இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


கல்யாண சுந்தர மூர்த்தி

Kalyana Sundara Murthy (கல்யாண சுந்தர மூர்த்தி) is a form of Lord Shiva that emphasizes his aspect as a divine bridegroom. The term "Kalyana" means "auspicious" or "married," and "Sundara" means "beautiful." This form of Shiva represents his role as the ideal husband and the embodiment of divine beauty and grace, especially in the context of his marriage to Parvati (also known as Uma or Gauri).


கல்யாண சுந்தர மூர்த்தி

திருக்கைலையில் அனைத்து தேவர்குழாமுடன் சிவபெருமான் வீற்றிருக்கையில் பார்வதி தேவியார் எழுந்து இறைமுன் சென்று தக்கன் மகளால் தாட்சாயிணி என்ற பெயர் பெற்றேன். அந்த அவப்பெயரை மாற்ற தங்கள் தயவு வேண்டும் என்றார். உடன் சிவபெருமானும் பார்வதி பர்வத மன்னன் உன்னை மகளாக அடைய தவம் இயற்றுகிறான். நீ அவரிடம் குழந்தையாக பிறப்பாயாக. பிறகு உன்னை நான் மணமுடிப்பேன் என்றார்.

அதன்படி பர்வத மன்னரிடம் மூன்று வயதுள்ள குழந்தையாக வந்து சேர்ந்தார். அக்குழந்தையை அவர்கள் சீராட்டி வளர்த்தனர். பார்வதிதேவி அருகில் இல்லாததால் சிவபெருமான் யோகத்தில் இருந்தார். அதனால் உலக இயக்கம் ஸ்தம்பித்தது. உடன் தேவர்களின் ஆலோசனைப்படி மன்மதன் சிவபெருமானின் யோகத்தைக் கலைக்க பாணம் விட்டார். இதனால் கோபமுற்ற சிவபெருமான் அவரை நெற்றிக் கண்ணால் எரித்தார். இதனால் கவலையுற்ற ரதி சிவனிடம் சரணடைந்தார். அவரும் பொருத்திருக்கச் சொன்னார்.

இதற்கிடையே பர்வத ராஜனிடம் வளரும் பார்வதிதேவி சிவனை மணாளனாக அடைய வேண்டித் தவமிருந்தார். பார்வதி முன் அந்தணராகத் தோன்றி தன்னை மணம் புரியும் படி வேண்டினார். பார்வதி அதை மறுத்து சிவபெருமானை மணம் செய்யவே தான் தவமிருப்பதாகக் கூறினார். உடன் அந்தண வேடம் கலைந்து இடபத்துடன் சிவபெருமான் காட்சிக்கொடுத்தார். விரைவில் வந்து மணம் புரிவேன் என்று கூறி மறைந்தார்.

பார்வதி தேவி தன் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார். அங்கே சிவபெருமான் சப்தரிஷிகளிடம் தனக்கு மலையரசன் மகளை மணம் பேசச் சொன்னார். இருவீட்டாரும் பேசி திருமணத்திற்கு நாள் குறித்தனர். பங்குனி உத்திர தினம் மணநாளாக குறிக்கப்பட்டது. தேவருலகத்தினர் படைசூழ சிவபெருமான் பர்வதம் விரைந்தார். அனைவரும் அங்கே குவிந்ததால் வடதிசை தாழ்ந்தது. உடன் சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை சென்று நிற்கும் படி வேண்டினார். அவர் தயங்கவும் உமக்கு எம் திருமணக்கோலத்தை காட்டுவோம் எனவே தென்திசை செல்க என்று பணிந்தார். அகத்தியரும் அவ்வாறு சென்றார். உடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்பொழுது ரதி தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டினார்.

சிவபெருமானும் அவ்வாறே மன்மதனை உயிர்ப்பித்தார். பின் ரதியின் கண்களுக்கு மட்டும் உருவத்துடனும், மற்றொர்க்கு அருபமாகவும் காட்சியளிக்கும் படி வேண்டினார். பின் அவரவர், அவரவர் இருப்பிடம் திரும்பினர். பார்வதி தேவியை திருமணம் செய்ய சிவபெருமான் எடுத்த கோலமே கல்யாண சுந்தர மூர்த்தியாகும். அவரை தரிசிக்க தாம் செல்ல வேண்டிய தலம் திருவாரூர் அருகேயுள்ள திருவீழிமலையாகும்.

