Latest Blogs



மடையில் வாளைபாய - பாடல் 9

மடையில் வாளைபாய - பாடல் 9 நாற்றம் மலர் மேல் அயனும் நாகத்தில் ஆற்றல் அணை மேலவனும் காண்கிலாக் கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினேவிளக்கம்:நாற்றம்=நறுமணம்;பொழிப்புரை:நறுமணம் மிகுந்த தாமரை மேல் உறையும் பிரமனும், ஆற்றல் மிகுந்த ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்டு கிடக்கும் திருமாலும் காண இயலாமல் நின்றவனும், காலனை ...

மடையில் வாளைபாய - பாடல் 8

மடையில் வாளைபாய - பாடல் 8 எறியார் கடல் சூழ் இலங்கைக் கோன் தனை முறியார் தடக்கை அடர்த்த மூர்த்தி தன் குறியார் பண் செய் கோலக்காவையே நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமேவிளக்கம்:எறியார் கடல்=அலைகள் எறியும் கடல்; தடக்கை=அகன்ற கைகள், இங்கே தோள்கள் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும்.பொழிப்புரை:உயரமான அலைகள் பலவற்றை வீசி ...

மடையில் வாளைபாய - பாடல் 7

மடையில் வாளைபாய - பாடல் 7 நிழலார் சோலை நீல வண்டினம் குழலார் பண் செய் கோலக்கா உளான் கழலால் மொய்த்த பாதம் கைகளால் தொழுவார் பக்கல் துயரம் இல்லையேவிளக்கம்:மொய்த்த=சேர்ந்த; தொழுவார் பக்கல் என்ற தொடருக்கு இறைவனைத் தொழும் அடியார்களைச் சார்ந்து இருக்கும் மனிதர்கள் என்று பொருள் கொண்டு, அவர்களுக்கும் துயரங்கள் இருக்காது ...

மடையில் வாளைபாய - பாடல் 6

மடையில் வாளைபாய - பாடல் 6 வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் கடிகொள் கொன்றை கலந்த சென்னியான் கொடிகொள் விழவார் கோலக்காவுள் எம் அடிகள் பாதம் அடைந்து வாழ்மினேவிளக்கம்:வெடிகொள் வினை=ஒரு வினையிலிருந்து மற்றொரு வினை கிளைத்தெழும் நிலை; நாம் பழைய பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள வினைகளின் தன்மையால் இந்த பிறவியில் இன்பங்களையும் ...

மடையில் வாளைபாய - பாடல் 5

மடையில் வாளைபாய - பாடல் 5 மயிலார் சாயல் மாதோர் பாகமா எயிலார் சாய எரித்த எந்தை தன் குயிலார் சோலைக் கோலக்காவையே பயிலா நிற்கப் பறையும் பாவமேவிளக்கம்:இறைவனின் அழகினை மூன்றாவது பாடலில் பாடிய சம்பந்தர், இங்கே இறைவியின் அழகை நினைத்து மயில் போன்ற சாயல் உடைய மாது என்று கூறுகின்றார். எந்த ...

மடையில் வாளைபாய - பாடல் 4

மடையில் வாளைபாய - பாடல் 4 தழுக்கொள் பாவம் தளர வேண்டுவீர் மழுக்கொள் செல்வன் மறி சேர் செங்கையன் குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினேவிளக்கம்:தழுக்கொள் பாவம்=உயிரினை உறுதியாக பற்றிக் கொண்டிருக்கும் தீய வினைகளும் அவைகளால் ஏற்படும் தீமைகளும்; மறி=மான் கன்று; இழுக்கா வண்ணம்=தவறாத வண்ணம்;பொழிப்புரை:மனிதர்களே, உங்களை இறுகப் ...

மடையில் வாளைபாய - பாடல் 3

மடையில் வாளைபாய - பாடல் 3 பூணல் பொறி கொள் அரவம் புன்சடை கோணல் பிறையன் குழகன் கோலக்கா மாணப் பாட மறை வல்லானையே பேணப் பறையும் பிணிகள் ஆனவேவிளக்கம்:பிணிகள்=பிறவியினால் வரும் கேடுகள்; குழகன் என்று இறைவனை சம்பந்தர் கூறுகின்றார். குழகன் என்றால் அழகன் என்று பொருள். தனது முதல் பதிகத்தில் இளநாகம் ...

மடையில் வாளைபாய - பாடல் 2

மடையில் வாளைபாய - பாடல் 2 பெண் தான் பாகமாகப் பிறைச் சென்னி கொண்டான் கோலக்காவு கோயிலாக் கண்டான் பாதம் கையால் கூப்பவே உண்டான் நஞ்சை உலகம் உய்யவேவிளக்கம்:இறைவன் இருக்கும் நிலையினை முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், பெருமானுடன் இணை பிரியாது இருக்கும் தேவியின் நிலையினை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பெண்மையை மதித்து ...

மடையில் வாளைபாய - பாடல் 1

மடையில் வாளைபாய - பாடல் 1 மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கை கோலக்கா உளான் சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள் உடையும் கொண்ட உருவம் என் கொலோவிளக்கம்:மடை=வாய்க்கால்களில் நீரைத் தேக்கி வைத்து, அந்த வாய்க்கால்களில் மடைகள் கட்டி தேவையான வயல்களுக்கு ஆற்றுநீரினை பாய்ச்சுவது வழக்கம்; இவ்வாறு மடைகளால் ...

மடையில் வாளைபாய - பின்னணி

மடையில் வாளைபாயதோடுடைய செவியன் என்றும் நறவநிறை வண்டு என்றும் தொடங்கும் பதிகங்களை பாடிய தனக்கு ஞானப்பால் அருளிய அன்னையையும், அதற்கு காரணமாக இருந்த தந்தையரையும் நினைத்தவாறே அன்றிரவு உறங்கிய திருஞானசம்பந்தர் அடுத்த நாள் பொழுது விடிந்ததும் திருக்கோயிலுக்கு சென்று தனது தந்தையும் தாயும் ஆகிய பெருமானையும் பிராட்டியையும் வணங்கினார் என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். பின்னர் அவர்கள் இருவரையும் வணங்கிய பின்னர் அருகிலுள்ள திருக்கோலக்கா தலம் சென்று ஆங்குள்ள இறைவனை ...