தோன்றல்-பால் சுமந்திரன் தொழுது தோன்றினான்
#88
எந்தை யாண்டையான் இயம்புவீர் எனா
வந்த தாயர்-தம் வயங்கு சேவடி
சிந்தி நின்றனன் சேந்த கண்ண நீர்
முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான்
#89
தாயரும் தலைப்பெய்து தாம் தழீஇ
ஓய்வு_இல் துன்பினால் உரறல் ஓங்கினார்
ஆய சேனையும் அணங்கு அனார்களும்
தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார்
#90
பின்னர் வீரரை பெற்ற பெற்றி அ
பொன் அனார்களும் சனகன் பூவையை
துன்னி மார்பு உற தொடர்ந்து புல்லினார்
இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார்
#91
சேனை வீரரும் திரு நல் மா நகர்
மான மாந்தரும் மற்றுளோர்களும்
ஏனை வேந்தரும் பிறரும் யாவரும்
கோனை எய்தினார் குறையும் சிந்தையார்
#92
படம் செய் நாகணை பள்ளி நீங்கினான்
இடம் செய் தொல் குலத்து இறைவன் ஆதலால்
தடம் செய் தேரினான் தானும் நீரினால்
கடம் செய்வான் என கடலில் மூழ்கினான்
#93
அன்று தீர்ந்த பின் அரச வேலையும்
துன்று செம் சடை தவரும் சுற்றமும்
தன் துணை திரு தம்பிமார்களும்
சென்று சூழ ஆண்டு இருந்த செம்மல்தான்
#94
வரதன் துஞ்சினான் வையம் ஆணையால்
சரதம் நின்னதே மகுடம் தாங்கலாய்
விரத வேடம் நீ என்-கொல் வேண்டினாய்
பரத கூறு எனா பரிந்து கூறினான்
#95
என்றலும் பதைத்து எழுந்து கைதொழா
நின்று தோன்றலை நெடுது நோக்கி நீ
அன்றி யாவரே அறத்து உளோர் அதில்
பின்றுவாய்-கொலாம் என்ன பேசுவான்
#96
மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும்
நினக்கு ஒன்றா நிலை நிறுவி நேமியான்
தனை கொன்றாள் தரும் தனையன் ஆதலால்
எனக்கு ஒன்றா தவம் அடுப்பது எண்ணினால்
#97
நோவது ஆக இ உலகை நோய் செய்த
பாவகாரியின் பிறந்த பாவியேன்
சாவது ஓர்கிலேன் தவம் செய்வேன் அலேன்
யாவன் ஆகி இ பழி-நின்று ஏறுவேன்
#98
நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும்
பொறையின் நீங்கிய தவமும் பொங்கு அருள்
துறையின் நீங்கிய அறமும் தொல்லையோர்
முறையின் நீங்கிய அரசின் முந்துமோ
#99
பிறந்து நீ உடை பிரிவு_இல் தொல் பதம்
துறந்து மா தவம் தொடங்குவாய் என்றால்
மறந்து நீதியின் திறம்பி வாளின் கொன்று
அறம் தின்றான் என அரசு அது ஆள்வெனோ
#100
தொகை_இல் அன்பினால் இறைவன் துஞ்ச நீ
புகையும் வெம் சுரம் புகுத புந்தியால்
வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ யான்
பகைவனே-கொலாம் இறவு பார்க்கின்றேன்
#101
உந்தை தீமையும் உலகு உறாத நோய்
தந்த தீவினை தாய் செய் தீமையும்
எந்தை நீங்க மீண்டு அரசு செய்க எனா
சிந்தை யாவதும் தெரிய கூறினான்
#102
சொற்ற வாசக துணிவு உணர்ந்த பின்
இற்றதோ இவன் மனம் என்று எண்ணுவான்
வெற்றி வீர யான் விளம்ப கேள் எனா
முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான்
#103
முறையும் வாய்மையும் முயலும் நீதியும்
அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம்
துறையுள் யாவையும் சுருதி நூல் விடா
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால்
#104
பரவு கேள்வியும் பழுது_இல் ஞானமும்
விரவு சீலமும் வினையின் மேன்மையும்
உர விலோய் தொழற்கு உரிய தேவரும்
குரவரே என பெரிது கோடியால்
#105
அந்த நல் பெரும் குரவர் ஆர் என
சிந்தை தேர்வு உற தெரிய நோக்கினால்
தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால்
எந்தை கூற வேறு எவரும் இல்லையால்
#106
தாய் வரம் கொள தந்தை ஏவலால்
மேய நம் குல தருமம் மேவினேன்
நீ வரம் கொள தவிர்தல் நீர்மையோ
ஆய்வு அரும் புலத்து அறிவு மேவினாய்
#107
தனையர் ஆயினார் தந்தை தாயரை
வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ
நினையல் ஓவிடா நெடிய வன் பழி
புனைதலோ ஐய புதல்வர் ஆதல்தான்
#108
இம்மை பொய் உரைத்து இவறி எந்தையார்
அம்மை வெம்மை சேர் நரகம் ஆள யான்
கொம்மை வெம் முலை குவையின் வைகி வாழ்
செம்மை சேர் நிலத்து அரசு செய்வெனோ
#109
வரன் நில் உந்தை சொல் மரபினால் உடை
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால்
அரசு நின்னதே ஆள்க என்னவே
#110
முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றினும்
நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார்
என்னது ஆகில் யான் இன்று தந்தனென்
மன்ன போந்து நீ மகுடம் சூடு எனா
#111
மலங்கி வையகம் வருந்தி வைக நீ
உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ
கலங்குறா-வணம் காத்தி போந்து எனா
பொலம் குலாவு தாள் பூண்டு வேண்டினான்
#112
பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என்
வசம் செய்தால் அது முறைமையோ வசைக்கு
அசைந்த எந்தையார் அருள அன்று நான்
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ
#113
வாய்மை என்னும் ஈது அன்றி வையகம்
தூய்மை என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ
தீமைதான் அதின் தீர்தல் அன்றியே
ஆய் மெய்யாக வேறு அறையல் ஆவதே
#114
எந்தை ஏவ ஆண்டு ஏழொடு ஏழ் எனா
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ
தந்த பாரகம் தன்னை மெய்ம்மையால்
அந்த நாள் எலாம் ஆள் என் ஆணையால்
#115
மன்னவன் இருக்கவேயும் மணி அணி மகுடம் சூடுக
என்ன யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி
அன்னது நினைந்தும் நீ என் ஆணையை மறுக்கலாமோ
சொன்னது செய்தி ஐய துயர் உழந்து அயரல் என்றான்
#116
ஒள்ளியோன் இனைய எல்லாம் உரைத்தலும் உரைக்கலுற்ற
பள்ள நீர் வெள்ளம் அன்ன பரதனை விலக்கி பண்டு
தெள்ளிய குலத்தோர் செய்கை சிக்கு_அற சிந்தை நோக்கி
வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான்
#117
கிளர் அகன் புனலுள் நின்று அரி ஒர் கேழல் ஆய்
இளை எனும் திருவினை ஏந்தினான்-அரோ
உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை
வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே
#118
ஆதிய அமைதியின் இறுதி ஐம் பெரும்
பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்க பின்
நாதன் அ அகன் புனல் நல்கி நண்ண அரும்
சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான்
#119
ஏற்ற இ தன்மையின் அமரர்க்கு இன் அமுது
ஊற்றும் அ கடவுள்-தன் உந்தி உந்திய
நூற்று இதழ் கமலத்தில் நொய்தின் யாவையும்
தோற்றுவித்து உதவிட முதல்வன் தோன்றினான்
#120
அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது
உன் தனி குலம் முதல் உள்ள வேந்தர்கள்
இன்று அளவினும் முறை இகந்துளார் இலை
ஒன்று உளது உரை இனம் உணர கேட்டியால்
#121
இத இயல் இயற்றிய குரவர் யாரினும்
மத இயல் களிற்றினாய் மறு_இல் விஞ்சைகள்
பதவிய இருமையும் பயக்க பண்பினால்
உதவிய ஒருவனே உயரும் என்பரால்
#122
என்றலால் யான் உனை எடுத்து விஞ்சைகள்
ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால்
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான்
#123
கூறிய முனிவனை குவிந்த தாமரை
சீறிய கைகளால் தொழுது செங்கணான்
ஆறிய சிந்தனை அறிஞ ஒன்று உரை
கூறுவது உளது என கூறல் மேயினான்
#124
சான்றவர் ஆக தன் குரவர் ஆக தாய்
போன்றவர் ஆக மெய் புதல்வர் ஆக தான்
தேன் தரு மலருளான் சிறுவ செய்வென் என்று
ஏன்றபின் அ உரை மறுக்கும் ஈட்டதோ
#125
தாய் பணித்து உவந்தன தந்தை செய்க என
ஏய எ பொருள்களும் இறைஞ்சி மேற்கொளா
தீய அ புலையனின் செய்கை தேர்கிலா
நாய் என திரிவது நல்லது அல்லதோ
#126
முன் உற பணித்தவர் மொழியை யான் என
சென்னியில் கொண்டு அது செய்வென் என்றதன்
பின்னுற பணித்தனை பெருமையோய் எனக்கு
என் இனி செய்வகை உரை-செய் ஈங்கு என்றான்
#127
முனிவனும் உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம்
இனி என இருந்தனன் இளைய மைந்தனும்
அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு நான்
பனி படர் காடு உடன் படர்தல் மெய் என்றான்
#128
அ வழி இமையவர் அறிந்து கூடினார்
இ வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல்
செம் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார்
கவ்வையர் விசும்பிடை கழறல் மேயினார்
#129
ஏத்த_அரும் பெரும் குணத்து இராமன் இ வழி
போத்தரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான்
ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அ நிலம்
காத்தல் உன் கடன் இவை கடமை என்றனர்
#130
வானவர் உரைத்தலும் மறுக்கல்-பாலது அன்று
யான் உனை இரந்தனென் இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின் அளித்தி பார் எனா
தான் அவன் துணை மலர் தட கை பற்றினான்
#131
ஆம் எனில் ஏழ் இரண்டு ஆண்டில் ஐய நீ
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம்
கோ முறை புரிகிலை என்னின் கூர் எரி
சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன்
#132
என்பது சொல்லிய பரதன் யாதும் ஓர்
துன்பு இலன் அவனது துணிவை நோக்கினான்
அன்பினன் உருகினன் அன்னது ஆக என்றான்
தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான்
#133
விம்மினன் பரதனும் வேறு செய்வது ஒன்று
இன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான்
செம்மையின் திருவடித்தலம் தந்தீக என
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்
#134
அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்
முடித்தலம் இவை என முறையின் சூடினான்
படித்தலத்து இறைஞ்சினன் பரதன் போயினான்
பொடி தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்
#135
ஈன்றவர் முதலிய எண்_இல் சுற்றமும்
சான்றவர் குழுவொடு தவத்துளோர்களும்
வான் தரு சேனையும் மற்றும் சுற்றுற
மூன்று நூல் கிடந்த தோள் முனியும் போயினான்
#136
பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான்
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார்
விண்டு உறை தேவரும் விலகி போயினார்
கொண்டல்-தன் ஆணையால் குகனும் போயினான்
#137
பாதுகம் தலை கொடு பரதன் பைம் புனல்
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான்
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன்
ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான்
#138
நந்தி அம் பதியிடை நாதன் பாதுகம்
செம் தனி கோல் முறை செலுத்த சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்
#139
குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால்
நின்றவர் நலிவரால் நேயத்தால் எனா
தன் துணை தம்பியும் தானும் தையலும்
தென் திசை நெறியினை சேறல் மேயினான்