இங்கு மூலவர் பெயர் விழியழகர், இறைவி பெயர் சுந்தர குஜாம்பிகை யாகும். இங்கு உற்சவ மூர்த்தியாக கல்யாண சுந்தரர் காட்சியளிக்கிறார். இங்குள்ள கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்த மாங்கல்யத்தை தானமாகப் பெற, கொடுக்க திருமணம் தங்குதடையின்றி நடைபெறும். மேலும் பிரதோஷ தரிசனமும் சிறப்பானதாகும். மல்லிகைப்பூ அர்ச்சனையும், சர்க்ககரைப் பொங்கல் நைவேத்தியமும் திங்கள், குருவாரங்களில் கொடுக்க திருமணத்தடை விலகும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். மேலுமொரு சிறப்பாக கல்யாண சுந்தரருக்கு ரோஜாமாலை அணிவித்துப் பூச்செண்டு கொடுத்தால் கல்யாணம் இளம்பெண்களுக்கு கூடி வரும். இங்குள்ள மூலவரின் பின் புறம் சிவபெருமான் உமை திருமணக்கோலம் உள்ளது.


Legend of Kalyana Sundara Murthy:
Marriage to Parvati:

Kalyana Sundara Murthy is closely associated with the divine marriage of Shiva and Parvati, which is one of the most celebrated events in Hindu mythology. Their union symbolizes the harmony and balance between the divine masculine and feminine energies.

Celebration of Marriage:

The marriage of Shiva and Parvati is considered an auspicious event, celebrated with great devotion and joy. It signifies the coming together of cosmic forces to create harmony in the universe.

Features of Kalyana Sundara Murthy:
Divine Groom:

In this form, Shiva is depicted as a radiant and handsome groom, adorned with exquisite ornaments and dressed in fine attire. His appearance is graceful and serene, reflecting the joy and sanctity of his union with Parvati.

Iconography:

Shiva is shown wearing beautiful garments and jewelry, often with a gentle and loving expression. He may be depicted with Parvati, symbolizing their marital union. In some representations, the couple is shown seated together, embodying divine love and harmony.

Shiva’s traditional symbols, such as the trident (Trishul) and damaru (drum), might be present, but he is depicted in a more serene and regal manner compared to his other forms.

Auspicious Symbols:

Kalyana Sundara Murthy often includes symbols of auspiciousness, such as flowers, garlands, and decorative elements associated with a wedding. This highlights the celebratory and sacred nature of Shiva's role as a divine bridegroom.

Symbolism of Kalyana Sundara Murthy:
Divine Union:

The depiction of Shiva as Kalyana Sundara Murthy represents the ideal union of divine energies—masculine and feminine, which is essential for cosmic balance and harmony.

Beauty and Grace:

The form highlights the beauty and grace of the divine. It symbolizes the idea that divinity encompasses not only power but also aesthetics, love, and compassion.

Auspiciousness and Blessings:

Kalyana Sundara Murthy represents auspiciousness and divine blessings. Worshipping this form of Shiva is believed to bring harmony in relationships, prosperity, and the fulfillment of desires.

Significance in Hinduism:
Marriage and Relationships:

Devotees often worship Kalyana Sundara Murthy to seek blessings for harmonious marriages and successful relationships. The form embodies the ideal qualities of love, commitment, and mutual respect.

Celebration of Harmony:

The divine marriage of Shiva and Parvati is celebrated as a symbol of perfect harmony and unity. This form of Shiva reminds devotees of the importance of balance and unity in their own lives.

Auspicious Occasions:

Festivals and ceremonies celebrating divine unions often include worship of Kalyana Sundara Murthy. This form is especially revered during auspicious occasions related to weddings and new beginnings.

Worship and Depictions:
Temples and Icons:

Kalyana Sundara Murthy may be depicted in various temples dedicated to Shiva and Parvati, especially those emphasizing their marital harmony. Temples may feature images of the divine couple in their wedding attire or together in a serene and loving posture.

Devotional Practices:

Devotees may perform special rituals, offer flowers and garlands, and recite hymns dedicated to Kalyana Sundara Murthy to seek blessings for marital bliss and harmony. Offerings may also include sweets and other items associated with festive celebrations.

Conclusion:

Kalyana Sundara Murthy represents Lord Shiva in his aspect as the divine and auspicious bridegroom. This form highlights the beauty, grace, and harmony of his union with Parvati, symbolizing the perfect balance of divine energies. Worshipping Kalyana Sundara Murthy is associated with seeking blessings for relationships, celebrating harmony, and embracing the divine qualities of love and unity.



Share



Was this helpful?