Ayodhya Kandam Overview

Preparations for Rama’s Coronation:

The Ayodhya Kandam begins with King Dasaratha deciding to coronate Rama as the crown prince of Ayodhya. This decision is met with joy and approval by the people of Ayodhya, as Rama is universally loved and respected.
Preparations for the coronation begin in full swing, with the entire city decorated and people eagerly awaiting the ceremony.

Kaikeyi’s Demand:

However, Manthara, a maidservant of Queen Kaikeyi, poisons her mind against Rama's coronation. She reminds Kaikeyi of the two boons King Dasaratha had promised her long ago.
Manipulated by Manthara, Kaikeyi demands that Dasaratha fulfill these boons: the first is to banish Rama to the forest for 14 years, and the second is to crown her son Bharata as the king instead of Rama.
Dasaratha is heartbroken but is bound by his promise to Kaikeyi. He reluctantly agrees to her demands.

Rama’s Exile:

When Rama learns of Kaikeyi's demands, he willingly agrees to the exile, accepting it as his duty to uphold his father’s promise. His calm and composed acceptance of this harsh fate is a testament to his adherence to dharma.
Sita, Rama's wife, insists on accompanying him to the forest despite his attempts to dissuade her. Lakshmana, Rama’s devoted brother, also decides to go with them, unable to bear the thought of being separated from Rama.
The three of them bid farewell to the people of Ayodhya and leave for the forest.

Dasaratha’s Grief and Death:

King Dasaratha is devastated by Rama’s departure. He is consumed with guilt and sorrow, unable to bear the separation from his beloved son.
Shortly after Rama leaves, Dasaratha passes away, overwhelmed by his grief. The people of Ayodhya mourn the loss of their king.

Bharata’s Return and Reaction:

Bharata, who was away during these events, returns to Ayodhya only to find out what has transpired. He is horrified by his mother Kaikeyi’s actions and refuses to accept the throne.
Bharata goes to the forest to bring Rama back and plead with him to return to Ayodhya and take his rightful place as king. However, Rama, bound by his duty, refuses to return until the 14 years of exile are completed.
As a compromise, Bharata takes Rama’s sandals and places them on the throne, ruling Ayodhya as Rama’s representative, vowing to return the kingdom to Rama after the exile.

Life in the Forest:

Meanwhile, Rama, Sita, and Lakshmana begin their life in the forest, moving from one place to another, and adapting to the hardships of an ascetic life. This part of the epic sets the stage for the encounters and challenges they will face in the forest.

Significance of Ayodhya Kandam

Dharma and Sacrifice: Ayodhya Kandam is central to the Ramayana's exploration of dharma. Rama's willingness to give up the throne and go into exile to uphold his father’s word is a profound example of sacrifice and adherence to duty.
Family and Loyalty: The book also delves deeply into the dynamics of family relationships, loyalty, and the consequences of jealousy and manipulation. Bharata’s refusal to take the throne highlights his deep respect and love for his brother.

Moral Lessons: The characters' actions in Ayodhya Kandam provide moral lessons on the importance of righteousness, selflessness, and the fulfillment of one's duties, regardless of personal loss or hardship.

Ayodhya Kandam is a critical section of the Kamba Ramayanam that sets the stage for the subsequent events of the epic, particularly the challenges that Rama, Sita, and Lakshmana will face during their exile.



Share



Was this helpful?